ஜூன் 10-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 45; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 19 பாரா. 12-20, பெட்டி பக். 152 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 1-4 (10 நிமி.)
எண் 1: அப்போஸ்தலர் 1:15-2:4 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மீட்கும்பலியின் பலனாக என்ன எதிர்கால ஆசீர்வாதங்களை அனுபவிப்பர்?—நியாயங்காட்டி பக். 310 பாரா. 1-4 (5 நிமி.)
எண் 3: பெரும்பாலான மக்களின் சிந்தனை ஏன் ஒரு விஷக்காற்றைப் போல் இருக்கிறது?—எபே. 2:1, 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: கண்களைப் பார்த்துப் பேசுவதன் முக்கியத்துவம். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 124 பாரா 1-லிருந்து பக்கம் 125 பாரா 4 வரையிலுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. ஒரு பிரஸ்தாபி வீட்டுக்காரரின் கண்களைப் பார்க்காமல் சாட்சி கொடுப்பது போலவும், பிறகு கண்களைப் பார்த்து சாட்சி கொடுப்பது போலவும் இரண்டு சுருக்கமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: நாம் என்ன சாதித்தோம்? சபை செயலர் கலந்தாலோசிப்பார். நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் சபையார் செய்த ஊழியத்தைப் பாராட்டுங்கள்; சபையாக என்ன சாதிக்கப்பட்டது என்பதைச் சொல்லுங்கள். நினைவுநாள் அழைப்பிதழ்களைக் கொடுத்தபோதும், துணை பயனியர் செய்தபோதும் கிடைத்த நல்ல அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
10 நிமி: “மாற்றங்கள் செய்யத் தயாரா?” கேள்வி-பதில்.
பாட்டு 74; ஜெபம்