மே 27-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 123; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 19 பாரா. 1-5, பெட்டிகள் பக். 149-150 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோவான் 12-16 (10 நிமி.)
எண் 1: யோவான் 12:20-36 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இயேசுவின் பலியின் விலைமதிப்பு யாருக்கு முதலாவது பயன்படுத்தப்பட்டது, என்ன நோக்கத்துடன்?—நியாயங்காட்டி பக். 308 பாரா. 2-3 (5 நிமி.)
எண் 3: யெகோவாவை “சமாதானத்தை அருளும் கடவுள்” என்று அழைப்பது ஏன் பொருத்தமானது?—ரோ. 15:33 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: நாம் நடுகிற விதைகளுக்கு நீர்பாய்ச்சுதல். (1 கொ. 3:6-9) பின்வரும் கேள்விகளின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு: (1) மறுசந்திப்பு செய்வது ஏன் உங்களுக்குப் பிடிக்கும்? (2) மறுசந்திப்பு செய்வது ஏன் சிலருக்குச் சவாலாக இருக்கிறது? (3) அந்தச் சவால்களை எப்படிச் சமாளிக்கலாம்? (4) மறுசந்திப்பு செய்வது நமக்குக் கடினமாக இருந்தால், எப்படி உதவி பெறலாம்? (5) ஆர்வம் காட்டிய நபரை மீண்டும் சந்திப்பதற்கும், அவரிடம் எதைப் பற்றி பேசியிருந்தீர்கள், என்ன பிரசுரத்தை அளித்தீர்கள் போன்ற விவரங்களைக் குறித்து வைப்பதற்கும் என்ன செய்கிறீர்கள்? (6) மறுசந்திப்புக்காக எப்படித் தயாரிக்கிறீர்கள்? (7) மறுசந்திப்பு செய்ய ஒவ்வொரு வாரமும் நேரம் ஒதுக்குவது ஏன் நல்லது?
15 நிமி: “வீடியோக்களைப் பயன்படுத்தி கற்பியுங்கள்.” கலந்தாலோசிப்பு. யெகோவாவின் சாட்சிகளாக ஆவதற்குமுன் அமைப்பின் வீடியோக்களைப் பார்த்து எப்படிப் பயனடைந்தார்கள் எனச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
பாட்டு 101; ஜெபம்