மார்ச் 11-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 89; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 15 பாரா. 13-20 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மாற்கு 13-16 (10 நிமி.)
எண் 1: மாற்கு 14:22-42 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நினைவு ஆசரிப்பின் உட்பொருள் என்ன?—நியாயங்காட்டி பக். 266 பாரா 1–பக். 267 பாரா 1 (5 நிமி.)
எண் 3: நினைவு ஆசரிப்பு சின்னங்கள் எதைக் குறிக்கின்றன?—நியாயங்காட்டி பக். 267 பாரா. 2–3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மத்தேயு 10:7-10-ஐயும் லூக்கா 10:1-4-ஐயும் வாசிக்கச் சொல்லுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் எப்படி நமக்கு உதவலாம் என்பதைக் கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள்—பகுதி 1. 2001 ஆகஸ்ட் மாத நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-ல் உள்ள கட்டுரையின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. முழுநேர ஊழியத்தில் ஈடுபடுகிற ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். அவர்கள் என்ன பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது? குடும்பத்தார் அல்லது சபையார் அவர்களுக்கு எப்படி உதவினார்கள்? என்ன ஆசீர்வாதங்களை அனுபவித்தார்கள்?
10 நிமி: “சந்தோஷ இருதயத்தோடு நினைவுநாளுக்குத் தயாராகுங்கள்.” கேள்வி-பதில். நினைவுநாளுக்காக உங்கள் சபையில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். இதுவரை பிராந்தியத்தில் எந்தளவுக்கு அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லுங்கள்.
பாட்டு 8; ஜெபம்