பிப்ரவரி 18-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 118; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 15 பாரா. 1-7, பெட்டி பக். 116 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மாற்கு 1-4 (10 நிமி.)
எண் 1: மாற்கு 2:18–3:6 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றிய இந்தப் போதகம் எதில் ஆதாரங்கொண்டுள்ளது?—நியாயங்காட்டி பக். 299 பாரா. 1-6 (5 நிமி.)
எண் 3: 1 கொரிந்தியர் 7:29-31-ல் உள்ள பவுலின் அறிவுரையை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: பிரசங்கிக்க யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார். (பிலி. 4:13) உடல் சுகவீனத்தின் மத்தியிலும் ஊழியத்தில் பக்திவைராக்கியத்தோடு ஈடுபடும் இரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். அவர்கள் என்ன சவால்களை எதிர்ப்படுகிறார்கள்? ஒரேயடியாய் மனச்சோர்வில் மூழ்கிவிடாமல் இருப்பதற்கு எது அவர்களுக்கு உதவுகிறது? சபையார் அவர்களுக்கு எப்படி உதவியிருக்கிறார்கள்? ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வதால் எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள்?
15 நிமி: “நினைவுநாள் அழைப்பிதழ் விநியோகிப்பு—மார்ச் 1 முதல்.” கேள்வி-பதில். சபையார் ஒவ்வொருவருக்கும் ஒரு அழைப்பிதழைக் கொடுத்து அதைக் கலந்தாலோசியுங்கள். பாரா 2-ஐ சிந்திக்கும்போது பிராந்தியத்தை முழுமையாகச் செய்துமுடிக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறன என ஊழியக் கண்காணியிடம் கேளுங்கள். பாரா 3-ஐ சிந்திக்கும்போது அழைப்பிதழை எப்படிக் கொடுக்கலாம் என்பதை மாதிரி அணுகுமுறையைப் பயன்படுத்தி நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 8; ஜெபம்