அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜனவரி, பிப்ரவரி: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஒன்றை கொடுங்கள்: உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!, உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். மார்ச், ஏப்ரல்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். அல்லது வீட்டுக்காரரின் தேவையைப் பொறுத்து, கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்.
◼ 2013 ஊழிய ஆண்டின் பிற்பகுதியின்போது வட்டாரக் கண்காணி கொடுக்கும் பொதுப் பேச்சின் தலைப்பு: ‘எல்லாத் தேசத்தினருக்கும் மொழியினருக்கும் நற்செய்தி.’