டிசம்பர் 10-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 75; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 11 பாரா. 13-19 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: செப்பனியா 1–ஆகாய் 2 (10 நிமி.)
எண் 1: ஆகாய் 1:1-13 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மனித தத்துவங்களின் தொடக்கம் என்ன?—நியாயங்காட்டி பக். 289 பாரா 3–பக். 290 பாரா 2 (5 நிமி.)
எண் 3: கிறிஸ்துவின் சிந்தையைப் பற்றித் தெரிந்துகொண்டால் யெகோவாவைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம்—மத். 11:27 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: 2013-க்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி. பள்ளிக் கண்காணி கொடுக்கும் பேச்சு. சபையின் தேவையை மனதில் வைத்து 2013 அட்டவணையிலுள்ள அறிவுரைகளிலிருந்து பேச்சைத் தயாரித்துக் கொடுங்கள். தங்களுக்குக் கொடுக்கப்படுகிற பேச்சு நியமிப்புகளைக் கையாள, பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள, ஊழியப் பள்ளி புத்தகத்திலிருந்து வாரா வாரம் கொடுக்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்ற, ஊக்கமாய் உழைக்கும்படி எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “எல்லோரோடும் சமாதானமாய் இருங்கள்.” கேள்வி-பதில். இரண்டு சுருக்கமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். முதல் நடப்பில், கோபமாய் இருக்கும் வீட்டுக்காரரிடம் எப்படிப் பேசக் கூடாது என்பதைக் காட்டுங்கள், இரண்டாவது நடப்பில் எப்படிப் பேச வேண்டும் என்பதைக் காட்டுங்கள்.
பாட்டு 39; ஜெபம்