ஏப்ரல் 9-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 97; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“பின்பற்றி வா” அதி. 18 பாரா. 1-9 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எரேமியா 22-24 (10 நிமி.)
எண் 1: எரேமியா 23:15-23 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: புதிய உலகில் வாழ்க்கை ஏன் சலிப்புத் தட்டாது? (5 நிமி.)
எண் 3: பைபிள் ஆலோசனைகளை பின்பற்றினால் மணவாழ்க்கை மேம்படும்—நியாயங்காட்டி பக். 253 பாரா 6-பக். 254 பாரா 3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: ‘ஊழியத்தில் கவனமாயிருங்கள்.’ ஜனவரி 15, 2008 காவற்கோபுரம் பக்கங்கள் 6-8 பாராக்கள் 14-19 வரையுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. கிளை அலுவலகத்திடம் அனுமதி பெற்றபின் சபையின் அருகிலுள்ள ஊழியம் செய்யப்படாத பிராந்தியங்களில் சாட்சிகொடுக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம். இது பிரச்சினையில்லாத பிராந்தியமாக இருந்தால் நல்லது. விடுமுறை நாட்களில் தொகுதியாகவும் குடும்பமாகவும் சென்று ஊழியம் செய்வதற்கு ஏற்ற பிராந்தியமாக அது இருக்க வேண்டும். இதை நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் செய்ய வேண்டும். மூப்பர்களின் மேற்பார்வையில் நடக்க வேண்டும். இதைப் பற்றி பிரஸ்தாபிகள் மூப்பர்களிடம் பேசலாம். அருகிலுள்ள சபைகளுக்கு பிராந்தியத்தை முடிக்க உதவி தேவைப்பட்டால் அவர்களோடு சேர்ந்து கோடை விடுமுறை நாட்களில் ஊழியம் செய்ய மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம். இதைப் பற்றி உங்கள் வட்டார கண்காணியிடம் கேட்கலாம்.
15 நிமி: “கற்பிக்கும் கலையை வளர்க்க மூன்று டிப்ஸ்.” கேள்வி-பதில். பாரா 2-ஐக் கலந்தாலோசிக்கையில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் 3-ஆம் பக்கத்திலுள்ள முதல் பாராவை ஒரு பிரஸ்தாபி வீட்டுக்காரரோடு கலந்து பேசுவதைப் போன்ற நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அந்தப் பிரஸ்தாபி யோபு 10:15-லுள்ள குறிப்பை அதில் வாசித்தபின் யோபு யார் என்பதைப் பற்றி ஓரிரு நிமிடங்களுக்கு விளக்குகிறார். நடிப்புக்குப்பின், யோபுவைப் பற்றி அவர் சரியான விளக்கம் கொடுத்த போதிலும் கற்பிக்கும்போது அப்படிச் செய்வது ஏன் நல்லதல்ல என்று சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 10; ஜெபம்