மார்ச் 21-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 47; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
w08 11/15 பக். 12-14 பாரா. 1-11 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோபு 6-10 (10 நிமி.)
எண் 1: யோபு 8:1-22 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதே இரட்சிக்கப்படுவதற்குத் தேவைப்பட்ட எல்லாமா?—rs பக். 216 பாரா 4 (5 நிமி.)
எண் 3: மத்தேயு 10:16-லுள்ள ஆலோசனையை நாம் எவ்வாறு கடைப்பிடிக்கலாம்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். ஏப்ரல் மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள்; பத்திரிகையை ஏற்றுக்கொண்ட ஒருவரை மறுசந்திப்பு செய்கையில் எப்படி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம் என்பதைக் காட்டுகிற ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: பைபிளைப் பயன்படுத்தி பதிலளியுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 143-144-ல் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. உங்கள் பிராந்தியத்தில் கேட்கப்படுகிற ஒரு கேள்விக்கு பிரஸ்தாபி பதிலளிப்பது போலக் காட்டுகிற இரண்டு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். முதல் நடிப்பில், அவர் சரியான பதிலைக் கொடுக்கிறார்; ஆனால் பைபிளைப் பயன்படுத்துவதில்லை. இரண்டாவது நடிப்பில், பைபிளைப் பயன்படுத்தி பதிலளிக்கிறார். முதல் நடிப்பைவிட இரண்டாவது நடிப்பில் காட்டப்பட்ட அணுகுமுறை சிறந்ததாக இருந்ததற்குக் காரணம் என்ன என்பதைக் குறித்துச் சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: “ஏப்ரல் 2 முதல் நினைவுநாள் அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்படும்.” கேள்வி-பதில். நினைவுநாள் அழைப்பிதழின் ஒரு பிரதியை எல்லாப் பிரஸ்தாபிகளுக்கும் கொடுங்கள்; பின்பு அதிலுள்ள பல்வேறு அம்சங்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள். இந்த அழைப்பிதழை சபைப் பிராந்தியத்தில் முழுமையாகக் கொடுப்பதற்குச் செய்யப்பட்டிருக்கிற ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள். ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 5; ஜெபம்