அக்டோபர் 11-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 11-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 13, பாரா. 5-15, பெட்டி 172
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 5-7
எண் 1: 1 நாளாகமம் 6:31-47
எண் 2: யெகோவாவின் சாட்சிகள் ஒரு மத உட்பிரிவா அல்லது கருத்துவேறுபாட்டுக் குழுவா, அவர்களுடைய மதம் எவ்வளவு பழமையானது? (rs பக். 202 பாரா 2–பக். 203 பாரா 3)
எண் 3: அபூரண மனிதர்கள் எவ்வாறு பரிசுத்தராய் இருக்க முடியும்? (1 பேதுரு 1:16)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: நீங்கள் எப்படிப் பதிலளிக்க வேண்டும்? ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 69, பாராக்கள் 1-5-ல் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. தீர்மானம் எடுக்க வேண்டிய தன் மாணாக்கருக்கு ஒரு பயனியர் பதிலளிப்பது போன்ற ஒரு நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். “என்னுடைய சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்” என்பதே அந்த மாணாக்கரின் கேள்வி.
10 நிமி: சரீர சுத்தம் கடவுளுக்கு மகிமை சேர்க்கிறது. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 136, பாரா 2 முதல் பக்கம் 138, பாரா 2 வரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. யெகோவாவின் சாட்சிகளுடைய சுத்தமான, நேர்த்தியான, அடக்கமான தோற்றம் சத்தியத்தினிடம் தங்களைக் கவர்ந்த விதத்தைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: “பயப்படவேண்டாம்.” கேள்வி-பதில்.