ஜூலை 26-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 26-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 15-17
எண் 1: 1 இராஜாக்கள் 15:1-15
எண் 2: கடவுளுடைய கட்டளைகளுக்கு மதிப்புக்கொடாமல் தங்கள் சொந்தத் தீர்மானங்களைச் செய்ய சுயாதீனராய் உணரும்படி மனிதரைத் தூண்டுவித்தவன் யார்? (rs பக். 189 பாரா 4–பக். 190 பாரா 1)
எண் 3: அர்மகெதோன் ஏன் அவசியம்
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள்—பகுதி 2. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 112, பாரா 3-லிருந்து பக்கம் 114 பாரா 1 வரையுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. பயனியர் செய்வதற்காக தங்கள் அட்டவணையில் எவ்வாறு மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதை ஓரிரு பயனியர்களிடம் பேட்டி காணுங்கள்.
10 நிமி: ஆகஸ்ட் மாதத்தில் பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். சபையாருடன் கலந்தாலோசிப்பு. பத்திரிகைகளின் பொருளடக்கத்தை ஓரிரு நிமிடங்களுக்குக் கலந்தாலோசியுங்கள். பிறகு இரண்டு மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை எப்படி ஒரு கேள்வியையும் வசனத்தையும் பயன்படுத்தி ஊழியத்தில் பேசலாம் என்பதைச் சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள். ஒவ்வொரு பத்திரிகையையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள்.
10 நிமி: “ஒருவருடைய நீதியான செயல்கள் அவரை ஞானமுள்ளவர் என்று நிரூபிக்கும்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.