ஜூன் 21-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 21-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 1–2
எண் 1: 1 இராஜாக்கள் 1:1-14
எண் 2: வணக்கத்தில் சிலைகளைப் பயன்படுத்துதல் நம்முடைய சொந்த எதிர்காலத்தின் பேரில் என்ன விளைவுண்டாக்கலாம்? (rs பக். 187 பாரா. 3-6)
எண் 3: உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவது நமக்கு ஏன் நல்லது?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: ஜூலை மாதத்திற்கான பிரசுர அளிப்பு. சபையாருடன் கலந்தாலோசிப்பு. ஜூலை மாதத்தில் அளிக்கப்போகிற பிரசுரங்களிலுள்ள முக்கியக் குறிப்புகளைச் சுருக்கமாகச் சொல்லிய பின்பு ஓரிரு அணுகுமுறைகளை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “எல்லாச் சந்தர்ப்பத்திலும் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லத் தயாராய் இருங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பைபிள் செய்தியில் ஆர்வம் காட்டிய, ஜூலை மாதம் அளித்த பிரசுரத்தை ஏற்றுக்கொண்ட ஒருவரை மீண்டும் சந்திக்கையில் பைபிள் படிப்பை ஆரம்பிக்க, உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுகிற ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.