பிப்ரவரி 15-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 15-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 15-18
எண் 1: நியாயாதிபதிகள் 16:1-12
எண் 2: இயேசு குறிப்பிட்ட ‘எரிகிற கெஹென்னா’ என்ன? (rs பக். 173 பாரா. 1-3)
எண் 3: இயேசு ஏன் பிசாசை ‘பொய்க்குத் தகப்பன்’ என்று அழைத்தார்? (யோவா. 8:44)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்பதற்குத் தயாரியுங்கள். இந்த மாதம் அளிக்க வேண்டிய பத்திரிகைகளில் உள்ள விஷயங்களைச் சுருக்கமாகக் கலந்தாராயுங்கள்; எந்தெந்தக் கட்டுரைகள் மக்களின் ஆர்வத்தை தூண்டலாமெனச் சொல்லுங்கள். இந்தப் பத்திரிகைகளை அளிக்க ஒரு பிரஸ்தாபி நேரமெடுத்துத் தயாரிப்பதாகவும், தனக்குத்தானே பேசிக்கொள்வதாகவும் காட்டுகிற ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். எந்தக் கட்டுரைகள் பிராந்தியத்திற்கு ஏற்றவையாக இருக்குமென அவர் தீர்மானிக்கிறார்; பிறகு, என்ன கேள்வியைக் கேட்கலாம், என்ன வசனங்களைக் காட்டலாம் என்றெல்லாம் அவர் சிந்திக்கிறார். வீட்டுக்காரருக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதை எப்படிச் சாதுரியமாகக் கண்டுபிடிப்பதென்றும், அவருடைய மதக் கொள்கைகளுக்கு ஏற்ப தன்னுடைய அணுகுமுறையை எப்படி மாற்றிக்கொள்வதென்றும் அவர் சிந்திக்கிறார். பிறகு, அந்தப் பத்திரிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி அளிப்பாரென்று அவராகவே பழகிப்பார்க்கிறார்.
15 நிமி: நியாயங்காட்டிப் பேசும் விதம் செவிகொடுத்துக் கேட்க மக்களை உந்துவிக்கும். ஊழியப் பள்ளி புத்தகம், பக்கம் 251 முதல் பக்கம் 253 பாரா 2 வரையிலான விஷயங்களின் அடிப்படையில் கொடுக்கப்படுகிற பேச்சு.