அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் இந்தப் புத்தகம் ஏற்கெனவே இருந்தால் பழுப்பேறி உள்ளதும் 1995-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றைப் பிரஸ்தாபிகள் அளிக்கலாம். பிப்ரவரி: பின்வரும் பிரசுரங்களில் கையிருப்பில் உள்ள ஏதோவொன்றைப் பிரஸ்தாபிகள் அளிக்கலாம்: உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்), குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், அல்லது பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்). மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். பிரஸ்தாபிகள் இந்தப் புத்தகத்தை வீட்டுக்காரருக்குக் கொடுத்தால் அல்லது அது அவரிடம் ஏற்கெனவே இருந்தால் பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்ய வேண்டும். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும் சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் அனுசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.
◼ பிப்ரவரி மாதத்திலிருந்து வட்டாரக் கண்காணிகள் “கடவுளுடைய அரசாங்கம் இப்போது நமக்குச் செய்துவருபவை” என்ற தலைப்பில் புதிய பொதுப் பேச்சைக் கொடுப்பார்கள்.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? —ஆங்கிலம், தெலுங்கு, மராத்தி
இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி —பெங்காலி
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? —ஒரியா, கொங்கனி கன்னடம், கொங்கனி ரோமன்
வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? —ஆங்கிலம், குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, மராத்தி, மலையாளம், ஹிந்தி
நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் —தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சிகொடுத்தல்’ —ஆங்கிலம்
பைபிள்—ஒரு கண்ணோட்டம் —ஆங்கிலம், உருது, கன்னடம், குஜராத்தி, கொங்கனி (தேவநாகரி), கொங்கனி (ரோமன்), தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, பிரெஞ்சு, பெங்காலி, மராத்தி, மலையாளம், மிசோ, ஹிந்தி
உங்கள் வாழ்க்கை விதியின் கையிலா? (துண்டுப்பிரதி எண் 81) —குஜராத்தி
◼ கிடைக்கும் புதிய டிவிடி-கள்:
அற்புதப் படைப்புகள் கடவுளின் மகிமையைப் பறைசாற்றுகின்றன —ஆங்கிலம்.
(தற்போது சபையின் உபயோகத்திற்காக மட்டுமே இந்த டிவிடி கிடைக்கும்.)
கலாத்தியர்-கொலோசெயர் —அமெரிக்க சைகை மொழி