உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/09 பக். 4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2009
நம் ராஜ்ய ஊழியம்—2009
km 10/09 பக். 4

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து அதிலிருந்து அவரிடம் பேசுங்கள். வீட்டுக்காரரிடம் அந்தத் துண்டுப்பிரதி ஏற்கெனவே இருந்தால், ஒரு பைபிள் படிப்பைத் துவங்க பிரஸ்தாபி முயற்சி செய்ய வேண்டும். நவம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் இந்தப் புத்தகம் ஏற்கெனவே இருந்தால் பழுப்பேறி உள்ளதும் 1995-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றைப் பிரஸ்தாபிகள் அளிக்கலாம். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளிக்கலாம். ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் இந்தப் புத்தகம் ஏற்கெனவே இருந்தால் பழுப்பேறி உள்ளதும் 1995-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றைப் பிரஸ்தாபிகள் அளிக்கலாம்.

◼ தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கான வருடாந்தர அட்டவணை இனிமேல் நம் ராஜ்ய ஊழியத்துடன் சேர்த்து உட்சேர்க்கையாகக் கொடுக்கப்பட மாட்டாது. மாறாக, ஒவ்வொரு சபைக்கும் வருடாந்தர அட்டவணை அனுப்பி வைக்கப்படும்; அதன் ஒரு பிரதியை ராஜ்ய மன்ற அறிவிப்புப் பலகையில் போட வேண்டும். மற்றொரு பிரதியை, பேச்சுகளை நியமிப்பதற்கு உதவியாகப் பள்ளிக் கண்காணி தன்னிடம் வைத்துக்கொள்வார். எப்போதும்போல் பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் மாதாமாதம் நம் ராஜ்ய ஊழியப் பிரதியைப் பெற்றுக்கொள்வார்கள்; அதில், வாராந்தர சபை பைபிள் படிப்பு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஊழியக் கூட்டம் ஆகியவற்றிற்கான அட்டவணை கொடுக்கப்பட்டிருக்கும்.

◼ 2010-ல் ஜனவரி 4-ல் துவங்கும் வாரம் முதற்கொண்டு, ‘கடவுளுடைய அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகம் சபை பைபிள் படிப்பில் பயன்படுத்தப்படும். இந்தப் புத்தகம் தேவைப்படுகிற சபைகள் அடுத்த முறை பிரசுரங்களுக்காகக் கேட்டெழுதும்போது இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

◼ நல்ல முன்மாதிரி வைக்கிற, ஞானஸ்நானம் பெற்று குறைந்தது ஒரு வருடமாவது ஆகியிருக்கிற யெகோவாவின் சாட்சிகள் பெத்தேலில் சேவை செய்ய விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தியாவில் பேசப்படும் ஏதேனும் மொழியில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பயிற்றுவிக்கப்படுவதற்குத் திறமை பெற்ற வாலண்டியர்கள் தற்போது தேவைப்படுகிறார்கள். அதற்கான விண்ணப்பப் படிவங்களைக் கிளை அலுவலகத்திலிருந்து அல்லது மாவட்ட மாநாட்டில் பெத்தேலில் சேவை செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு நடத்தப்படும் கூட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்