தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 31, 2009-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 20 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 31, 2009 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
1. பெற்றோரைச் சபிக்கிற எவருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டுமென ஏன் கட்டளையிடப்பட்டது? (லேவி. 20:9) [w-TL04 5/15 பக். 24 பாரா 6]
2. இஸ்ரவேல் ஆண்கள் அனைவரும் புளிப்பில்லாத அப்பப்பண்டிகைக்கு ஆஜராயிருக்க வேண்டியிருந்ததால், வாற்கோதுமையின் முதற்பலன்களை யார் அறுவடை செய்தார்கள்? (லேவி. 23:5, 11) [w-TL07 7/15 பக். 26 பாரா 3]
3. யூபிலி வருடம் எதற்கு முன்நிழலாக இருக்கிறது? (லேவி. 25:10, 11) [w-TL04 7/15 பக். 26-27]
4. எண்ணாகமம் 2:2-ல் குறிப்பிடப்பட்டுள்ள கொடிகள் இஸ்ரவேலருக்கு மதரீதியில் ஏதேனும் முக்கியத்துவமுடையதாய் இருந்தனவா? [w-TL02 9/15 பக். 21 பாரா 4]
5. பூர்வ இஸ்ரவேலில் இருந்த நசரேயர்கள் காட்டிய என்ன மனப்பான்மையை இன்று முழுநேர ஊழியர்கள் காட்டுகிறார்கள்? (எண். 6:3, 5, 6) [w-TL04 8/1 பக். 24-25]
6. லேவியர் தங்களுடைய சேவையிலிருந்து ஓய்வு பெறுவது சம்பந்தமான கட்டளையின் என்ன நியமம் இன்று யெகோவாவின் மக்களுக்குப் பொருந்துகிறது? (எண். 8:25, 26) [w-TL04 8/1 பக். 25 பாரா 1]
7. இஸ்ரவேலர் எப்படி “இச்சையுள்ளவர்களானார்கள்,” இதிலிருந்து இன்றைய கிறிஸ்தவர்கள் என்ன பாடம் கற்கலாம்? (எண். 11:4) [w-TL01 6/15 பக். 14-15; w-TL95 3/1 பக். 15 பாரா 10]
8. ஏன் மிரியாம் மட்டுமே குஷ்டரோகத்தால் வாதிக்கப்பட்டார், இதிலிருந்து என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (எண். 12:9-11) [w-TL04 8/1 பக். 26 பாரா 2; it-2 பக். 415 பாரா 1]
9. யோசுவாவும் காலேபும் கானானியரை “இரை” என்று குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? (எண். 14:9) [w-TL06 10/1 பக். 16 பாரா 5]
10. எண்ணாகமம் 21:5 என்ன எச்சரிக்கும் உதாரணத்தை அளிக்கிறது? [w-TL99 8/15 பக். 26-27]