உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/09 பக். 4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2009
நம் ராஜ்ய ஊழியம்—2009
km 5/09 பக். 4

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் அனுசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் ஆர்வமுள்ள மற்றவர்களையும் மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும். ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால், பழுப்பேறிய அல்லது 1992-க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவதொரு 192-பக்க புத்தகத்தை அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: சபையின் கையிருப்பிலுள்ள பின்வரும் 32-பக்க சிற்றேடுகளில் ஒன்றை அளிக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, கடவுள் உண்மையில் நம்மைப் பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?, விழிப்புடன் இருங்கள்!, “இதோ! சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நம்முடைய பிரச்சினைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது, (ஆங்கிலம்) வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படி கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்.

◼ வேறொரு நாட்டில் நடக்கும் சபைக் கூட்டங்களில், மாநாடுகளில் கலந்துகொள்ள நீங்கள் திட்டமிட்டிருந்தால், தேதி, நேரம் இடம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வதற்கு அந்த நாட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்ளும் கிளை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். கிளை அலுவலகங்களின் விலாசங்கள் இந்த வருட இயர்புக்கின் கடைசிப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்