மே 11-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 11-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 27-29
எண் 1: யாத்திராகமம் 29:1-18
எண் 2: சந்தோஷத்திற்கான வழி (lr-TL அதி. 17)
எண் 3: தவறானவரிடம் உண்மைப்பற்றுறுதி காட்டுவதும் அதனால் வரும் ஆபத்துகளும்
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: கோடையில் துணை பயனியர் ஊழியம் செய்ய முடியுமா? ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 112-13 அடிப்படையில் சபையார் கலந்தாலோசிப்பு. அச்சேவைக்கு எதிர்பார்க்கப்படும் தகுதிகளை அவர் எடுத்துச்சொல்வார். ஏற்கெனவே துணை பயனியர் சேவை செய்திருப்பவர்கள், தாங்கள் அடைந்த ஆசீர்வாதங்களைச் சொல்லும்படி கேட்பார்.
10 நிமி: ஊழியத்திற்காகக் குடும்பமாகத் தயாரியுங்கள். குடும்ப வணக்கத்தின்போது ஊழியத்திற்காகத் தயாரிக்க சிறிது நேரத்தைப் பயன்படுத்துகிற இரண்டு குடும்பத் தலைவர்களைப் பேட்டி காணுங்கள். அவர்கள் எப்படித் தயாரிக்கிறார்கள், அது அவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது என்று கேளுங்கள். பத்திரிகை ஊழியத்திற்காக அல்லது பிராந்தியத்தில் எதிர்ப்பைச் சந்திக்கும்போது வேறு விதமாய் சாட்சி கொடுப்பதற்காக ஒரு குடும்பத் தலைவர் தன் குடும்பத்தோடு எப்படிப் பழகிப்பார்க்கிறார் என்பதை நடித்துக்காட்டச் சொல்லுங்கள்.
10 நிமி: “எளிமையாகக் கற்றுக்கொடுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு