பிப்ரவரி 2-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 2-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 21-24
எண் 1: ஆதியாகமம் 22:1-18
எண் 2: ‘இதுதான் என் மகன்’ (lr-TL அதி. 5)
எண் 3: மற்றவர்களுக்காக அன்பின் கதவைத் திறப்பதற்கான வழிகள் (2 கொ. 6:11-13)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி மாத ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: உரையாடலை நிறுத்துவோர். சுருக்கமான முன்னுரைக்குப் பிறகு, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 15-20-ஐப் பயன்படுத்தி, நம் பிராந்தியத்திலுள்ள மக்கள் பெரும்பாலும் என்ன சொல்லி உரையாடலை நிறுத்தப் பார்க்கிறார்கள் என்றும், அவர்களை எப்படிச் சமாளிக்கலாம் என்றும் நடித்துக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: பைபிளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உதவுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 64-68-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. பைபிளைக் குறித்து வெவ்வேறு விதமாக ஆட்சேபணை தெரிவிப்போருக்கு எப்படிப் பதிலளிப்பதென்று கலந்தாலோசியுங்கள். உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்கள் பொதுவாகத் தெரிவிக்கும் ஆட்சேபணைக்கு எப்படிப் பதிலளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.