அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். பிள்ளைகள் இருந்தால் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் பழுப்பேறி உள்ளதும் 1992-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றைப் பிரஸ்தாபிகள் அளிக்கலாம். பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம் ), நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு ஆகிய புத்தகங்களில் ஒன்றை அளியுங்கள். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விடாமுயற்சி செய்யுங்கள்.
◼ வீட்டிலும் சபையிலும் உள்ள தேவராஜ்ய நூலகத்தை விரிவாக்கும்படி உங்களை ஊக்கப்படுத்துகிறோம். சத்தியத்தை நன்கு புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் ஏராளமான பின்னணித் தகவல்கள் பழைய புத்தகங்கள் பலவற்றில் உள்ளன. அவை உங்களுடைய தனிப்பட்ட படிப்பின் தரத்தை உயர்த்தும். சபையில் நியமிக்கப்படும் பேச்சுகளை நீங்கள் தயாரிக்கும்போது உங்களுக்குக் கைகொடுக்கும்.—km-TL 11/93 பக். 1; km-TL 1/99 பக். 4; km-TL 4/03 பக். 5 ஆகியவற்றைப் பாருங்கள்.
◼ 2009-ஆம் ஆண்டின் நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தின்போது ஏப்ரல் 20-ல் துவங்கும் வாரத்தில் விசேஷப் பேச்சு கொடுக்கப்படும். இது, ஏப்ரல் 20, 2009 அன்று கொடுக்கப்படுமெனத் தவறுதலாக செப்டம்பர் மாத நம் ராஜ்ய ஊழியத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
◼ என்னுடைய பைபிள் கதை புத்தகத்தின் படிப்பு அட்டவணை திருத்தப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட அட்டவணை நம் ராஜ்ய ஊழியத்தில் ஒவ்வொரு மாதமும் பிரசுரிக்கப்படும்.