தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 29, 2008-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 20 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது நவம்பர் 3 முதல் டிசம்பர் 29, 2008 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
பேச்சு பண்புகள்
1. “அன்பினிமித்தம்” அறிவுறுத்துவது ஏன் திறம்பட்டதாய் இருக்கிறது? (பிலே. 9 ) [be-TL பக். 266 பாரா. 2-4]
2. நாம் எப்படி மற்றவர்களுக்குத் தைரியமூட்டலாம்? [be-TL பக். 268 பாரா 4பக். 269 பாரா 3]
பேச்சு நியமிப்பு எண் 1
3. தீத்துவுக்கு பவுல் எழுதிய நிருபம் இன்று நமக்கு எப்படி ‘நன்மையும் பிரயோஜனமுமாயிருக்கிறது?’ (தீத். 3:8 ) [si-TL பக் 241 பாரா 8]
4. பேதுரு எழுதிய முதலாம் நிருபம் ஏன் காலத்துக்கேற்றது? [si-TL பக். 251 பாரா 1]
5. உருவக நடையில் எழுதப்பட்டுள்ள வெளிப்படுத்துதல் நம்மீது என்ன பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்? [si-TL பக். 263 பாரா 1]
வாராந்தர பைபிள் வாசிப்பு
6. தீத்து 2:3-ல், ‘அவதூறு பண்ணாதவர்களை,’ ‘[“திராட்சரசத்துக்கு,” NW] அடிமைப்படாதவர்களுடன்’ பவுல் ஏன் சம்பந்தப்படுத்தினார்? [w-TL94 6/15 பக். 20 பாரா 12]
7. சாத்தான் ‘மரணத்துக்கு அதிகாரியாய்’ இருக்கிறான் எனச் சொல்லப்பட்டிருப்பது, யாருக்கு வேண்டுமானாலும் அகால மரணத்தை ஏற்படுத்த அவனால் முடியும் என்று காட்டுகிறதா? (எபி. 2:14 ) [w-TL08 10/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—தீத்து, பிலேமோன், மற்றும் எபிரெயருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்”]
8. புதிய உடன்படிக்கையை “எழுதின” மனிதன் யார்? (எபி. 9:16 ) [w-TL08 10/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—தீத்து, பிலேமோன், மற்றும் எபிரெயருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்”]
9. சமாதானமுள்ளவர்கள் என்பதன் அர்த்தம் என்ன, இதன் சம்பந்தமாக என்ன கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்? (யாக். 3:17 ) [w-TL08 3/15 பக். 24 பாரா 18]
10. ‘தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவர்’ என்ற சொற்றொடர் எதை அர்த்தப்படுத்துகிறது? (1 யோ. 3:20 ) [w-TL05 8/1 பக். 30 பாரா 19]