தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
அக்டோபர் 27, 2008-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 27, 2008 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது.
பேச்சு பண்புகள்
1. ஜனங்களுடைய நம்பிக்கைகளுக்கான காரணத்தை நாம் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? [be-TL பக். 259 பாரா. 1, 2]
2. தப்பெண்ணத்தையும் பகைமையையும் இருதயத்திலிருந்து அறவே விட்டொழிக்க ஒருவருக்கு நாம் எப்படி உதவலாம்? [be-TL பக். 260 பாரா 2]
3. வாழ்க்கையில் தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்குத் தங்களையே பரிசோதித்துக்கொள்ள நம் மாணாக்கருக்கு நாம் எப்படி உதவலாம்? [be-TL பக். 261 பாரா 3]
4. நமக்குச் செவிசாய்ப்பவர்களின் இருதயத்தை எட்ட முயற்சி செய்யும்போது எதை நாம் நினைவில் வைக்க வேண்டும்? [be-TL பக். 262 பாரா 4]
5. சபை கூட்டங்களில் உரிய நேரத்தில் பேச்சை முடிப்பதற்கு ஏன் கவனம் செலுத்த வேண்டும்? [be-TL பக். 263 பாரா. 1, 3, பெட்டி]
பேச்சு நியமிப்பு எண் 1
6. கொரிந்தியருக்கு தன் முதல் நிருபத்தை எழுத பவுலைத் தூண்டியது எது? [si-TL பக். 210 பாரா 3]
7. என்னென்ன காரணங்களுக்காக கொரிந்தியருக்குத் தன் இரண்டாவது நிருபத்தை பவுல் எழுதினார்? [si-TL பக். 214 பாரா. 1-2]
8. ஊழியத்தைக் குறித்து என்ன சரியான நோக்குநிலையை கிறிஸ்தவர்கள் ஏற்க வேண்டும்? [si-TL பக். 216-217 பாரா 18]
9. பிலிப்பியிலிருந்த சகோதரர்களைப்போல், இன்று நாம் எவ்வாறு கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்று, நம் சகோதரர்களின் மகிழ்ச்சிக்குரியோராய் ஆகலாம்? [si-TL பக். 225 பாரா 12]
10. தெசலோனிக்கேயிலுள்ள சபைக்கு எந்த விஷயத்தில் பவுலும் அவருடைய தோழர்களும் சிறந்த முன்மாதிரிகளானார்கள்? [si-TL பக். 231 பாரா 13]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. ‘ஆவி . . . இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, . . . அவனை [பொல்லாதவனை] சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பது’ என்பதன் அர்த்தம் என்ன? (1 கொ. 5:5) [w-TL08 7/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—கொரிந்தியருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்”]
12. இயேசுவின் மரணத்தை ‘எப்பொழுதெல்லாம்’ நினைவுகூர வேண்டும், எதுவரைக்கும்? (1 கொ. 11:26) [w-TL08 7/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—கொரிந்தியருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்”]
13. எந்தத் தரிசனத்தைப்பற்றி 2 கொரிந்தியர் 12:2-4 குறிப்பிடுகிறது, அந்தத் தரிசனத்தைப் பார்த்தவர் யாராக இருக்கலாம்? [w-TL04 10/15 பக். 8 பாரா 4; பக். 10 பாரா 9]
14. பவுல் ஏன் நியாயப்பிரமாணத்தை ‘கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாயருக்கு’ ஒப்பிட்டார்? (கலா. 3:24) [w-TL03 3/15 பக். 21]
15. சகோதரர்களாகிய “உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் . . . காக்கப்படுவதாக” என பவுல் என்ன அர்த்தத்தில் ஜெபம் செய்தார்? (1 தெ. 5:23) [w-TL08 9/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—தெசலோனிக்கேயருக்கும் தீமோத்தேயுவுக்கும் எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்”]