அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஆகஸ்ட்: சபை கையிருப்பைப் பொறுத்து, பின்வரும் 32-பக்க சிற்றேடுகளில் ஒன்றை அளிக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?, வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். ஏற்கெனவே இந்தப் புத்தகம் வீட்டுக்காரரிடம் இருந்தால் பைபிள் படிப்பிலிருந்து எவ்வாறு பயனடையலாம் என்பதை அவருக்குச் சுருக்கமாய் நடித்துக் காட்டுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுபவர்களிடம் பைபிள் படிப்பைத் தொடங்கும் நோக்கத்தோடு பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை அளித்துவிட்டு கலந்துபேசுங்கள். நவம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள்.
◼ சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது அமைப்பிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டவர்கள் மீண்டும் சபைக்குள் வர விரும்பினால், அவர்களுக்கு உதவ பிப்ரவரி 1, 1992, காவற்கோபுரம், 19-21 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றும்படி மூப்பர்களுக்கு நினைவூட்டுகிறோம்.
◼ பிரெய்ல் மொழியில் எழுதும் சாதனங்களை உடைய அல்லது கம்ப்யூட்டரில் உள்ளதை சப்தமாக வாசிக்கும் புரோகிராம்களை உடைய கண் பார்வையற்ற அல்லது பார்வை குறைபாடுள்ள பிரஸ்தாபிகளுக்கும் சத்தியத்திடம் ஆர்வம் காட்டுகிறவர்களுக்கும் உதவுவதற்காக ஓர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக பிரெய்ல் மொழியில் உள்ள காவற்கோபுரத்தின் எலெக்ட்ரானிக் ஃபைல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஃபைல்கள் ஆங்கில பிரெய்ல் மொழியில், காவற்கோபுரத்தின் பொது இதழும் படிப்பு இதழும் கிரேட் 2-ல், அதாவது சுருக்கப்பட்ட வடிவில் கிடைக்கிறது. அதோடு, பிரெஞ்சு, ஸ்பானிஷ் பிரெய்ல் மொழிகளில் காவற்கோபுர படிப்பு இதழ்கள் கிரேட் 1-ல், அதாவது சுருக்கப்படாத வடிவில் கிடைக்கிறது. இந்த ஃபைல்களைப் பெற விரும்புகிறவர்களுக்கு இவை ஈ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த விதத்தில் காவற்கோபுரத்தின் ஃபைல்களைப் பெற விரும்புகிறவர்கள் சபை செயலர் மூலம், Jehovah’s Witnesses of India, Post Box 6440, Yelahanka, Bangalore—560 064, KAR என்ற விலாசத்தில், “பிரெய்ல் இலாக்காவின் கவனத்திற்கு” என குறிப்பிட்டு கடிதம் எழுத வேண்டும். அந்த நபரின் பெயர், விலாசம், அவர் எத்தகைய எலெக்ட்ரானிக் கருவியைப் பயன்படுத்துகிறார், அவருடைய ஈ-மெயில் விலாசம், அவருக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் பிரெய்ல் மொழிகளில் எந்த மொழியில் வாசிக்கத் தெரியும் ஆகிய விவரங்களைக் கடிதத்தில் குறிப்பிட வேண்டும். அவருக்கு ஈ-மெயில் விலாசம் இல்லாதிருந்தால் வேறு யார் மூலமாவது அதை அவர் பெற்றுக்கொள்ள முடிந்தால் அந்த நபருடைய ஈ-மெயில் விலாசத்தைக் கொடுக்க வேண்டும்.
◼ ராஜ்ய மன்றங்களில் உலகளாவிய வேலைக்காக வைக்கப்படும் நன்கொடைப் பெட்டிகளில் “உலகளாவிய வேலைக்கான நன்கொடைகள்—மத். 24:14” என எழுதப்பட்டிருக்க வேண்டும். இதே வாசகம், பிரஸ்தாபிகள் பயன்படுத்தும் நன்கொடை உறைகளிலும் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். வேறு எந்த அலங்கரிப்பும் அந்த உறைகளில் இருக்கக்கூடாது. தயவுசெய்து இந்த உறைகளைச் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் பிரஸ்தாபிகளுக்கு சபையிலுள்ள மூப்பர்கள் உதவி செய்ய வேண்டும்.
◼ டிரஸ்ட்டுகளை வைத்திருக்கும் சபைகள், குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக அவற்றின் வருடாந்தர பொதுக் கூட்டங்களை (AGM) நடத்தும்படி நினைவூட்டப்படுகின்றன. இக்கூட்டங்களிலும், பிற டிரஸ்ட் கூட்டங்களிலும் பேசப்படுகிற விஷயங்களை முறையாகக் குறிப்பெடுத்து அவற்றைக் குறிப்பேட்டில் எழுதிவைக்க வேண்டும். வருட முடிவான மார்ச் 31, 2008-ன்போது டிரஸ்டுக்குக் கிடைத்த மொத்த வருமானத்தின் மதிப்பு ரூபாய் 1,10,000-க்கும் அதிகமாய் இருந்தால், கணக்குகள் சார்ட்டர்டு அக்கௌண்ட்டன்ட்டாக இருப்பவரால் தணிக்கைச் செய்யப்பட வேண்டும். அவரிடமிருந்து படிவம் 10B-யில் அறிக்கையைப் பெற்று, வருமான வரி இலாகாவுக்கு சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். நிதி ஆண்டில், டிரஸ்டுக்குக் கிடைத்த மொத்த வருமானத்தின் மதிப்பு ரூபாய் 1,10,000-க்கும் குறைவாக இருந்தால், வருமான வரி இலாகாவுக்கு சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும், எந்தச் சமயத்தில் விசாரணை நடந்தாலும் அறிக்கையை சமர்ப்பிக்க தயாராய் இருக்கும் விதத்தில் மிகத் திருத்தமான, முழுமையான பதிவுகளை வைத்திருக்கும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். 1961 வருமான வரி சட்டத்தில், 12ஏ பிரிவின்கீழ் எந்த டிரஸ்டாவது வரிவிலக்கிற்காக விண்ணப்பிக்க விரும்பினால், தயவுசெய்து அதைச் சார்ட்டர்டு அக்கௌண்ட்டன்ட்டின் உதவியோடு பதிவு செய்யுங்கள்.
◼ மீண்டும் கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்—பாடல் வரிகள் மட்டும்—கன்னடம்
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்—நேப்பாளி
◼ கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:
வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்—மலையாளம்
வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! —ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, நேப்பாளி, மலையாளம்
◼ அமெரிக்கன் சைகை மொழியில் கிடைக்கும் புதிய டிவிடிக்கள்:
விழிப்புடன் இருங்கள்!