தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 25, 2008-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 25, 2008 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விக்குப் பின்னர் தகவல் சம்பந்தமாக எந்தக் குறிப்பும் இல்லையென்றால் நீங்களாகவே ஆராய்ச்சிசெய்து பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.—ஊழியப் பள்ளி புத்தகம், பக்கங்கள் 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. மற்றவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்கும்போது நாம் எப்படி நியாயத்தன்மையைக் காட்டலாம்? (பிலி. 4:5, NW) [be-TL பக். 251 பாரா 3]
2. பைபிளை அதிகாரப்பூர்வ புத்தகமாகக் கருதாதவர்களிடம் சாட்சிகொடுக்கும்போது, அத்தேனேயில் மார்ஸ் மேடையில் நின்று கிரேக்கருடன் பேசிய பவுலின் உதாரணம் நமக்கு எப்படி உதவலாம்? (அப். 17:22, 23) [be-TL பக். 252 பாரா. 1-2]
3. நாம் பேசிக்கொண்டிருக்கிற நபருடைய கருத்து தவறு என நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும் அவரிடம் எப்படி நியாயத்தன்மையை வெளிக்காட்டலாம்? [be-TL பக். 253 பாரா. 1-2]
4. நம்பவைக்கும் விதத்தில் பேசுவதற்கு நாம் முயற்சி செய்யும்போது எதை நாம் மனதில் வைக்க வேண்டும்? [be-TL பக். 255 பாரா 3, பெட்டி]
5. கேட்பவரின் இருதயத்தை எட்ட முயற்சி செய்யும்போது பகுத்துணர்வை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்? (நீதி. 20:5) [be-TL பக். 258 பாரா. 1-5]
பேச்சு நியமிப்பு எண் 1
6. பேச்சு அமைப்புக்காக யோசிக்கையில் சகோதரிகள் எதை மனதில் வைக்க வேண்டும்? [be-TL பக். 44 பாரா. 5-6]
7. பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளை சகோதரர்கள் எந்த நோக்கத்துடன் அளிக்க வேண்டும்? (நெ. 8:8) [be-TL பக். 47 பாரா. 2-3]
8. ஊழியக் கூட்டத்தில் கொடுக்கவிருக்கும் தன் பேச்சில் பேட்டியோ நடிப்போ இடம்பெற்றால் ஒரு சகோதரர் என்ன செய்ய வேண்டும்? [be-TL பக். 50 பாரா 1]
9. ‘சிங்காசனத்திற்கு முன்பாக நிற்பது’ என்ற சொற்றொடர் ஏன் பரலோக வகுப்பாரை குறிப்பதில்லை? (வெளி. 7:9) [wt-TL பக். 121 பாரா 3]
10. தன்னுடைய பேச்சிற்கு வேதவசனங்களை அஸ்திவாரமாக அமைக்க பொதுப் பேச்சைக் கொடுப்பவர் என்ன செய்யலாம்? (அப். 17:2, 3) [be-TL பக். 52 பாரா 6—பக். 53 பாரா 2]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. பிலிப்பு பட்டணத்தைச் சேர்ந்த சிறைச்சாலைக்காரன் ஏன் “தன்னைக் கொலை செய்துகொள்ளப் போனான்”? (அப். 16:25–27) [w-TL90 5/1 பக். 30, பெட்டி]
12. துன்புறுத்தலை எதிர்ப்பட்டபோது அரிஸ்தர்க்குவும் காயுவும் எப்படி நடந்துகொண்டார்கள்? (அப். 19:29; 20:4, 5) [w-TL08 2/15 பக். 10, பாரா. 16-17]
13. சவுல் ‘தாற்றுக்கோலை உதைத்துக்’ கொண்டிருந்தார் என்பது எதை அர்த்தப்படுத்தியது? (அப். [திருத்தூதர் பணிகள்] 26:14, பொ.மொ.) [w-TL03 10/1 பக். 32]
14. இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த ‘கற்பனையினாலே பாவமானது சமயம் [“தூண்டுதல்,” NW] பெற்றது’ எப்படி? (ரோ. 7:8, 11) [w-TL08 6/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—ரோமர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்”]
15. நாம் எப்படி சத்துருவின் தலையில் “அக்கினித்தழலை” வைக்க முடியும்? (ரோ. 12:20) [w-TL08 6/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—ரோமர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்”]