ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 11-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். தற்போது அளித்துவரும் பத்திரிகைகளில், எந்தெந்த கட்டுரைகள் தங்களுடைய பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கின்றன என்பதைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். தாங்கள் பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் கட்டுரைகளிலிருந்து முக்கியமாக எந்தெந்த குறிப்புகளைக் காட்டப்போகிறார்கள் என்பதை அவர்களிடம் கேளுங்கள். உரையாடலை ஆரம்பிக்க என்ன கேள்வியைக் கேட்கலாம்? அதன் பிறகு கட்டுரையிலுள்ள எந்த வசனத்தை வாசித்துக் காட்டலாம்? பத்திரிகை அளிப்புக்கான அறிமுகங்களைப் பயன்படுத்தி நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: இருதயத்தை சென்றெட்ட கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள். பிப்ரவரி 1, 2005 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 28-31-ன் அடிப்படையில் பேச்சு. பேதுருவுக்கு உதவ இயேசு வசனங்களை எப்படிப் பயன்படுத்தினார் என்பதை விளக்குங்கள். நம் பிள்ளைகளுடைய, பைபிள் மாணாக்கருடைய, ஏன் நம்முடைய எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும்கூட மாற்றம் செய்வதற்கான தேவை ஏற்படும்போது இயேசுவின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம் என்று சொல்லுங்கள்.
25 நிமி: “எதிரிகளை கண்டு துளியும் பயப்படாமல் இருக்கிறீர்கள்.”a பயங்கரமான எதிர்ப்பை அல்லது கலக கும்பலைச் சமாளித்த ஒரு பிரஸ்தாபியையோ பயனியரையோ பேட்டி காணுங்கள்.
ஆகஸ்ட் 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். “வரவிருக்கும் வட்டார மாநாட்டு நிகழ்ச்சி” என்ற பகுதியை சிந்தியுங்கள். வட்டார மாநாடு எந்தத் தேதிகளில் நடக்கும் என்பது தெரிந்தால் அதை அறிவியுங்கள்.
20 நிமி: நம்முடைய உடையும் தோற்றமும் யெகோவாவுக்குத் துதி சேர்க்கின்றன. மூப்பரின் பேச்சு. யெகோவா பரிசுத்தராக இருப்பதால் அவருடைய ஜனங்கள் உடல்ரீதியான சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறார்கள். (யாத். 30:17–21; 40:30–32) உடை உடுத்துவதிலும் தோற்றத்திலும் முன்மாதிரியாக இருக்கும்போது, முக்கியமாக ஊழியத்தில் அப்படி இருக்கும்போது, நாம் யெகோவாவை சந்தோஷப்படுத்துவதோடு அவருக்கு மகிமையையும் சேர்க்கிறோம். (1 பே. 2:12) அப்படி முன்மாதிரியாக இல்லாவிட்டால், ‘தேவவசனம் தூஷிக்கப்படுவதற்கு’ காரணமாக இருப்போம். (தீத். 2:4) ஒரு பிரஸ்தாபியினுடைய சிறந்த தோற்றம் சாட்சி கொடுக்க வாய்ப்பளித்ததைப் பற்றிய உள்ளூர் அனுபவத்தையோ பத்திரிகையில் வெளிவந்த அனுபவத்தையோ குறிப்பிடுங்கள்.
15 நிமி: வலிமையான சாட்சி கொடுக்கும் இளைஞர்கள். பெற்றோருக்காகவும் பிள்ளைகளுக்காகவும் கொடுக்கப்படும் உற்சாகமூட்டும் பேச்சு. சாட்சி கொடுக்க கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்படி இளம் பிள்ளைகளுக்கு நினைப்பூட்டுங்கள். நேரமிருப்பதைப் பொறுத்து, பள்ளியில் சாட்சி கொடுத்த அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
ஆகஸ்ட் 25-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். “வரவிருக்கும் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி” என்ற பகுதியை சிந்தியுங்கள். விசேஷ மாநாட்டு தினம் எந்தத் தேதியில் நடக்கும் என்பது தெரிந்தால் அதை அறிவியுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
15 நிமி: செப்டம்பர் மாதத்தில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளியுங்கள். பேச்சும் நடிப்பும். ஜனவரி 2006 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள அணுகுமுறைகள் சிலவற்றைச் சிந்தியுங்கள். இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒன்று, புத்தகத்தை அளிப்பதைப் போலவும் மற்றொன்று, பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் நோக்கத்தோடு மறுசந்திப்பு செய்வதைப் போலவும் இருக்க வேண்டும்.
செப்டம்பர் 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஆகஸ்ட் மாத வெளி ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
20 நிமி: தனியாக இருந்தாலும் தனிமையில் இல்லை. ஏப்ரல் 15, 2008 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 25-28-ன் அடிப்படையில் பேச்சு. சபையில் யாராவது முதியோர் இல்லங்களில் வசிக்கிறார்கள் என்றால் அதைத் தெரிவியுங்கள். அப்படி யாரும் இல்லாவிட்டால், படுத்தபடுக்கையாக இருப்பவர்களுக்கு அல்லது சபை காரியங்களில் ஓரளவே பங்கெடுக்க முடிந்தவர்களுக்கு சபையார் உதவும்படி உற்சாகப்படுத்த இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள நியமங்களைப் பயன்படுத்துங்கள்.
15 நிமி: செப்டம்பரில் முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். சபையாருடன் கலந்தாலோசிப்பு. செப்டம்பர் மாதத்தில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை நாம் அளிப்போம். முதல் சந்திப்பிலேயே சில பாராக்களை வீட்டுக்காரருடன் கலந்தாலோசிக்க முயற்சி செய்வோம். ஜனவரி 2006 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள அணுகுமுறைகளைச் சிந்தியுங்கள். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை எப்படி ஆரம்பிப்பது என்பதைக் காட்டும் ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். புத்தகத்தை அளிப்பதற்கு முன்பு வீட்டுக்காரருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பது அவசியம் என்பதைச் சொல்லுங்கள்.
[அடிக்குறிப்பு]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.