அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜூலை, ஆகஸ்ட்: சபை கையிருப்பைப் பொறுத்து, பின்வரும் 32-பக்க சிற்றேடுகளில் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, விழிப்புடன் இருங்கள்!, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி. செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். ஏற்கெனவே இந்தப் புத்தகம் வீட்டுக்காரரிடம் இருந்தால் பைபிள் படிப்பிலிருந்து எவ்வாறு பயனடையலாம் என்பதை அவருக்குச் சுருக்கமாய் நடித்துக் காட்டுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுபவர்களிடம் பைபிள் படிப்பைத் தொடங்கும் நோக்கத்தோடு பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை அளித்துவிட்டு கலந்துபேசுங்கள்.
◼ ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து வார இறுதிநாட்கள் இருப்பதால் துணை பயனியர் ஊழியம் செய்வதற்கு மிகச் சிறந்த மாதமாகும்.
◼ செப்டம்பர் முதல், ‘உத்தமத்தில் நடந்திடுங்கள்’ என்ற தலைப்பில் வட்டாரக் கண்காணிகள் பொதுப் பேச்சைக் கொடுப்பார்கள்.
◼ தனிப்பட்ட பிரஸ்தாபிகள் கிளை அலுவலகத்திற்கு கேட்டெழுதும் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்படாது. சபை மாதாந்தர பிரசுர ஆர்டரை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன் ஒவ்வொரு மாதமும் அதை சபையாருக்கு அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். பிரஸ்தாபிகள் தங்களுக்குத் தேவையான பிரசுரங்களைப் பிரசுர ஊழியரிடம் முன்னதாகவே ஆர்டர் செய்ய இந்த ஏற்பாடு உதவும். விசேஷ தருவிப்பு பிரசுரங்கள் எவை என்பதைத் தயவுசெய்து தெரிந்து வைத்திருங்கள்.
◼ முடிந்தவரை ஆகஸ்ட் 31, 2008 தேதிக்குள், கையிருப்பிலுள்ள எல்லா பிரசுரங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் வருடாந்தர இன்வென்ட்ரி எடுக்க வேண்டும். பிரசுர ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொரு மாதமும் எண்ணிக்கையை சரிபார்ப்பதைப் போலவே இதையும் சரிபார்த்து மொத்த எண்ணிக்கையை லிட்ரேச்சர் இன்வென்ட்ரி (S-18) படிவத்தில் எழுத வேண்டும். கையிருப்பிலுள்ள மொத்த பத்திரிகைகளின் எண்ணிக்கையைப் பத்திரிகை ஊழியர்(கள்) வாயிலாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருங்கிணைப்பு சபையின் செயலர், இன்வென்ட்ரி எடுப்பதை மேற்பார்வை செய்ய வேண்டும். அவரும் ஒருங்கிணைப்பு சபையின் நடத்தும் கண்காணியும் படிவத்தில் கையொப்பமிடுவார்கள். ஒவ்வொரு ஒருங்கிணைக்கும் சபைக்கும் மூன்று லிட்ரேச்சர் இன்வென்ட்ரி படிவங்கள் அனுப்பி வைக்கப்படும். தயவுசெய்து செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் ஒரிஜினலை சொஸைட்டிக்கு அனுப்பவும். நகல் ஒன்றை உங்களுடைய கோப்புகளில் வைத்துக்கொள்ளவும். மூன்றாவது நகலை ‘ஒர்க்’ ஷீட்டாக பயன்படுத்திக் கொள்ளவும்.
◼ பைபிள் படிப்புகளை ஆரம்பித்து நடத்த தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிற்குப் பதிலாக பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டும். கையிருப்பிலுள்ள தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டின் பிரதிகள் தீரும்வரை அவற்றை வெளி ஊழியத்தில் அளிக்கலாம்.
◼ வருடாந்தர ஐட்டங்களுக்கான விசேஷ ஆர்டர் படிவம் (Special Request Form for Annual Items) எல்லா சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 2009-ஆம் வருடத்திற்கான இயர்புக், காலண்டர், வேதவாக்கியங்களை ஆராய்தல் போன்ற வருடாந்தர ஐட்டங்களுக்கு இது வரை ஆர்டர் செய்திராத சபைகள் உடனடியாக ஆர்டர்களை அனுப்பி வைக்கவும். ராஜ்ய மன்ற பிரசுர இன்வென்டரி ஏற்பாட்டின்கீழ் செயல்படும் சபைகள் “ஒருங்கிணைக்கும் சபை” மூலமாக மட்டுமே தங்கள் ஆர்டர்களை அனுப்ப வேண்டும். இருந்தாலும், ஒருங்கிணைக்கும் சபையின் செயலர் தங்கள் பிரசுர தொகுதியின் கீழுள்ள ஒவ்வொரு சபைக்கும் தேவைப்படும் பிரசுரங்கள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
பேசுவதற்கும் கற்பிப்பதற்குமான உங்கள் திறமையில் முன்னேற்றம் செய்வது எப்படி —பெங்காலி
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (29 பாடல்கள்) —மராத்தி