ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
குறிப்பு: மாவட்ட மாநாடு நடைபெறும் மாதங்களில் ஒவ்வொரு வாரத்திற்குமுரிய ஊழியக் கூட்ட அட்டவணை நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்படும். “கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுதல்” மாவட்ட மாநாட்டுக்குச் செல்வதற்கு வசதியாக சபைகள் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். பொருத்தமாயிருந்தால், இந்த மாத உட்சேர்க்கையிலிருந்து, சபைக்குப் பொருந்துகிற குறிப்பிட்ட ஆலோசனைகளையும் நினைப்பூட்டுதல்களையும் மாநாட்டுக்குச் செல்வதற்கு முந்தின வார ஊழியக் கூட்டத்தில் மறுபடியும் கலந்தாலோசிக்க 15 நிமிடத்தை ஒதுக்குங்கள். மாநாடு முடிந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, ஊழியத்திற்குப் பயனுள்ளதாய் இருப்பதாக பிரஸ்தாபிகள் கருதுகிற மாநாட்டு குறிப்புகளை மறுபார்வை செய்ய ஊழியக் கூட்டப் பகுதியில் (ஒருவேளை சபை தேவைகள் பகுதியில்) 15 முதல் 20 நிமிடங்களை ஒதுக்குங்கள். இந்த மறுபார்வையை ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். இந்தத் தகவலை ஊழியத்தில் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் அல்லது பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
ஜூலை 14-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி ஜூலை-செப்டம்பர் காவற்கோபுரத்தையும் ஜூலை-செப்டம்பர் விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: நம்முடைய அவசர உணர்வை காத்துக்கொள்ளுதல். டிசம்பர் 15, 2006 காவற்கோபுர இதழில் பக்கங்கள் 18-19, பாராக்கள் 17-21-ன் அடிப்படையில் உற்சாகத்துடன் தரும் பேச்சு.
20 நிமி: “சபை புத்தகப் படிப்பில் என்னுடைய பைபிள் கதை புத்தகத்தைப் பயன்படுத்துதல்.”a இந்தப் புத்தகத்தின் சிறப்பு அம்சங்களைக் குறிப்பிடுங்கள். புத்தகப் படிப்புக்கான அட்டவணையை சிந்தியுங்கள். தவறாமல் புத்தகப் படிப்பில் கலந்துகொண்டு, தாராளமாக குறிப்புச் சொல்ல அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். கூட்டங்களுக்கு நன்றாகத் தயாரித்து வருபவரென பெயரெடுத்த ஓரிரு பிரஸ்தாபிகளை சுருக்கமாக பேட்டி காணவும். அவ்வாறு செய்ய அவர்களை எது தூண்டுகிறதென கேளுங்கள்.
ஜூலை 21-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “தயாரித்தல்—திறம்பட்ட மறுசந்திப்புகளுக்கு முக்கிய வழி.”b மறுசந்திப்பு செய்வதற்கு பிரஸ்தாபி ஒருவர் தயாரிப்பதைக் காட்டும் தனக்குத்தானே பேசிக்கொள்கிற நான்கு நிமிட நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தான் எழுதி வைத்திருக்கிற குறிப்புகளை எடுத்துப் பார்த்து, அந்த வாரயிறுதியில் இரண்டு பேரை மீண்டும் போய் சந்திக்க அவர் தீர்மானிக்கிறார். பிறகு, அவர்கள் ஒவ்வொருவரிடமும் எந்தெந்த விஷயங்களைப் பேசியிருக்கிறார், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதைத் தீர்மானித்துவிட்டு அதற்கேற்ப தயாரிக்கிறார். அவர்களில் ஒருவரிடம் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப்பற்றிப் பேசுவதற்குத் தயாரிக்கிறார். மற்றவரிடம், பாரா 5-லுள்ள ஆலோசனையைப் பயன்படுத்தி அவருடைய ஆர்வத்தை இன்னும் தூண்டுவதற்குத் தேவையான தகவலைத் தயாரிக்கிறார்.
ஜூலை 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜூலை மாத வெளி ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். ஆகஸ்ட் மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிட்டு அதை அளிக்கும் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: “தயக்கமின்றி, தைரியமாகப் பேச உங்களால் முடியுமா?” மே 15, 2006 காவற்கோபுர இதழில் பக்கங்கள் 13-16-ன் அடிப்படையில் பேச்சு. தைரியமாகப் பிரசங்கிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.
25 நிமி: “ஆன்மீக விருந்தை ருசித்து மகிழ்வதற்கான நேரம்.”c சபை செயலர் நடத்த வேண்டும். எந்த இடத்தில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள சபை நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவியுங்கள். “மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” என்ற பெட்டியை சிந்தியுங்கள்.
ஆகஸ்ட் 4-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: கிறிஸ்தவர்களாக இருப்பதால் பள்ளியில் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க உங்கள் பிள்ளைகள் தயாராய் இருக்கிறார்களா? பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். பள்ளியில் கிறிஸ்தவ இளைஞர்கள் எதிர்ப்படும் சில பிரச்சினைகளைக் குறிப்பிடுங்கள். பெற்றோரும் பிள்ளைகளும் உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இண்டெக்ஸை பயன்படுத்தி பயனுள்ள தகவலை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்பதை விளக்குங்கள். (“ஸ்கூல்ஸ்” என்ற பிரதான தலைப்பின் கீழ், “எக்ஸ்பீரியன்சஸ்” என்ற உபதலைப்பைக் காண்க.) பள்ளியில் எதிர்ப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்கவும் பைபிள் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் பெற்றோர் தங்களைத் தயார்படுத்திய விதத்தைச் சொல்லும்படி சத்தியத்திலுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டவர்களிடம் கேளுங்கள். விழித்தெழு! பத்திரிகையிலுள்ள கட்டுரைகளின் அடிப்படையில் தாங்கள் தயாரித்து அளித்த பள்ளி அறிக்கைகளைப் பற்றியும் அவர்கள் சொல்லலாம். சக மாணவர்களுக்குச் சாட்சிகொடுப்பது தங்களுக்கு எப்படிப் பாதுகாப்பாய் அமைந்தது என்பதைச் சொல்லும்படியும் அவர்களிடம் கேளுங்கள்.
20 நிமி: “உறுதியாக வேரூன்றியிருப்பவற்றை அகற்றுகிறோம்.”d தங்கள் மனதில் ஆழமாய் வேரூன்றியிருந்த பொய் மத நம்பிக்கைகளை அகற்ற தங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தியவர் எப்படி உதவினாரென சபையாரைச் சொல்லச் சொல்லுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.