உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/08 பக். 2-4
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2008
  • இதே தகவல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • வெற்றிகரமான உலகளாவிய பள்ளி
    விழித்தெழு!—1995
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி நன்மைகளைக் கொண்டுவருகிறது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • யெகோவா நமக்குப் பயிற்சி அளிக்கிறார்
    நம் ராஜ்ய ஊழியம்—2011
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2008
km 5/08 பக். 2-4

கேள்விப் பெட்டி

◼ தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும் ஊழியக் கூட்டத்திலும் கொடுக்கப்படும் ஒவ்வொரு பேச்சுக்கும் பிறகு கைதட்டுவது சரியா?

படைப்பாளரான யெகோவா பூமியை உருவாக்கியபோது, ‘விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்கள்.’ (யோபு 38:7) தனிச்சிறப்புமிக்க இந்தப் படைப்பில் தம்முடைய ஞானத்தையும் நற்குணத்தையும் வல்லமையையும் யெகோவா புதிய விதத்தில் வெளிக்காட்டினார்; இதைப் பார்த்த தேவபுத்திரர் யெகோவாவை நெஞ்சாரத் துதிக்க விரும்பினார்கள்.

நாமும்கூட நம்முடைய சகோதரர்கள் பேச்சிலோ நடிப்பிலோ அளிக்கிற தகவலுக்கும் அதைத் தயாரித்து அளிக்க அவர்கள் எடுக்கிற முயற்சிகளுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிப்பது நல்லது. உதாரணத்திற்கு, மாநாடு போன்ற விசேஷக் கூட்டங்களில் இடம்பெறும் பேச்சுகளுக்கும் நடிப்புகளுக்கும் நாம் பொதுவாகக் கைதட்டுகிறோம். அவற்றைத் தயாரித்து அளிக்க பெருமளவு நேரத்தையும் முயற்சியையும் நம் சகோதரர்கள் எடுப்பதை அறிந்திருக்கிறோம். அவர்கள் கடுமையாய் உழைத்து அவற்றை நல்ல விதத்தில் அளித்ததற்காக மட்டுமல்ல, தம்முடைய வார்த்தையின் மூலமாகவும் அமைப்பின் மூலமாகவும் யெகோவா அளிக்கிற அறிவுரைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கைதட்டுகிறோம்.​—⁠ஏசா. 48:17; மத். 24:45-47.

தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும் ஊழியக் கூட்டத்திலும் கைதட்டுவதைக் குறித்து என்ன சொல்லலாம்? மாணாக்கர் முதன்முறையாக பள்ளியில் பேச்சுக்கொடுத்த பிறகோ இதுபோன்ற சந்தர்ப்பங்களிலோ இயல்பாகவே கைதட்டுகிறோம்; இப்படிச் செய்யக்கூடாதென்று எந்தச் சட்டமும் இல்லை. இருப்பினும், கைதட்டுவது இயந்திரத்தனமாக ஆகி, அர்த்தமற்றதாக மாறிவிடலாம். அதனால்தான், ஒவ்வொரு பேச்சுக்குப் பிறகும் நாம் கைதட்டுவதில்லை.

தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும் ஊழியக் கூட்டத்திலும் கொடுக்கப்படும் பெரும்பாலான பேச்சுகளுக்கு நாம் கைதட்டுவதில்லை; இருந்தாலும், அங்கே கொடுக்கப்படும் அறிவுரைகளுக்கும் பேச்சுக்களைத் தயாரித்து அளிக்க சகோதரர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கும் நாம் எல்லாருமே வேறு விதங்களில் நன்றி தெரிவிக்கலாம். பேச்சாளர்கள் பேச்சுக்கொடுக்கும்போது மனதை அலைபாயவிடாமல் கூர்ந்து கவனிப்பதன்மூலம் நன்றியை வெளிக்காட்டலாம். கூட்டம் முடிந்த பிறகு, அவர்கள் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி நேரில் அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கலாம்.​—⁠எபே. 1:15, 16.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்