உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/08 பக். 7-8
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2008
நம் ராஜ்ய ஊழியம்—2008
km 4/08 பக். 7-8

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கலாம். சபைக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொள்ளாமல், நினைவு ஆசரிப்புக்கும் விசேஷ பொதுப் பேச்சுக்கும் மட்டுமே வந்திருந்த ஆர்வமுள்ள புதியவர்களை மீண்டும் சந்திப்பதற்கு விசேஷ முயற்சி எடுக்கப்படும். அவர்களில் யாருக்காவது பைபிள் படிப்பு நடத்தப்படவில்லை என்றால், பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து, ஒரு படிப்பை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் அவர்களைச் சந்திக்க வேண்டும். ஜூன்: கடவுளைத் தேடி அல்லது பைபிள்​—⁠கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்) புத்தகத்தை அளியுங்கள். சபையில் இந்தப் புத்தகங்கள் இல்லையென்றால், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்தைக் கொடுக்கலாம்.

◼ 2008 மே மாதத்திற்குள் மாவட்ட மாநாட்டு பேட்ஜ் கார்டுகள் சபைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இவற்றை சபைகள் தங்களுடைய பொதுவான மொழியில் பெற்றுக்கொள்ளும்; சபையிலுள்ள பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாகவே இவை சபைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, வேறு மொழிகளில் தேவைப்பட்டாலோ கூடுதலாகத் தேவைப்பட்டாலோ மட்டுமே இதற்காகக் கேட்டெழுத வேண்டும். இப்படிக் கூடுதலான பேட்ஜ் கார்டுகள் சபைக்குத் தேவைப்பட்டால், அவற்றை லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) கிளை அலுவலகத்திற்குக் கேட்டெழுத வேண்டும்.

◼ ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205-TL), துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205b-TL) ஆகிய படிவங்கள் போதுமானளவு கைவசம் இருக்கும்படி சபை செயலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) கேட்டெழுத வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குத் தேவையான அளவு படிவங்களை வைத்திருங்கள். ஒழுங்கான பயனியர் விண்ணப்ப படிவங்களை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன் அவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

◼ நடத்தும் கண்காணிகள், செயலர்கள் அனைவருடைய சரியான விலாசங்களையும், தொலைபேசி எண்களையும் கிளை அலுவலகம் கைவசம் வைத்திருப்பது அவசியம். ஆகவே, இவற்றில் எப்பொழுது மாற்றம் ஏற்பட்டாலும், நடத்தும் கண்காணி/செயலர் விலாச மாற்றம் படிவத்தை (S-29) சபை ஊழியக் குழு முழுமையாகப் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு உடனடியாக கிளை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். STD கோடு மாற்றத்துக்கும் இது பொருந்தும்.

◼ சொந்தமாக வேறொரு நாட்டிற்குப் பயணிக்கும்போது சபை கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளத் திட்டமிடுகையில் அவற்றின் தேதிகள், நேரங்கள், இடங்கள் சம்பந்தமாகத் தகவல் கேட்டு நீங்கள் எழுதும் கடிதங்களை அந்நாட்டின் ஊழியத்தை மேற்பார்வை செய்யும் கிளை அலுவலகத்திற்கே அனுப்ப வேண்டும். கிளை அலுவலக விலாசங்கள் அந்தந்த ஆண்டுக்கான இயர் புக்கின் கடைசி பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

◼ பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதி எல்லா சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். எப்போதும் அவற்றை எடுத்துச் சென்று புதிய பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் பயன்படுத்துங்கள். எதிர்ப்பை சந்திக்கும் இடங்களில் வீட்டுக்காரருக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதை முதலாவது தெரிந்துகொண்டு, பொருத்தமாக இருந்தால் இந்தத் துண்டுப்பிரதியை அளியுங்கள்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

பைபிள் கலந்துரையாடலை ஆரம்பித்து நடத்துவது எப்படி ​—⁠வங்காலி

என்னுடைய பைபிள் கதை புத்தகம்​—⁠கேள்விகள் ​—⁠குஜராத்தி, மராத்தி, வங்காலி

சபை புத்தகப் படிப்பில் பயன்படுத்துவதற்காக மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகளடங்கிய சிறுபுத்தகத்தைப் போதுமானளவு தருவிக்கும்படி சபைகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. ஏப்ரல் மாத பிரசுர ஆர்டரில் இதையும் சேர்த்துக்கொள்ளவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்