தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 28, 2008-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மார்ச் 3 முதல் ஏப்ரல் 28, 2008 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது.
பேச்சு பண்புகள்
1. நியமிக்கப்பட்ட பொருளைச் சுற்றியே நம் பேச்சைத் தயாரிப்பது ஏன் முக்கியம்? இதை எப்படிச் செய்யலாம்? [be-TL பக். 234 பாரா 1–பக். 235 பாரா 1]
2. நாம் போதிக்கும்போது கேள்விகள் மிக முக்கியமானவையாய் இருப்பது ஏன்? [be-TL பக். 236 பாரா. 1-5]
3. ஒரு பொருளில் நியாயங்காட்டிப் பேசுவதற்குக் கேள்விகள் எவ்வாறு உதவக்கூடும்? [be-TL பக். 237 பாரா 3–பக். 238 பாரா 1]
4. நாம் போதிக்கும்போது, செவிசாய்ப்போரின் உள்ளத்திலுள்ள உணர்ச்சிகளை வெளிக்கொணருவதற்கென்று கேள்விகளைத் திறம்படப் பயன்படுத்துவது ஏன் முக்கியம்? (நீதி. 20:5; மத். 16:13-16; யோவா. 11:26) [be-TL பக். 238 பாரா. 3-5]
5. நாம் போதிக்கும்போது உவமைகளைப் பயன்படுத்துவது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது? (ஆதி. 22:17; எரே. 13:11) [be-TL பக். 240 பாரா. 1-3]
பேச்சு நியமிப்பு எண் 1
6. கடவுளுடைய ராஜ்யத்தில் வாழ உதவும் என்ன சில நியமங்கள் மாற்கு எழுதிய சுவிசேஷத்தில் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன? [si-TL பக். 186 பாரா 32]
7. இன்று கடவுளுடைய ஊழியர்களுக்குப் பரிசுத்த ஆவி எவ்வாறு உதவுகிறது? (யோவா. 14:25, 26) [be-TL பக். 19 பாரா. 2-3]
8. வாசிப்பதால் வரும் மிகப் பெரிய நன்மை என்ன? [be-TL பக். 21 பாரா 3]
9. படிப்பில் என்னவெல்லாம் உட்பட்டுள்ளது? [be-TL பக். 27 பாரா 3–பக். 28 பாரா 1]
10. எபிரெய வேதாகமம் கடவுளுடைய ஆவியின் தூண்டுதலால்தான் எழுதப்பட்டது என்ற நம்பிக்கையை வலுப்படுத்த லூக்கா சுவிசேஷம் நமக்கு எப்படி உதவுகிறது? [si-TL பக். 192 பாரா. 30-1]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. “நல்ல போதகரே” என்று தன்னை ஒருவன் அழைத்தபோது, இயேசு ஏன் திருத்திக் கூறினார்? (மாற். 10:17, 18) [w-TL08 2/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—மாற்கு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்”]
12. இஸ்ரவேல் தேசம் சம்பந்தமாக எதை விளக்குவதற்கு அத்திமரத்தை உதாரணமாக இயேசு பயன்படுத்தினார்? (மாற். 11:12-14, 20, 21) [w-TL03 5/15 பக். 26 பாரா. 2-3]
13. மரியாளின் மேல் பரிசுத்த ஆவி வரும், உன்னதமானவருடைய பலம் அவள்மேல் நிழலிடும் என்று குறிப்பிட்ட காபிரியேல் தூதன், அதன் மூலம் அவள் “கர்ப்பவதி” ஆவாள் என்று சொன்ன வார்த்தை எதைக் குறிப்பிட்டுக் காட்டியது? (லூக். 1:30, 31, 34, 35) [w-TL08 3/15 “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது—லூக்கா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்”; it-2 பக். 56 பாரா 2]
14. உண்மையாகவே, ‘ஓய்வுநாளில் செய்யத்தகாததை’ இயேசுவின் சீஷர்கள் செய்தார்களா? (லூக். 6:1, 2) [gt-TL அதி. 31]
15. மார்த்தாளுக்கு இயேசு கொடுத்த புத்திமதியிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (லூக். 10:40-42) [w-TL99 9/1 பக். 31]