ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜனவரி 14-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அனுகுமுறைகளையோ பயன்படுத்தி ஜனவரி-மார்ச் காவற்கோபுரத்தையும் ஜனவரி-மார்ச் விழித்தெழு!வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “ஊழியத்திற்காக ஒதுக்கிய நேரத்தை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.”a வெளி ஊழியக் கூட்டத்தைத் திறம்பட நடத்துவதிலும் ஊழியத்தில் முன்நின்று வழிநடத்துவதிலும் முன்மாதிரியாகத் திகழ்கிற ஒரு சகோதரரைப் பேட்டி காணுங்கள். ஊழியக் கூட்டத்திற்காகத் தயாரிப்பதற்கும் சகோதர சகோதரிகள் ஊழியத்திற்காக ஒதுக்கிய நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் அவர் எப்படி உதவுகிறார்?
20 நிமி: ‘உங்கள் வசனம் எப்பொழுதும் உப்பால் சாரமேறினதாய் இருப்பதாக.’b பாரா 2-ஐ கலந்தாலோசிக்கையில், யோவான் 4:7-15, 39-ஐ வாசியுங்கள்.
ஜனவரி 21-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பிப்ரவரி மாத பிரசுர அளிப்பைக் குறிப்பிட்டு, அதை அளிக்கிற ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். பிப்ரவரி 4-ல் துவங்கும் வாரத்திற்கான ஊழியக் கூட்டத்தில் உடல்நல பராமரிப்புக்கான இரத்தமில்லா மாற்று சிகிச்சை—நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல் என்ற ஆங்கில வீடியோ கலந்தாலோசிக்கப்படும்; அதைத் தயாரிப்பதற்கு வசதியாக அந்த வீடியோவைப் பார்த்து வரும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தைப் பயன்படுத்துகிறீர்களா? தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—2008-ன் முகவுரையிலிருந்து பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். ஒவ்வொரு நாளும் தினவசனத்தையும் குறிப்புகளையும் சிந்திப்பதற்குச் சில நிமிடங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியத்தைக் கலந்தாலோசியுங்கள். தினவசனத்தை வழக்கமாகச் சிந்திக்கும் விதத்தைப் பற்றியும் அதனால் அடைந்த நன்மைகளைப் பற்றியும் குறிப்புகள் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். குறிப்புகளைச் சொல்லும்படி ஓரிரு பிரஸ்தாபிகளை முன்னதாகவே ஏற்பாடு செய்யலாம். 2008-ஆம் ஆண்டிற்கான வருடாந்தர வசனத்தைச் சுருக்கமாகச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
25 நிமி: “தைரியத்தோடும் விவேகத்தோடும் ஊழியம் செய்யுங்கள்.”c இந்த உட்சேர்க்கையிலுள்ள 1-13 பாராக்களை சபையாருடன் ஒரு மூப்பர் கலந்தாலோசிக்கிறார். இப்பகுதியை சபையில் கலந்தாலோசிப்பதற்கு முன், உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதிலுள்ள விஷயங்களை எந்தளவுக்குக் கடைப்பிடிக்கலாம் என்பதை மூப்பர்கள் கலந்துபேச வேண்டும்.
ஜனவரி 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி மாத ஊழிய அறிக்கைகளை கொடுக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். ஜனவரி-மார்ச் காவற்கோபுரம் மற்றும் ஜனவரி-மார்ச் விழித்தெழு!-வின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. இரண்டு இதழிலிலும் உள்ள விஷயங்களை சுருக்கமாகச் சொன்ன பிறகு, பிராந்தியத்திலுள்ள ஆட்களின் ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகள் எவை என்றும் அவை ஏன் ஆர்வத்தைத் தூண்டுவதாய் இருக்கின்றன என்றும் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். கட்டுரைகளிலிருந்து எந்தக் குறிப்புகளை எடுத்துக்காட்ட திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். உரையாடலைத் துவங்குவதற்கு என்ன கேள்வியைக் கேட்கலாம்? அதன் பிறகு கட்டுரையிலுள்ள எந்த வசனத்தை வாசிக்கலாம்? அந்த வசனத்திற்கும் அந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? பொருத்தமான ஒரு பிரசங்கத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு பத்திரிகையையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
25 நிமி: “தைரியத்தோடும் விவேகத்தோடும் ஊழியம் செய்யுங்கள்.” இந்த உட்சேர்க்கையிலுள்ள 14-27 பாராக்களின் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. இதை ஒரு மூப்பர் நடத்த வேண்டும். உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விஷயங்களைப் பொருத்துங்கள்.
பிப்ரவரி 4-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டியைக் கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: “பிரஸ்தாபிகளாவதற்கு உங்கள் பைபிள் மாணாக்கருக்கு உதவுங்கள்.”d நேரம் இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்து குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “தள்ளிப் போடுகிறீர்களா?” மூப்பர் கையாளும் பகுதி. கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்தி நோயாளியின் தேவைகளும் உரிமைகளும் வீடியோவைப் பற்றிய கலந்துரையாடலை நேரடியாகத் துவக்குங்கள். முடிவாக, கடைசி பாராவை வாசியுங்கள்; காவற்கோபுரத்திலிருந்தும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்தும் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரைகளை கவனமாக மறுபார்வை செய்யும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். அவ்வாறு செய்யாதவர்கள், இரத்தத்தின் சிறு கூறுகளையும் மருத்துவ முறைகளையும் குறித்ததில் தனிப்பட்ட விதமாக தீர்மானம் எடுப்பதற்கு நம் ராஜ்ய ஊழியம் நவம்பர் 2006 உட்சேர்க்கையில் உள்ள வினாப்பட்டியலைப் பயன்படுத்தலாம்; அதன் பிறகு, நீங்கள் என்ன தெரிவு செய்திருக்கிறீர்கள் என்பதை DPA அட்டையில் எழுதலாம் என்பதை விளக்குங்கள். DPA அட்டையை ஏற்கெனவே பூர்த்தி செய்தவர்கள், ஒருவேளை தங்களுடைய தெரிவுகளை மாற்ற விரும்பலாம்; அப்படியானால், அவர்கள் புதிய அட்டையைப் பூர்த்தி செய்யலாம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு..
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு..
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு..