ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 10-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: “இன்டர்நெட்—ஜாக்கிரதை!” நவம்பர் 1999 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் பாராக்கள் 10-18 மற்றும் 27-36 ஆகியவற்றின் அடிப்படையில் திறம்பட்ட மூப்பர் நடத்தும் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பாராக்கள் 12, 13, 18 ஆகியவற்றை வாசிக்கவும்.
20 நிமி: “இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.”a மற்றவர்களுடைய நல்ல முன்மாதிரியிலிருந்து பயன் அடைந்த விதத்தைப்பற்றிச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 130, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ செப்டம்பர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் செப்டம்பர் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். ஒரேவொரு பத்திரிகையைக் காட்டி விளக்கினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே அளிப்பதுபோல் ஒவ்வொரு நடிப்பும் இருக்க வேண்டும்.
15 நிமி: கடந்த வருடத்தில் எப்படி ஊழியம் செய்தோம்? கடந்த ஊழிய ஆண்டில் முக்கியமாக, ஊழியத்தில் சாதித்த ஊக்கமூட்டுகிற அம்சங்களை ஊழியக் கண்காணி கலந்தாலோசிக்கிறார். பொருத்தமான பாராட்டுதலைத் தெரிவியுங்கள். இந்த ஊழிய ஆண்டில் கவனம் செலுத்த வேண்டிய ஓரிரு அம்சங்களைக் குறிப்பிடுங்கள். பயனியர்கள் செய்துவருகிற வேலையைப்பற்றி குறிப்பிடுங்கள், முழுமூச்சோடு அவர்கள் ஊழியத்தில் ஈடுபடுவதைப் பாராட்டுங்கள். செயலற்றவர்களுக்கு உதவ முயற்சி எடுத்தபோது கிடைத்த நல்ல பலன்களைக் குறிப்பிடுங்கள்.
20 நிமி: ஓர் ஐக்கியப்பட்ட சகோதரத்துவம். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் அதிகாரம் 16-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
பாட்டு 74, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 24-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள்.
15 நிமி: கேள்விப் பெட்டி. இதை சபையாருடன் மூப்பர் கலந்தாலோசிக்கிறார். நேரம் இருந்தால் அங்கு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை பைபிளிலிருந்து வாசித்து, கலந்தாலோசியுங்கள்.
20 நிமி: அக்டோபர் மாதத்தில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க, பைபிளை தெரிந்துகொள்ளுங்கள் துண்டுப்பிரதியைப் பயன்படுத்துங்கள். அக்டோபர் மாதத்தில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்போம். ஆர்வம் காட்டுபவர்களிடம் பைபிளை தெரிந்துகொள்ளுங்கள் துண்டுப்பிரதியிலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம். இந்தத் துண்டுப்பிரதி சபையின் கையிருப்பில் இருந்தால் எல்லாருக்கும் ஒரு பிரதியை அட்டன்டண்டு வினியோகித்த பிறகு, அதிலுள்ள தகவல்களைச் சுருக்கமாய் சிந்திக்கலாம். முதல் சந்திப்பில் அல்லது மறுசந்திப்பில் அந்தத் துண்டுப்பிரதியை முழுமையாகவோ ஒரு பகுதியையோ வீட்டுக்காரருடன் சிந்திக்கலாம் என்பதை விளக்குங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ அக்டோபர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அக்டோபர் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். ஒரு நடிப்பில், பத்திரிகைகளை வீட்டுக்காரர் ஏற்றுக்கொள்ளாதபோது பிரஸ்தாபி துண்டுப்பிரதியைக் கொடுத்துவிட்டு வருகிறார். மற்றொரு நடிப்பில், பத்திரிகைகளை வீட்டுக்காரர் ஏற்றுக்கொண்ட பிறகு பிரஸ்தாபி துண்டுப்பிரதியைக் கொடுக்கிறார்; பக்கம் 5-லுள்ள தகவலை அவருக்கு விளக்குகிறார், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலுள்ள பொருளடக்கத்தைக் காட்டி, இந்தப் புத்தகம் பைபிள் படிப்புக்கென்றே தயாரிக்கப்பட்டிருப்பதாக விளக்குகிறார். அடுத்த முறை வரும்போது அந்தப் புத்தகத்தைக் கொண்டுவருவதாகச் சொல்கிறார்.
பாட்டு 222, முடிவு ஜெபம்.
அக்டோபர் 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அறிவிப்புகள். செப்டம்பர் மாத ஊழிய அறிக்கையைக் கொடுக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
15 நிமி: சங்கத்திலிருந்து வந்த கடிதம். இந்த மாத நம் ராஜ்ய ஊழியத்தின் முதல் பக்கத்தில் காணப்படும் கடிதத்தின்பேரில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். கடந்த வருடம் “மீட்பு விரைவில்!” மாவட்ட மாநாட்டிற்கான அழைப்பிதழை அல்லது இந்த வருட நினைவுநாள் ஆசரிப்புக்கான அழைப்பிதழை வினியோகித்தபோது கிடைத்த அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “காவற்கோபுரத்தில் மனதை மகிழ்விக்கும் மாற்றங்கள்!”b
பாட்டு 189, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.