ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 13-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ ஆகஸ்ட் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் ஆகஸ்ட் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நம் ராஜ்ய ஊழியத்தின் இந்த இதழில் பக்கம் 3 பாரா 3-ல் உள்ள குறிப்பு ஒன்றைப் பயன்படுத்தும் விதமாக ஒரு நடிப்பு இருக்கட்டும். பிரஸ்தாபி அதிலுள்ள ஒரு கேள்வியை தெரிவித்துவிட்டு, அடுத்த முறை வரும்போது அதற்கு பதிலளிப்பதாகச் சொல்கிறார். “புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி” பகுதியைக் கலந்துரையாடுங்கள். அடுத்த வட்டார மாநாட்டின் தேதியை அறிந்திருந்தால் அதைத் தெரியப்படுத்துங்கள்.
15 நிமி: தேவராஜ்ய ஏற்பாட்டிற்குக் கீழ்ப்பட்டிருப்பதால் நன்மையடைதல். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில், அதிகாரம் 15-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
15 நிமி: “குடும்பமாக யெகோவாவைத் துதியுங்கள்.”a குடும்பமாக ஊழியத்தில் கலந்து கொள்வதால் எவ்வாறு பயனடைந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கும்படி சபையாரிடம் கேளுங்கள். பதில் சொல்லும்படி ஓரிரண்டு பேரிடம் முன்கூட்டியே சொல்லி வையுங்கள்.
பாட்டு 48, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 20-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். “புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி” பகுதியின் கலந்துரையாடல். அடுத்த விசேஷ மாநாட்டு தினத்தின் தேதியை அறிந்திருந்தால் அதைத் தெரியப்படுத்துங்கள்.
15 நிமி: .செப்டம்பர் மாதத்தின்போது முதல் சந்திப்பிலேயே ஒரு வீட்டு பைபிள் படிப்பைத் துவங்குங்கள். சபையாருடன் கலந்துரையாடல். செப்டம்பரில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை நாம் ஊழியத்தில் அளிப்போம்; அதோடு முதல் சந்திப்பிலேயே வீட்டுக்காரருடன் ஒருசில பாராக்களை கலந்துபேச முயலுவோம். ஜனவரி 2006 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை மறுபார்வை செய்யுங்கள். முதல் சந்திப்பிலேயே எவ்வாறு பைபிள் படிப்பைத் துவங்குவது என்பதைக் காட்டுகிற ஓரிரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “சபை புத்தகப் படிப்பு ஏற்பாடு நமக்கு எப்படி உதவுகிறது.”b பாரா 5-ஐக் கலந்தாலோசிக்கையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 41, பாரா 3-ல் உள்ள குறிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 6, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 27-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ செப்டம்பர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் செப்டம்பர் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
10 நிமி: ‘அநீதியான உலகப்பொருளால் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.’ காவற்கோபுரம், டிசம்பர் 1, 1994, பக்கங்கள் 13-18-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
25 நிமி: “புதிய ஊழிய ஆண்டுக்கான மெச்சத்தக்க இலக்கு.”c சமீபத்தில் துணைப் பயனியராக சேவை செய்த ஓரிருவரை பேட்டி காணுங்கள். தங்கள் அட்டவணையில் அவர்கள் என்னென்ன மாற்றங்களைச் செய்தார்கள்? அவர்கள் எவ்வாறு பயனடைந்தார்கள்? சாத்தியமானால், இவ்வாறு பேட்டி காணப்படுகிற ஒருவர் தன்னுடைய குடும்பத்தினரின் ஆதரவோடும் உதவியோடும் துணைப் பயனியர் செய்தவராக இருக்கட்டும். பாரா 9-ஐ கலந்துரையாடும்போது, வட்டாரக் கண்காணியின் அடுத்த சந்திப்புக்கான தேதிகளை அறிந்திருந்தால் அதைக் குறிப்பிடுங்கள்.
பாட்டு 196, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். ஆகஸ்ட் மாத ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள்.
15 நிமி: “நாம் பெற்ற அரும் பாக்கியங்களை நெஞ்சார நேசிக்கிறோம்!”d நேரம் அனுமதிக்குமானால், மேற்கோள் காட்டப்படாத வசனங்களின்பேரில் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “பத்திரிகைகளைப் பெற்றுக் கொண்டவர்களிடம் பைபிள் படிப்பைத் துவங்குவது எப்படி?” e பாரா 2-ல் உள்ள குறிப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தி சுருக்கமான நடிப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள். பைபிள் படிப்பை ஆரம்பித்து இரண்டு முறை நடத்திய பிறகு, அப்படிப்பு தொடருமென்ற நம்பிக்கை இருந்தால், அதை அறிக்கை செய்யலாமென்று பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
பாட்டு 2, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.