தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 27, 2007-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜூலை 2 முதல் ஆகஸ்ட் 27, 2007 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது.
பேச்சு பண்புகள்
1. நாம் ஊழியத்திலும் சபையிலும் மற்றவர்களுக்கு எப்படி மரியாதை காட்டலாம்? [be-TL பக். 192 பாரா. 2-4]
2. நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நாம் பேசுவதற்கு எது அவசியம்? [be-TL பக். 196 பாரா. 1-3]
3. மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்கையில் சாதுரியமாகப் பேச உதவும் சில குறிப்புகள் யாவை? [be-TL பக். 198 பாரா 1–பக். 199 பாரா 1]
4. மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்கும்போது, ஏற்ற சமயத்தில் பேசுவது சாதுரியமாக நடந்துகொள்ள எவ்வாறு உதவுகிறது? (நீதி. 25:11) [be-TL பக். 199 பாரா. 2-4]
5. நம் பேச்சை நம்பிக்கையூட்டும் விதத்தில் எப்படி அளிக்கலாம்? [be-TL பக். 203 பாரா 3–பக். 204 பாரா 1]
பேச்சு நியமிப்பு எண் 1
6. எசேக்கியேல் புத்தகத்தை எசேக்கியேல்தான் எழுதினார் என்பதைப் பற்றியும், அதன் நம்பகத்தன்மை மற்றும் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் அது இடம் பெறுவதைப் பற்றியும் என்ன சொல்லப்படலாம்? [si-TL பக். 133 பாரா 3]
7. அநியாயத்தைச் சகிக்க ஒரு நபருக்கு அவசியமான குணம் எது? [w-TL05 6/1 பக். 29 பாரா 4]
8. உயிர்த்தெழுதலைக் குறித்து கேள்வி எழுப்பிய சதுசேயருக்கு இயேசு அளித்த பதிலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (லூக். 20:37, 38) [be-TL பக். 66 பாரா 4]
9. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தான் என்ன செய்ய வேண்டுமென்று பைபிள் மாணாக்கரோ உடன் கிறிஸ்தவரோ உங்களிடம் கேட்டால் நீங்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? [be-TL பக். 69 பாரா. 4-5]
10. ‘உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாவதில்’ என்ன உட்பட்டிருக்கிறது? (எபே. 4:23) [be-TL பக். 74 பாரா 4]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. எசேக்கியேல் 9:2-4-ல், சணல்நூல் அங்கிதரித்த மனிதன் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறான், “நெற்றிகளில் அடையாளம்” போடுவது, அதாவது “குறி” போடுவது எதைச் சுட்டிக்காட்டுகிறது? [w-TL88 11/1 பக். 14 பாரா 18]
12. எசேக்கியேல் 13:3-ல் விவரிக்கப்பட்டிருக்கிறபடி, கிறிஸ்தவமண்டலத்திலுள்ள மதத் தலைவர்கள் எவ்வாறு ‘தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றின மதிகெட்ட தீர்க்கதரிசிகளைப்’ போல் இருக்கிறார்கள்? [w-TL99 10/1 பக். 13]
13. எசேக்கியேல் 18:2-ல் பதிவாகியுள்ள “பழமொழி”யைச் சொல்வதன்மூலம் இஸ்ரவேலர் என்ன செய்ய முற்பட்டார்கள், கணக்கு கொடுப்பது சம்பந்தமாக என்ன முக்கியமான பாடம் சிறப்பித்துக் காட்டப்படுகிறது? [w-TL88 11/1 பக். 18 பாரா 10]
14. எருசலேம் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்ட காலப்பகுதியில் எசேக்கியேல் எந்த அர்த்தத்தில் ‘மௌனமானார்’ அல்லது ‘ஊமையானார்’? (எசே. 24:27; 33:22) [w-TL03 12/1 பக். 29]
15. “மாகோகு தேசத்தானான கோகு” யார், அவன் எப்போது யெகோவாவின் ஜனங்களைத் தாக்க முற்படுவான்? (எசே. 38:2, 16) [w-TL97 3/1 பக். 14 பாரா 1–பக். 15 பாரா 3]