உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/07 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2007
நம் ராஜ்ய ஊழியம்—2007
km 7/07 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜூலை, ஆகஸ்ட்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, விழிப்புடன் இருங்கள்!, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்). வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் ஆகிய 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பு ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டுக்காரரிடம் இந்தப் புத்தகம் ஏற்கெனவே இருந்தால், அதிலிருந்து எப்படி பயனடையலாம் என்பதை ஒரு சுருக்கமான பைபிள் படிப்பை நடத்துவதன் மூலம் காட்டுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிக்கைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களிடம், பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியைக் அளித்து, பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் நோக்கோடு அதிலிருந்து கலந்தாலோசியுங்கள்.

◼ செப்டம்பர் மாதத்தில் ஐந்து சனி, ஞாயிறுகள் இருப்பதால், துணைப் பயனியர் சேவை செய்ய அது மிகச் சிறந்த மாதம்.

◼ செப்டம்பர் மாதத்திலிருந்து வட்டாரக் கண்காணிகள் கொடுக்கவிருக்கும் பொதுப் பேச்சின் தலைப்பு, “எது பைபிளை நம்பத்தக்கதெனக் குறித்துக் காட்டுகிறது?”

◼ எந்தத் தேதியிலிருந்து ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்கிறார்களோ அந்தத் தேதியிலிருந்து 30 நாட்கள் முன்பாகவாவது கிளை அலுவலகத்திற்கு அவர்களுடைய விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். அவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதைச் சபை செயலர் உறுதிசெய்துகொள்ள வேண்டும். விண்ணப்பதாரருக்கு அவர் முழுக்காட்டுதல் எடுத்த தேதி சரியாக நினைவில்லாதிருந்தால் உத்தேசமாக ஒரு தேதியை எழுத வேண்டும், அதை அவர் குறித்தும் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தேதியை செயலர், சபை பிரஸ்தாபியின் பதிவு (S-21-TL) அட்டையில் குறித்து வைக்க வேண்டும்.

◼ தகுதி வாய்ந்த பிரஸ்தாபிகளும் பயனியர்களும், தங்கள் நகரத்திற்கு அருகிலுள்ள அல்லது வேறு இடத்திலுள்ள அவ்வளவாக ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்திற்கு இடமாறிச் சென்று பிரசங்கிக்க முடியும் என்று நினைப்பவர்களும் அப்படி போக ஆர்வமாக இருப்பவர்களும் தங்களுடைய விருப்பத்தைப்பற்றி வட்டார கண்காணியிடமும் சபையின் ஊழியக் குழுவிடமும் பேசலாம். அவர்கள் அதற்கு தகுதிவாய்ந்தவர்களா இல்லையா என்பதை ஊழியக் குழு கிளை அலுவலகத்திற்கு எழுதுவார்கள். (od-TL பக்கம் 111 பாரா 1 முதல் 112 பாரா 1 வரை பார்க்கவும்)

◼ முடிந்தவரை ஆகஸ்ட் 31, 2007 தேதிக்குள், கையிருப்பிலுள்ள எல்லா பிரசுரங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் வருடாந்தர இன்வென்ட்ரி எடுக்க வேண்டும். பிரசுர ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொரு மாதமும் எண்ணிக்கையைச் சரிபார்ப்பதைப் போலவே இதையும் சரிபார்த்து மொத்த எண்ணிக்கையை லிட்ரேச்சர் இன்வென்ட்ரி (S-18) ஃபார்மில் எழுத வேண்டும். கையிருப்பிலுள்ள மொத்த பத்திரிகைகளின் எண்ணிக்கையைப் பத்திரிகை ஊழியர்(கள்) வாயிலாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருங்கிணைப்பு சபையின் செயலர், இன்வென்ட்ரி எடுப்பதை மேற்பார்வை செய்ய வேண்டும். அவரும் ஒருங்கிணைப்பு சபையின் நடத்தும் கண்காணியும் ஃபார்மில் கையொப்பமிடுவார்கள். ஒவ்வொரு ஒருங்கிணைக்கும் சபைக்கும் மூன்று லிட்ரேச்சர் இன்வென்ட்ரி ஃபார்ம்கள் அனுப்பி வைக்கப்படும். தயவுசெய்து செப்டம்பர் 6-ம் தேதிக்குள் ஒரிஜினலை சொஸைட்டிக்கு அனுப்பவும். நகல் ஒன்றை உங்களுடைய ஃபைல்களில் வைத்துக்கொள்ளவும். மூன்றாவது நகலை ‘ஒர்க்’ ஷீட்டாக பயன்படுத்திக் கொள்ளவும்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ​—⁠ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பெங்காளி, மராத்தி, மலையாளம், ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்