ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூன் 11-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ ஜூன் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், ஜுன் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
15 நிமி: கடவுளுடைய வார்த்தையை கற்பிக்க முற்றிலும் தயாராயிருத்தல். பிப்ரவரி 15, 2002, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 24-8-ன் அடிப்படையில் பேச்சு. ஆர்வம் காட்டுகிறவர்களிடம் பைபிள் படிப்பை ஆரம்பிக்க சில கிறிஸ்தவர்கள் தயங்குகிறார்கள். ஏனெனில் பைபிள் படிப்பு நடத்தும் அளவுக்கு அவர்களுக்கு தகுதியில்லை என்று நினைக்கிறார்கள். எனினும் தம்முடைய வார்த்தையாகிய பைபிள், பரிசுத்த ஆவி, அமைப்பு ஆகியவற்றின்மூலம் யெகோவா நம்மை ஊழியர்களாக தகுதி பெற செய்கிறார். பத்திரிக்கைகளை விட்டு செல்வது மட்டுமல்ல நம்முடைய நோக்கம். ஆனால் அவர்களுக்கு போதிப்பதற்காக நாம் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். (மத். 28:19, 20) பைபிள் படிப்பு ஆரம்பிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில், அதிகாரம் 13-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
பாட்டு 144, முடிவு ஜெபம்.
ஜூன் 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்
15 நிமி: “பற்பல மொழிகளில் துண்டுப்பிரதிகள் அடங்கிய கட்டுகள்.” சபையாரோடு கலந்தாலோசிப்பு. உங்களுடைய பிராந்தியத்திற்கு ஏற்றவிதமாக எந்தெந்த மொழிகளில் துண்டுபிரதிகள் அடங்கிய கட்டுகள் கிடைக்கும் என்பதை சபையாருக்கு தெரிவியுங்கள். இந்தத் துண்டுப்பிரதிகளை எப்போதும் வைத்திருக்க பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “யெகோவாவின் சேவையில் மும்முரமாக ஈடுபடுவதில் நமக்கு எத்தனை மகிழ்ச்சி!”a நேரம் இருப்பதைப் பொறுத்து, கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின் பேரில் குறிப்புகள் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 82, முடிவு ஜெபம்.
ஜூன் 25-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ ஜூலை 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் ஜூலை மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “‘பெரிதும் அநுகூலமுமான கதவு’ வழியாக உங்களால் பிரவேசிக்க முடியுமா?”b ஒன்று அல்லது இரண்டு ஒழுங்கான பயனியர்களைச் சுருக்கமாக பேட்டி காணுங்கள். ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய அவர்கள் என்ன மாற்றங்களைச் செய்தார்கள்? அதனால் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்?
பாட்டு 138, முடிவு ஜெபம்.
ஜூலை 2-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜூன் மாத ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். ஜூலை மாதத்திற்கான பிரசுர அளிப்புகளைப்பற்றி குறிப்பிடுங்கள். ஒரு அளிப்பை நடித்துக்காட்ட செய்யுங்கள்.
15 நிமி: சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல்—நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு ஒரு முக்கியமான முறை. யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில், பக்கங்கள் 101-2-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு சில நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுங்கள். சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது கிடைத்த உற்சாகமூட்டும் அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “தொடர்ந்து ‘மிகுந்த கனிகளைக் கொடுங்கள்’”c பாரா 4-ஐ கலந்தாலோசிக்கையில், பிப்ரவரி 1, 2003 காவற்கோபுரம் பக்கம் 21-ல் “‘பொறுமையோடு கனி கொடுப்பது’ எவ்வாறு” என்ற பெட்டியில் காணப்படும் குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 69, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.