தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜூன் 25, 2007-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் மறுபார்வைக் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மே 7 முதல் ஜூன் 25, 2007 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. பேசும்போது நம் குரல் நயத்தை முன்னேற்றுவிப்பதற்காக டென்ஷனைக் குறைக்க என்ன செய்யலாம்? [be-TL பக். 184 பாரா 3- பக். 185 பாரா 2]
2. நம் ஊழியத்தில் நாம் எவ்வாறு ‘எல்லாருக்கும் எல்லாமாகலாம்’? (1 கொ. 9:20-23) [be-TL பக். 186 பாரா. 2-4]
3. மற்றவர்களுக்குச் செவிகொடுத்துக் கேட்பதில் யெகோவாவின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (ஆதி. 18:23-33; 1 இரா. 22:19-22) [be-TL பக். 187 பாரா. 1-2, 5]
4. மற்றவர்கள் ஆன்மீக ரீதியில் முன்னேற நாம் என்னென்ன நடைமுறையான வழிகளில் உதவலாம்? [be-TL பக். 187 பாரா 6- பக். 188 பாரா 3]
5. மற்றவர்களுக்கு மரியாதை காட்டுவதில் நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்? [be-TL பக். 190 பாரா 3, பெட்டி]
பேச்சு நியமிப்பு எண் 1
6. நாம் கற்பிக்கிறவர்களுடைய இருதயத்தை எட்ட முயலுவது ஏன் அவசியம்? [be-TL பக். 59 பாரா 1]
7. நம்முடைய முன்மாதிரி நாம் போதிக்கிறவர்களை எப்படிப் பாதிக்கிறது? [be-TL பக். 61 பாரா 1]
8. வீட்டில் நம் உரையாடும் திறமைகளை வளர்ப்பது எப்படி? [be-TL பக். 62 பாரா 3]
9. தைரியத்தோடு வைராக்கியமாக இருந்ததன் மூலம் எரேமியா தீர்க்கதரிசி எவ்வாறு நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்? [si-TL பக். 129 பாரா 36]
10. புலம்பல் என்ன நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது, எனினும் துன்மார்க்கர்மீது கடவுளின் கடும் தண்டனையை விவரிப்பதால் இது ஏன் நன்மை பயக்குகிறது? [si-TL பக். 132 பாரா 13]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. ஏரேமியா 37:21-ல் விவரிக்கப்பட்டுள்ள எரேமியாவின் அனுபவத்தின்படி, எதைக் குறித்து நாம் நிச்சயமாய் இருக்கலாம்?
12. யெகோவா ‘நோவை சஞ்சலத்தால் வர்த்திக்கப்பண்ணியதன்’ காரணமாக ‘தவிப்பினால் இளைத்துப்போனதாக’ பாருக் ஏன் சொல்லியிருக்கலாம்? அந்தப் பிரச்சினைக்கு பாருக் உடனடியாக எப்படி பிரதிபலித்தார்? (எரே. 45:1-5)
13. பாபிலோன் குடியற்றதாகி, ‘முற்றிலும் பாழடைந்துபோவது’ எப்போது? (எரே. 50:13, பொது மொழிபெயர்ப்பு)
14. புலம்பல் 3:8, 9, 42-45-ல் ஜெபத்தைப் பற்றி என்ன நியமம் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது?
15. எசேக்கியேல் முதலாம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ரதம் எதைச் சித்தரிக்கிறது?