ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 14-ல் துவங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். “புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி” பகுதியைக் கலந்தாலோசியுங்கள். விசேஷ மாநாட்டு தினம் நடைபெறவிருக்கும் தேதி தெரிந்தால் அதை அறிவியுங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ ஆகஸ்ட் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், ஆகஸ்ட் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். “யெகோவாவின் சாட்சிகளில் எனக்கு அக்கறையில்லை” என்று சொல்லி, உரையாடலை நிறுத்த முயலுகிறவர்களுக்கு எவ்வாறு பதில் அளிக்கலாம் என்பதைக் காட்டுவதுபோல் ஒரு நடிப்பு இருக்கட்டும்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக். 17-18-ஐக் காண்க.
15 நிமி:“செப்டம்பரில் விசேஷ விழித்தெழு! இதழை அளித்தல்.”a பாரா 4-ஐக் கலந்தாலோசிக்கும்போது, ஓர் இளைஞர் செப்டம்பர் விழித்தெழு! இதழை ஓர் ஆசிரியருக்கு அளிப்பதுபோல் சுருக்கமாக நடித்துக்காட்ட செய்யுங்கள்.
15 நிமி:ஸ்கூல் ஃபிரெண்ட்ஸுடன் எந்தளவு ‘க்ளோஸாக’ பழகலாம்? ஏப்ரல் 2006 விழித்தெழு!-வில் பக்கங்கள் 17-19-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். பள்ளியில் சவால்களைச் சமாளிக்கவும், பைபிள் நியமங்களைப் பின்பற்றவும் சிறுவயதிலிருந்தே தங்கள் கிறிஸ்தவ பெற்றோர் உதவிய விதத்தைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். ஓரிருவர் பதில் அளிக்க முன்கூட்டியே ஏற்பாடு செய்யலாம்.
பாட்டு 164, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 21-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அறிவிப்புகளும். “புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி” பகுதியைக் கலந்தாலோசியுங்கள். வட்டார மாநாடு நடைபெறவிருக்கும் தேதி தெரிந்தால் அதை அறிவியுங்கள்.
15 நிமி:காவற்கோபுர படிப்பிலிருந்தும் பொதுப் பேச்சிலிருந்தும் பயன் அடைதல். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 59 முதல் பக்கம் 64-லுள்ள உபதலைப்புவரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
20 நிமி:துணைப் பயனியர் ஊழியம் செய்ய இப்போதே திட்டமிடுங்கள்! பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். புதிய ஊழிய ஆண்டில் ஒரு மாதமாவது துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு இலக்கு வைக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். (1 கொ. 9:26) விசேஷ ஊழியம் ஏற்பாடு செய்யப்படும் மாதத்தை அல்லது விடுமுறை இருக்கும் மாதத்தை அல்லது வார இறுதி நாட்கள் அதிகமுள்ள மாதத்தைத் துணைப் பயனியர் ஊழியம் செய்ய சிலர் தேர்ந்தெடுக்கலாம். சபையாரிடம் பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்: “முன்பு, துணைப் பயனியர் ஊழியம் செய்தபோது என்னென்ன சவால்களைச் சமாளித்திருக்கிறீர்கள்? துணைப் பயனியர் ஊழியம் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெற்றுத்தரும்? துணைப் பயனியர் ஊழியம் செய்ய ஆசையிருந்து, ஆனால் முடியுமா, முடியாதாவென யோசித்துக்கொண்டிருந்தால் அதை நீங்கள் ஏன் ஜெபத்தில் வைக்க வேண்டும்? (அப். 4:29, 30; 2 கொ. 4:7; யாக். 1:5) நீங்கள் துணைப் பயனியர் ஊழியம் செய்ய விரும்புவதைக் குறித்து உங்கள் குடும்பத்தாரிடமும் சபையிலுள்ள மற்றவர்களிடமும், குறிப்பாக உங்களைப் போன்ற சூழ்நிலையில் இருப்பவர்களிடமும் பேசுவது ஏன் நல்லது? (நீதி. 15:22) எப்போது துணைப் பயனியர் ஊழியம் செய்ய நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள்?”
பாட்டு 216, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடையைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். ஆகஸ்ட் மாத ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ செப்டம்பர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தை அல்லது செப்டம்பர் மாத விழித்தெழு!-வை அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள்; இது, பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவரை மீண்டும் சந்திக்கச் செல்லும்போது அளிப்பதுபோல் இருக்கட்டும்.
15 நிமி:உங்களால் உற்சாகத்தின் உறைவிடமாய் இருக்க முடியும். (ரோமர் 1:10, 11) பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். சபையிலுள்ள ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுங்கள். வாயார பாராட்டுவது, பயனியர் ஊழியத்தின் நன்மைகளைக் குறித்துப் பேசுவது, அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்வது, உணவு அருந்த அழைப்பது, பயண செலவுகளுக்கு உதவி அளிப்பது போன்று அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு இருக்கும் வழிகளைக் குறிப்பிடுங்கள். மற்றவர்களிடமிருந்து எப்படி உற்சாகம் பெற்றிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும்படி ஒழுங்கான பயனியர்களிடம் கேளுங்கள். சபையில் ஒழுங்கான பயனியர்கள் யாரும் இல்லாவிட்டால், துணைப் பயனியர் ஊழியம் செய்பவர்களை நாம் எப்படி உற்சாகப்படுத்தலாம் என்பதைக் கலந்தாலோசியுங்கள்.
20 நிமி:செப்டம்பரில் நீங்கள் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடியுமா? பேச்சும் நடிப்புகளும். செப்டம்பர் மாதத்தில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தி, முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுப்போம். அதாவது, புத்தகத்தை அளிக்கும் சமயத்திலேயே அதிலிருந்து சில பாராக்களை வீட்டுக்காரருடன் கலந்தாலோசிக்கவும் முயற்சி எடுப்போம். சபை பிராந்தியத்திற்குப் பொருத்தமான விஷயங்களைக் கலந்தாலோசிக்கும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். மீண்டும் சந்தித்து, கலந்தாலோசிப்பைத் தொடர திட்டவட்டமான ஏற்பாடுகள் செய்வதை ஒவ்வொரு நடிப்பிலும் காட்டுங்கள்.
பாட்டு 37, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 4-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள்.
15 நிமி:சபை தேவைகள்.
20 நிமி:“தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—பாரபட்சமின்றி பிரசங்கிப்பதன் மூலம்.”b பாரா 2-ன் கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ள ரோமர் 1:14-ஐக் கலந்தாலோசிக்கும்போது, ஆங்கில உட்பார்வை புத்தகத்தில், தொகுதி 1, பக்கம் 255-ல் “அந்நியர்” (Barbarian) என்ற உபதலைப்பின் கீழுள்ள முதல் பாராவிலிருந்து சுருக்கமான குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பாரா 3-ஐக் கலந்தாலோசித்த பிறகு, சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகத்தில், பக்கம் 2-ல் உள்ள மூன்று படிகளை மறுபார்வை செய்யுங்கள்; சபை பிராந்தியத்தில் வேறு மொழி பேசும் ஆட்களிடம் இச்சிறுபுத்தகத்தை எப்படி உபயோகிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட செய்யுங்கள்.
பாட்டு 225, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.