உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/06 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2006
நம் ராஜ்ய ஊழியம்—2006
km 7/06 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஜூலை, ஆகஸ்ட்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், விழிப்புடன் இருங்கள்! ஆகிய 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். சில இடங்களில் பின்வரும் சிற்றேடுகளை அளிப்பது பொருத்தமாய் இருக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) நம்முடைய பிரச்னைகள்​—⁠அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்​—⁠உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), திருப்தியான வாழ்க்கைக்கு வழி. செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பு ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரையும், பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் நோக்கத்தோடு மறுசந்திப்பு செய்யுங்கள். பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தோடு சேர்த்து கொடுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுபவர்கள் பைபிளிலிருந்து கூடுதலான விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஊக்குவிக்கும் விதத்தில், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளியுங்கள்.

◼ செப்டம்பர் மாதத்திலிருந்து வட்டாரக் கண்காணிகள் கொடுக்கவிருக்கும் பொதுப் பேச்சின் தலைப்பு, “கடவுளோடு உங்கள் நிலைநிற்கை என்ன?”

◼ எந்தத் தேதியிலிருந்து ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய விண்ணப்பதாரர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களோ அந்தத் தேதியிலிருந்து 30 நாட்கள் முன்பாகவாவது கிளை அலுவலகத்திற்கு அவர்களுடைய விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். அவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை சபை செயலர் உறுதிசெய்துகொள்ள வேண்டும். விண்ணப்பதாரருக்கு அவர் முழுக்காட்டுதல் எடுத்த தேதி சரியாக நினைவில்லாதிருந்தால் உத்தேசமாக ஒரு தேதியை எழுத வேண்டும், அதை அவர் குறித்தும் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தேதியைச் செயலர், சபை பிரஸ்தாபி அட்டையில் (S-21-TL) குறித்து வைக்க வேண்டும்.

◼ சபையிலுள்ள ஒழுங்கான பயனியர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்க பயனியர் நியமிப்பு கடிதம் (S-202) இருப்பதை செயலர் உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதைக் குறித்து கிளை அலுவலகத்திற்கு அவர் கடிதம் எழுத வேண்டும்.

◼ முடிந்தவரை ஆகஸ்ட் 31, 2006 தேதிக்குள் கையிருப்பிலுள்ள எல்லா பிரசுரங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் வருடாந்தர இன்வென்ட்ரி எடுக்க வேண்டும். பிரசுர ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொரு மாதமும் எண்ணிக்கையை சரிபார்ப்பதைப் போலவே இதையும் சரிபார்த்து மொத்த எண்ணிக்கையை லிட்ரேச்சர் இன்வென்ட்ரி (S-18) ஃபார்மில் எழுத வேண்டும். கையிருப்பிலுள்ள மொத்த பத்திரிகைகளின் எண்ணிக்கையை பத்திரிகை ஊழியர்(கள்) வாயிலாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருங்கிணைப்பு சபையின் செயலர், இன்வென்ட்ரி எடுப்பதை மேற்பார்வை செய்ய வேண்டும். அவரும் ஒருங்கிணைப்பு சபையின் நடத்தும் கண்காணியும் ஃபார்மில் கையொப்பமிடுவார்கள். ஒவ்வொரு ஒருங்கிணைக்கும் சபைக்கும் மூன்று லிட்ரேச்சர் இன்வென்ட்ரி (S-18) ஃபார்ம்கள் அனுப்பி வைக்கப்படும். தயவுசெய்து செப்டம்பர் 6-ம் தேதிக்குள் ஒரிஜினலை சொஸைட்டிக்கு அனுப்பவும். நகல் ஒன்றை உங்களுடைய ஃபைல்களில் வைத்துக்கொள்ளவும். மூன்றாவது நகலை ‘ஒர்க்’ ஷீட்டாக பயன்படுத்திக் கொள்ளவும்.

◼ கோழிக்கோட்டில் செப்டம்பர் 15-17, 2006-⁠ல் நடைபெற இருக்கும் மீட்பு விரைவில்! மாவட்ட மாநாட்டின் திருத்திய தலைமை அலுவலக விலாசம் பின்வருமாறு: T. S. James, 34/761-A, Nithya Jeevan House, Malaparamba P. O., Kozhikode 673 009 KER.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்