ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூன் 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி அல்லது உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான மற்ற அறிமுகங்களைப் பயன்படுத்தி, ஜூன் 15 காவற்கோபுரத்தையும் ஜூன் விழித்தெழு!-வையும் எவ்வாறு அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்டுங்கள். அதில் ஒன்று சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது போல இருக்கட்டும்.
20 நிமி:“நம்முடைய ஊழியம்—இரக்கம் காட்டும் ஒரு வேலை.”a நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களின் பேரில் சபையாரைக் குறிப்பு சொல்லச் சொல்லுங்கள்.
15 நிமி:‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ மீது நம்பிக்கை வைத்தல். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் அதிகாரம் 3-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும்.
பாட்டு 47, முடிவு ஜெபம்.
ஜூன் 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
20 நிமி:“ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” ஜனவரி 1, 2006, காவற்கோபுரம், பக்கங்கள் 16-19-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். அக்கட்டுரையில் “நல்ல பலன்கள்” என்ற உபதலைப்பின் கீழ், மற்றவர்களைப் பாராட்டுவதால் கிடைக்கும் நான்கு நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன; பேச்சின் ஆரம்பத்தில் அவற்றைச் சிறப்பித்துக் காட்டுங்கள். அதன் பிறகு, பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு சபையாரைக் கேளுங்கள்: பாராட்டு யாருக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது? உரிய பாராட்டைப் பெற உடன் வணக்கத்தார் ஏன் தகுதியானவர்கள்? சபையில் பாராட்டைத் தெரிவிக்க நமக்கு என்ன வாய்ப்புக்கள் இருக்கின்றன? குடும்பத்திலுள்ளவர்களைப் பாராட்டுவது ஏன் பயனுள்ளது, அதை நாம் எவ்வாறு செய்யலாம்? உங்களுக்கு கிடைத்த பாராட்டுதலால் நீங்கள் எவ்வாறு உற்சாகம் அடைந்தீர்கள் அல்லது பலமடைந்தீர்கள்?
15 நிமி:“தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—பாராட்டுவதன் மூலம்.”b இது சம்பந்தமாக ஒரு சுருக்கமான நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். வீட்டுக்காரர் சொல்வதை ஒரு பிரஸ்தாபி கூர்ந்து கவனித்து அவருக்கு மனமார்ந்த பாராட்டைத் தெரிவிப்பது போலவும், அதன் பிறகு பொருத்தமான ஒரு வசனத்தை வாசித்து வீட்டுக்காரர் சொன்னவற்றின் பேரில் பேசுவது போலவும் அந்த நடிப்பு இருக்கட்டும்.
பாட்டு 96, முடிவு ஜெபம்.
ஜூன் 26-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையும் நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான மற்ற அறிமுகங்களைப் பயன்படுத்தியோ ஜூலை 1 காவற்கோபுரத்தையும் ஜூலை விழித்தெழு!-வையும் எவ்வாறு அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்டுங்கள். ஒவ்வொரு அளிப்பின் முடிவிலும், பிரஸ்தாபி சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு, அடுத்த சந்திப்பில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து அதற்குப் பதில் அளிப்பதாகச் சொல்கிறார்.
18 நிமி:சக விசுவாசிகளிடம் நட்பை வளர்த்துக்கொள்ளுதல். (நீதி. 18:24; 27:9) டிசம்பர் 1, 2000, காவற்கோபுரம், பக்கங்கள் 22-3-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். மெய் வணக்கத்தினால் கிடைக்கும் ஆசீர்வாதங்களில் ஒன்று உண்மையான நண்பர்களைப் பெறுவதாகும். கூட்டங்களில், வெளி ஊழியத்தில், இன்னும் பிற சந்தர்ப்பங்களில் நண்பர்களின் தோழமையினால் மிகுந்த உற்சாகம் கிடைக்கிறது. சபையில் நாம் எவ்வாறு மற்றவர்களோடு நண்பர்களாக முடியும்? “அழியா நட்புக்கு ஆறு படிகள்” என்ற பெட்டியை மறுபார்வை செய்யுங்கள், சகோதரர்களுடன் நாம் பழகும் விஷயத்தில் இதிலுள்ள ஒவ்வொரு குறிப்பையும் எவ்வாறு பொருத்தலாம் என்று சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
15 நிமி:ஜூலையில் நற்செய்தியை அறிவித்தல். உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்கள் பொதுவாக என்ன விஷயங்களில் ஆர்வமாக இருக்கிறார்கள்? பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தி, பைபிள் படிப்பு ஆரம்பித்த ஒன்று அல்லது இரண்டு பிரஸ்தாபிகளை சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். பிறகு, உங்கள் பிராந்தியத்தில் பலன்தந்த அறிமுகத்தை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பயன்படுத்துவதுபோல் நடித்துக்காட்டச் சொல்லுங்கள்.—ஜனவரி 2005 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8, பாரா 5-ஐப் பார்க்கவும்.
பாட்டு 208, முடிவு ஜெபம்.
ஜூலை 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். ஜூன் மாத ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள்.
15 நிமி:சபை தேவைகள்.
20 நிமி:“உங்கள் ஆன்மீக இலக்குகளை எவ்வாறு அடையலாம்.”c சபையில் உள்ள இளைஞர்களிடம் அவர்களுடைய இலக்குகளையும் அவற்றை அடைய அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் பற்றி சொல்லும்படி கேளுங்கள். தங்களுடைய குறிப்புகளைச் சொல்லும்படி ஓரிரண்டு இளைஞர்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 30, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.