தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜூன் 26, 2006-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மே 1 முதல் ஜூன் 26, 2006 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. குரல் வேறுபாடு என்றால் என்ன, அது ஏன் முக்கியம்? [be-TL பக். 111, பெட்டிகள்]
2. பேச்சு கொடுக்கையில் நாம் எவ்வாறு வேகத்தை மாற்றலாம்? [be-TL பக். 112, பாரா. 3-6, பெட்டி]
3. நம்முடைய பேச்சுப் பொருளிடம் எப்படி உற்சாகத்தை வளர்த்துக்கொள்ளலாம், அது ஏன் முக்கியம்? [be-TL பக். 115 பாரா 1-பக். 116 பாரா 2, பெட்டிகள்]
4. மற்றவர்களுக்குக் கற்பிக்கையில் கனிவு என்ற குணம் ஏன் முக்கியம், அதை வெளிக்காட்ட எது நமக்கு உதவும்? [be-TL பக். 118 பாரா 2-பக். 119 பாரா 5]
5. உரையாடுகையில் சைகைகளும் முகபாவங்களும் ஏன் முக்கியம் என்பதை விளக்குங்கள். (மத். 12: 48, 49) [be-TL பக். 121, பெட்டிகள்]
பேச்சு நியமிப்பு எண் 1
6. யோபு புத்தகம் எவ்வாறு யெகோவாவை மேன்மைப்படுத்தி, அவருடைய நீதியான வாழ்க்கைத் தராதரங்களை வலியுறுத்துகிறது? [si-TL பக். 100 பாரா. 39, 41]
7. சங்கீத புத்தகத்தின் நம்பகத்தன்மைக்கு எது அத்தாட்சி அளிக்கிறது? [si-TL பக். 102 பாரா. 10-11]
8. நீதிமொழிகள் 13:16-ல் குறிப்பிடப்பட்ட ‘விவேகம்’ என்ற வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது? விளக்குங்கள். [w-TL04 7/15 பக். 28 பாரா. 3-4]
9. பரிசுத்த ஆவி எப்படி உதவியாளரைப் போல் செயல்படுகிறது, இதை அறிந்துகொள்வது எதைச் செய்ய நம்மை ஊக்குவிக்க வேண்டும்? (யோவா. 14:25, 26, NW) [be-TL பக். 19 பாரா. 2-3]
10. என்ன பொதுவான கருத்தில் இயேசு வருகிறார், மத்தேயு 16:28-ல் எந்த ‘வருகையை’ பற்றி இயேசு குறிப்பிட்டார்? [w-TL04 3/1 பக். 16 பெட்டி]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. யோபு 42:1-6-ல் யெகோவாவின் கேள்விக்கு யோபு அளித்த பதிலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12. என்ன “விருதாக் காரியத்தை” ஜனங்கள் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்? (சங். 2:1, 2)
13. எந்த அஸ்திவாரங்கள் நிர்மூலமாக்கப்படுகின்றன? (சங். 11:3)
14. நாம் எவ்வாறு தாவீதைப் போல யெகோவாவின் பீடத்தை அடையாள அர்த்தத்தில் சுற்றி வருகிறோம்? (சங். 26:6, 7)
15. நம் அபூரண நிலையையும் இந்த உலகின் பல்வேறு துயரங்களையும் சமாளிப்பதற்கு உதவும் என்ன ஆறுதலை சங்கீதம் 40-லிருந்து நாம் பெறலாம்? (சங். 40:1, 2, 5, 12)