ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி செப்டம்பர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் செப்டம்பர் 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். ஒரு அளிப்பை மூப்பரும், மற்றொரு அளிப்பை ஓர் இளைஞரும் நடித்துக் காட்டட்டும். ஒவ்வொரு நடிப்புக்குப் பிறகும், அதிலுள்ள நல்ல அம்சங்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்.”a ஒவ்வொரு நாளும் பைபிள் வாசிப்பிற்கு நேரத்தை ஒதுக்க என்ன ஏற்பாடு செய்கிறார்கள் என்று சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். மே 2005 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையை உபயோகித்து ஆன்மீகக் காரியங்களுக்கு அட்டவணையை அமைத்துக்கொள்ள குடும்பங்களையும் தனிப்பட்ட நபர்களையும் ஊக்கமூட்டுங்கள்.
15 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்.”b உட்சேர்க்கையில் பகுதிகள் 1 மற்றும் 2-ன் அடிப்படையில் சபையார் கலந்தாலோசிப்பு. ஆகஸ்ட் 2004 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 1-ஐ உபயோகித்தும் கலந்தாலோசிக்கலாம். ஒவ்வொரு முறையும் பைபிள் படிப்பு நடத்துவதற்கு முன் ஏன் முழுமையாகத் தயாரிக்க வேண்டும்? இது எதை உட்படுத்துகிறது? கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைச் சபையார் எவ்வாறு பொருத்தினார்கள் என்று கேளுங்கள். முடிவாக, உட்சேர்க்கையின் முதல் பக்கத்தில் மேலே உள்ள மங்கலான பெட்டியிலுள்ள குறிப்புகளைப் பற்றி சொல்லுங்கள்.
பாட்டு 110, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த மாத நம் ராஜ்ய ஊழியத்தில் முதல் பக்கத்திலுள்ள கிளை அலுவலகக் கடிதத்தின் சிறப்புக் குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.
20 நிமி: கடந்த வருடம் நாம் எவ்வாறு செய்தோம்? ஊழியக் கண்காணி, கடந்த ஊழிய ஆண்டைப் பற்றி மறுபார்வை செய்வார். ஊழியத்தில் செய்த முன்னேற்றங்களைப் பற்றி முக்கியமாகக் குறிப்பிடுவார். அதற்கு ஏற்றபடி சபையாரைப் பாராட்டுங்கள். வரவிருக்கும் ஊழிய ஆண்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஓரிரு அம்சங்களைப் பற்றி குறிப்பிடுங்கள். பயனியர்களின் ஊழியத்தைப் பற்றி குறிப்பிடுங்கள். அவர்களுடைய வைராக்கியமான சேவைக்காக அவர்களைப் பாராட்டுங்கள். செயலற்றவர்களுக்கு உதவ எடுக்கப்பட்ட முயற்சிகளால் கிடைத்த நல்ல பலன்களைப் பற்றியும் குறிப்பிடுங்கள்.
15 நிமி: “ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்.”c மற்றவர்களுடைய அன்பான அக்கறையால் கிடைத்த நன்மைகளைப் பற்றி சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 199, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். செப்டம்பர் மாத வெளி ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: பத்திரிகைகளை உபயோகித்து நற்செய்தியைத் தெரிவியுங்கள். அக்டோபர் மாதத்தில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்போம். பேச்சின் ஆரம்பத்தில், பிப்ரவரி 2005 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-ல் 3-6 பாராக்களிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் ஆலோசனைகளைக் கலந்தாலோசியுங்கள்: (1) இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்துக் கொடுங்கள். (2) வாரத்தில் ஒரு நாள் பத்திரிகை ஊழியம் செய்ய அட்டவணை போடுங்கள். (3) மாதத்தில் இத்தனை பத்திரிகைகள் அளிக்க வேண்டும் என்ற ஒரு தனிப்பட்ட இலக்கு வையுங்கள். (4) பத்திரிகைகளை அளிக்க கிடைக்கும் பொருத்தமான எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். (5) பழைய பத்திரிகைகளை நன்கு பயன்படுத்துங்கள். இந்த ஆலோசனைகளை உங்களுடைய பிராந்தியத்திற்கு ஏற்றாற்போல் பொருத்திக் காட்டுங்கள். பிறகு நம் ராஜ்ய ஊழியத்தின் பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, அக்டோபர் 1 காவற்கோபுரம் இதழையும் அக்டோபர் 8 விழித்தெழு! இதழையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். அதோடு, துணைக் கட்டுரைகளுக்கும் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இக்கட்டுரைகள் உங்களுடைய பிராந்தியத்தில் உள்ளவர்களின் மனதைத் தொடலாம். எனவே, ஒரு நடிப்பில் ஏதேனும் ஒரு துணைக் கட்டுரையைச் சிறப்பித்துக் காண்பியுங்கள். ஒவ்வொரு நடிப்புக்குப் பிறகும், அதிலுள்ள நல்ல அம்சங்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
பாட்டு 3, முடிவு ஜெபம்.
அக்டோபர் 3-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: “‘மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிய’ மற்றவர்களுக்கு உதவுதல்.”d நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின் பேரில் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்தல். (நீதி. 27:11) பல வருடங்களாக யெகோவாவை உண்மையுடன் சேவிக்கும் இரண்டு அல்லது மூன்று ஊழியர்களைப் பேட்டி காணுங்கள். யெகோவாவுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிதலுடன் நடக்க அவர்களுக்கு உதவிய ஓரிரு குறிப்புகளைச் சொல்ல சொல்லுங்கள். அவர்கள் சொல்லும் குறிப்புகளில் தனிப்பட்ட பைபிள் படிப்பு, தவறாமல் கூட்டங்களுக்கு ஆஜராவது, உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பவர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்வது, வெளி ஊழியத்தில் முழுமையாகப் பங்குகொள்வது, இதயப்பூர்வமாக ஜெபம் செய்வது, தகாத பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது போன்ற அம்சங்களும் அடங்கலாம். கீழ்ப்படிதலுக்குரிய என்ன சோதனைகளை அவர்கள் எதிர்ப்பட்டார்கள்? அந்தச் சோதனைகளை எப்படி வெற்றிகரமாக மேற்கொண்டார்கள்? அவர்களுடைய கீழ்ப்படிதலுக்குக் கிடைத்த ஆசீர்வாதங்கள் யாவை?
பாட்டு 170, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.