அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில், நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்). செப்டம்பர்: உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) அது இல்லாவிட்டால், உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? புத்தகத்தை அளிக்கலாம் அல்லது 192 பக்க பழைய புத்தகங்களில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம். வீட்டுக்காரர் புத்தகத்தை வாசிக்க விரும்பாவிட்டால் விழிப்புடன் இருங்கள்! என்ற சிற்றேட்டை அளிக்கலாம். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பிரதிகளை அளியுங்கள். ஆர்வம் காட்டினால் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை தயவுசெய்து அளியுங்கள்.
◼ செப்டம்பர் மாதத்திலிருந்து வட்டாரக் கண்காணிகள் கொடுக்கவிருக்கும் பொதுப் பேச்சின் தலைப்பு, “ஏன் பைபிளால் வழிநடத்தப்பட வேண்டும்?”
◼ எந்தத் தேதியிலிருந்து ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய விண்ணப்பதாரர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களோ அந்தத் தேதியிலிருந்து 30 நாட்கள் முன்பாகவாவது கிளை அலுவலகத்திற்கு அவர்களுடைய விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். அவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை சபை செயலர் உறுதிசெய்துகொள்ள வேண்டும். விண்ணப்பதாரருக்கு அவர் முழுக்காட்டுதல் எடுத்த தேதி சரியாக நினைவில்லாதிருந்தால் உத்தேசமாக ஒரு தேதியை எழுத வேண்டும், அதை அவர் குறித்தும் வைத்துக்கொள்ள வேண்டும். இதைச் செயலர், சபை பிரஸ்தாபி அட்டையில் (S-21) குறித்து வைக்க வேண்டும்.
◼ நினைப்பூட்டுதல்: சபைகளுக்கு வருடாந்தர ஐட்டங்களுக்கான விசேஷ ஆர்டர் படிவம் (Special Request Form for Annual Items) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2006-ம் வருடத்திற்கான இயர்புக், காலண்டர், வேதவாக்கியங்களை ஆராய்தல் போன்ற வருடாந்தர ஐட்டங்களுக்கு இது வரை ஆர்டர் செய்திராத சபைகள் இந்தப் படிவம் கிடைத்ததும் உடனடியாக ஆர்டர்களை அனுப்பி வைக்கவும். ராஜ்ய மன்ற பிரசுர இன்வென்டரி ஏற்பாட்டின்கீழ் செயல்படும் சபைகள் “ஒருங்கிணைக்கும் சபை” மூலமாக மட்டுமே தங்கள் ஆர்டர்களை அனுப்ப வேண்டும். இருந்தாலும், ஒருங்கிணைக்கும் சபையின் செயலர் தங்கள் பிரசுர தொகுதியின் கீழுள்ள ஒவ்வொரு சபைக்கும் தேவைப்படும் பிரசுரங்கள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் —கன்னடம்
நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? —நேப்பாளி