பாதுகாத்திடுங்கள்
சிற்றேட்டிற்கான மாதிரி பிரசங்கங்கள்
சிற்றேடுகளை அளிப்பதற்கு தயாரிக்கும் விதத்தில் இந்த உட்சேர்க்கையில் பல்வேறு பிரசங்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் பிராந்தியத்திற்கேற்ப இவற்றை மாற்றிக்கொள்ளலாம். தேவைப்பட்டால் வேறு பிரசங்கங்களையும் உபயோகிக்கலாம். பின்வரும் பிரசங்கங்களை மாதிரியாக வைத்து, இந்த உட்சேர்க்கையில் கொடுக்கப்படாத வேறு சிற்றேடுகளுக்கான பிரசங்கங்களையும் தயாரித்துக் கொள்ளலாம்.—ஜனவரி 2005 நம் ராஜ்ய ஊழியத்தில், பக். 8-ஐக் காண்க.
இந்தப் பக்கத்திலுள்ள ஒவ்வொரு பிரசங்கத்திலும் (1) உரையாடலைத் துவங்குவதற்கான சிந்தனையைத் தூண்டும் கேள்வியும், (2) உரையாடுவதற்கு உதவும் குறிப்புகள் சிற்றேட்டில் எங்குள்ளன என்பதைப் பற்றிய தகவலும், (3) உரையாடலின்போது வாசிப்பதற்குப் பொருத்தமான வசனமும் உள்ளன. வீட்டுக்காரரின் பதிலுக்கு ஏற்ப பிரசங்கத்தின் மீதி பாகத்தை நீங்களே பேசலாம்.
எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்
“நம் நாளுக்கு ஏற்ற நடைமுறையான ஆலோசனை பைபிளில் இருக்கிறதென நீங்கள் நினைக்கிறீர்களா?”—பக். 22, முகவுரை; பக். 23, பெட்டியில் பாரா 3; நீதி. 25:11.
திருப்தியான வாழ்க்கைக்கு வழி
“நல்ல வாழ்க்கை வாழ உலகில் எல்லாரும் ஏங்குகிறார்கள். உண்மையிலேயே திருப்தியான வாழ்க்கை எப்போதாவது நமக்குக் கிடைக்குமென நினைக்கிறீர்களா?”—பக். 29, பாரா 6; 2 பே. 3:13.
பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!
“சாகாமல் என்றென்றுமாய் வாழ்வதற்காக பரலோகத்திற்குப் போக வேண்டுமென நிறைய பேர் நினைக்கிறார்கள், ஆனால் பூமியில் என்றென்றுமாய் வாழ்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”—அட்டை படம்; வெளி. 21:4.
நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?
“கடவுள் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பது சம்பந்தமாக ஜனங்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. நாம் என்ன நம்புகிறோம் என்பது உண்மையிலேயே முக்கியமா?”—பக். 3, பாரா. 3, 7, 8; யோவா. 17:3.
கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும்
“‘பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் [அதாவது பெயர்] பரிசுத்தப்படுவதாக’ என்ற ஜெபம் நம்மில் பலருக்கும் தெரியும். (மத். 6:9) ஆனால் அந்தப் பெயரை அறிந்திருப்பது, நாம் இரட்சிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?”—பக். 28, பாரா 1; ரோ. 10:13.
பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்
“இன்று எதிர்ப்படும் பிரச்சினைகளிலிருந்து நமக்கு விடிவு காலம் வராதாவென அநேகர் ஏங்குகிறார்கள். இந்த எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் அரசாங்கம் ஒன்று வருமென நீங்கள் நினைக்கிறீர்களா?”—பக். 3, பாரா 1; மத். 6:9, 10.
நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்)
“நம் அன்புக்குரியவர்கள் இறந்துபோகும்போது அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள், அவர்களை எப்போதாவது பார்க்க முடியுமா என்றெல்லாம் யோசிப்பது சகஜம்தான். இதுபோன்ற கேள்விகளை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?”—பின் அட்டையிலுள்ள கேள்விகள்; யோபு 14:14, 15.
நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்
“அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்த லட்சக்கணக்கானோருக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிற இந்தச் சிற்றேட்டை இன்று நாங்கள் அளிக்கிறோம். இறந்துபோனவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?”—பக். 27, பாரா 3; யோவா. 5:28, 29.
“மரணத்தில் அன்பானவரைப் பறிகொடுத்த ஒருவருக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?”—பக். 20, பாரா 1; நீதி. 17:17.