ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மே 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அறிவிப்புகள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகள் உங்கள் சபை பிராந்தியத்திற்குப் பயனுள்ளதாக இருக்குமென்றால் அவற்றைப் பயன்படுத்தி மே 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) மே 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். வேறு பிரசங்கங்களையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நடிப்பிலும் “எனக்கு என் சொந்த மதம் இருக்கிறது” என்று சொல்லி உரையாடலை தொடரவிடாமல் நிறுத்துபவரிடம் எப்படி வித்தியாசமாக பதிலளிப்பது என்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 18-19-ஐக் காண்க.
15 நிமி: கேள்விப் பெட்டியைக் கலந்தாலோசிக்கவும். வேறொரு மொழி பேசும் ஆட்களை சந்திக்கையில் ‘ப்ளீஸ் ஃபாலோ அப்’ (S-43) என்ற படிவத்தை பயன்படுத்தும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்; இது அக்டோபர் 15, 1998 தேதியிட்டு எல்லா சபைகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் விளக்கப்பட்டிருந்தது. பொதுவாக, அந்த நபர் ராஜ்ய செய்திக்கு ஆர்வம் காட்டாவிட்டாலும் இந்தப் படிவத்தில் எழுதிக் கொடுக்க வேண்டும்.
20 நிமி: “விரிவாக்குங்கள்.”a கடவுளை வணங்குங்கள் புத்தகத்தில் பக்கம் 150, பாரா 14-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 18, முடிவு ஜெபம்.
மே 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “உங்கள் நன்றியுணர்வைக் காட்டுங்கள்.”b நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின் பேரில் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். பாரா 3-ஐக் கலந்தாலோசிக்கையில், சமீபத்தில் துணைப் பயனியர் செய்தபோது பெற்ற ஆசீர்வாதங்களைப் பற்றி சொல்லும்படி ஓரிருவரிடம் கேளுங்கள்.
20 நிமி: நாம் ஒருவருக்கொருவர் அக்கறை காட்டுகிறோம். (1 கொ. 12:25, 26) நம் ஊழியம் புத்தகத்தில், பக்கம் 157-9-லுள்ள “ஒருவருக்கொருவர் அக்கறை காட்டுதல்” என்ற உபதலைப்பின் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். யெகோவாவின் ஜனங்கள் உலகெங்கும் சிதறியிருந்தாலும் நாம் நெருக்கமாய் ஒன்றுபட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் சகோதரர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். அவசரத் தேவைகள் ஏற்படுகையில் பொருள் உதவி அளிப்பதில் நாம் உடனடியாகவும் செயல்படுகிறோம். முக்கிய வசனங்களை வாசித்து கலந்தாலோசியுங்கள், நம் பிரசுரங்களில் வெளிவந்த ஓரிரு அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 100, முடிவு ஜெபம்.
மே 24-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. மே 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) ஜூன் 1 காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். பிராந்தியத்திலுள்ள மதத்தாரின் கருத்தைக் கவரும் விதத்தில் ஒவ்வொரு பிரசங்கத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்.
15 நிமி: “புத்துணர்ச்சியூட்டும் இசை.” பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். இயர்புக் 2002, பக்கம் 175-லிருந்தும் 1997, பிப்ரவரி 1, காவற்கோபுரம், பக்கம் 27, பாராக்கள் 1-2-லிருந்தும் குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
18 நிமி: சந்தர்ப்ப சாட்சி கொடுக்க தயாராக இருங்கள். ஜூன் 2003 நம் ராஜ்ய ஊழியத்தில், பக்கம் 3-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில் பெற்ற அனுபவங்களை சொல்லுமாறு முன்கூட்டியே சிலரை ஏற்பாடு செய்யுங்கள். சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில், பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியையும் சகல தேசத்தாருக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகத்தையும் எப்படி பயன்படுத்தலாம் என்பதை சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 211, முடிவு ஜெபம்.
மே 31-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். மே மாதத்திற்கான ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
17 நிமி: உயிர்—போற்றிப் பேணிக் காக்க வேண்டிய ஒரு பரிசு. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 25-6-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. விழித்தெழு!, செப்டம்பர் 8, 1993, பக்கங்கள் 10-11-லிருந்து குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள். தன் உடலை பாதிக்கும் காரியங்களைக் குறித்து தீர்மானிக்க ஒரு பெண்ணிற்கு உரிமை இருக்கிறது என நினைக்கும் ஒருவரிடம் கருக்கலைப்பை யெகோவா கருதும் விதத்தை எப்படி விளக்குவீர்கள்? 2000, ஜனவரி 1, காவற்கோபுரம், பக்கம் 4, பாராக்கள் 4-5-லுள்ள அனுபவத்தை சொல்லுங்கள்.
20 நிமி: “பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளித்தல்.” ஜூன் மாதத்தில் இந்தப் புத்தகத்தை நாம் அளிப்போம். பக்கம் 7, பாராக்கள் 1-3-ல் விவரிக்கப்பட்டுள்ள அம்சங்களைக் குறிப்பிடுங்கள். புத்தகத்தில் சபையாரின் மனதைக் கவர்ந்த விஷயத்தை சொல்லும்படி கேளுங்கள். கொடுக்கப்பட்டுள்ள மாதிரி பிரசங்கங்களை மறுபார்வை செய்யுங்கள். புத்தகத்தை அளிக்கையில் படங்களை எப்படி சிறப்பித்துக் காட்டலாம் என வலியுறுத்துங்கள். முதல் பிரசங்கத்தை ஓர் இளைஞரும் அடுத்தடுத்த பிரசங்கங்களில் ஏதாவது ஒன்றை ஒரு பெரியவரும் நடித்துக் காட்டச் செய்யுங்கள். வேறு அணுகுமுறை சபை பிராந்தியத்திற்குப் பொருத்தமானதாக இருந்தால் அதை கலந்தாலோசித்து பெரியவர் நடித்துக் காட்ட வேண்டிய பகுதியில் அதை பயன்படுத்தலாம்.
பாட்டு 24, முடிவு ஜெபம்.
ஜூன் 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். “அவர்களுக்கு உதவும் வழி” என்ற பகுதியிலிருந்து முக்கிய குறிப்புகளை கலந்தாலோசியுங்கள். சபை பிராந்தியத்தில் என்ன சில மொழிகள் பேசப்படுகின்றனவென சொல்லுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: நீங்கள் போதிக்கையில் பலன்தரும் உவமைகளை பயன்படுத்துங்கள். 2002, செப்டம்பர் 1, காவற்கோபுரம், பக்கம் 22-4-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். உவமையைப் பலன்தரத்தக்கவையாக ஆக்கும் நான்கு அம்சங்கள் யாவை? ஏன் எளிய உவமைகளை உபயோகிப்பது பயனளிக்கிறது? பொருத்தமான உவமைகளை நாம் எங்கே காணலாம்? பக்கம் 23-லுள்ள பெட்டியில் காணப்படும் சில உதாரணங்களை ஆராயுங்கள், ஒவ்வொரு உவமையையும் பலன் தரத்தக்கதாக எது ஆக்குகிறதென கேளுங்கள்.
பாட்டு 133, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.