உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/03 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2003
நம் ராஜ்ய ஊழியம்—2003
km 10/03 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். அக்கறை காட்டுகிறவர்களிடம் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தையோ அளியுங்கள். வீட்டுக்காரர்களிடம் இப்பிரசுரங்கள் ஏற்கெனவே இருந்தால், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்தையோ, பழைய பிரசுரம் ஒன்றையோ அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். இது இல்லையென்றால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்கலாம். ஜனவரி: 1988-⁠க்கு முன் பிரசுரிக்கப்பட்ட, சபையின் கையிருப்பில் உள்ள ஏதாவதொரு புத்தகம். இந்தப் பழைய பிரசுரங்கள் எதுவும் கையிருப்பில் இல்லாவிட்டால் நீங்கள் உபயோகிப்பதற்கு பக்கத்து சபைகளில் இவை அதிகம் உள்ளனவா என்பதை தயவுசெய்து கேட்டுப் பாருங்கள். பழைய புத்தகங்கள் கையிருப்பில் இல்லாத சபைகள் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தையோ இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தையோ அளிக்கலாம்.

◼ இந்த மாத நம் ராஜ்ய ஊழிய பிரதியின் உட்சேர்க்கையில், “2004 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை” உள்ளது; இதை 2004-⁠ம் ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்கு பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

◼ ஜனவரி 1 முதல் உங்கள் சபை கூட்ட நேரங்களில் மாற்றமிருந்தால் ‘காங்கிரிகேஷன் மீட்டிங் இன்ஃபர்மேஷன்’ படிவத்தின் (S-5) மூலம் சபை செயலர் கிளை அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். ஹேண்ட்பில்கள் தேவைப்பட்டால், அவற்றை ‘ஹேண்ட்பில் ரிக்வெஸ்ட்’ படிவத்தில் (S-16-TL) ஆர்டர் செய்யலாம். ஹேண்ட்பில்களை நீங்கள் எப்போது பெற விரும்புகிறீர்களோ, குறைந்தது அதற்கு எட்டு வாரங்களுக்கு முன் ஆர்டர் செய்ய வேண்டும்.

◼ ஐஜாலில் 2003, நவம்பர் 8-9-⁠ல் நடைபெறும் “தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாட்டின் மாற்றப்பட்ட மன்ற விலாசம்: Archives Conference Hall, Art and Culture Department, Near Basketball Court, Babutlang, Aizawl 796 001 Mizoram.

◼ பெங்களூரில் புதிய கிளை அலுவலக பிரதிஷ்டை சம்பந்தமாக பெங்களூரிலுள்ள பெத்தேல் குடும்பத்தினருக்கு அதிகளவு வேலை இருக்கும். எனவே நவம்பர் 7, 2003 முதல் டிசம்பர் 22, 2003 வரை பெத்தேல் வளாகத்தை சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இருக்காது.

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

நம்முடைய பிரச்னைகள்​—⁠அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? ​—⁠பஞ்சாபி, ஹிந்தி

நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் ​—⁠கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

பைபிள் கலந்துரையாடலை ஆரம்பித்து நடத்துவது எப்படி ​—⁠பஞ்சாபி, ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்