2004 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
அறிவுரைகள்
2004-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.
பிரசுரங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], காவற்கோபுரம் [w-TL], தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் [be-TL], ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ [si-TL], வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் [rs-TL].
பாட்டு, ஜெபம், வரவேற்புரையுடன் பள்ளி சரியான நேரத்தில் ஆரம்பித்து பின்வருமாறு நடத்தப்பட வேண்டும்:
பேச்சு பண்பு: 5 நிமிடங்கள். பள்ளிக் கண்காணி, துணை ஆலோசகர் அல்லது தகுதி பெற்ற மற்றொரு மூப்பர் ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தின் அடிப்படையில் ஒரு பேச்சு பண்பு பற்றி பேசுவார். (மூப்பர்கள் குறைவாக இருக்கும் சபைகளில் தகுதி பெற்ற உதவி ஊழியரை பயன்படுத்தலாம்.) குறிப்பாக சொல்லப்பட்டிருந்தால் தவிர நியமிக்கப்பட்ட பக்கங்களிலுள்ள பெட்டிகளையும் கலந்தாலோசிக்க வேண்டும். பயிற்சி பகுதிகளை கலந்தாலோசிக்க வேண்டாம். இவை முக்கியமாய் தனிப்பட்ட உபயோகத்திற்கும் ஆலோசனைக்கும் மட்டுமே.
பேச்சு நியமிப்பு எண் 1: 10 நிமிடங்கள். இதை மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும்; இது, காவற்கோபுரம் பத்திரிகையையோ, தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் அல்லது ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ புத்தகத்தையோ சார்ந்திருக்கும். இதை, கேள்வி பதில் மறுபார்வையின்றி 10 நிமிட போதனா பேச்சுபோல கொடுக்க வேண்டும். நியமிக்கப்பட்ட பகுதியைச் சிந்திப்பது மட்டுமே இதன் குறிக்கோள் அல்ல; ஆனால் சபைக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் விஷயத்தை வலியுறுத்திக் காட்டி, சிந்திக்கப்படும் விஷயங்கள் எவ்வளவு நடைமுறையானவை என்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை பயன்படுத்த வேண்டும். இந்தப் பேச்சை கொடுக்க நியமிக்கப்படும் சகோதரர்கள், உரிய நேரத்தில் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால் இவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கலாம்.
பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 10 நிமிடங்கள். இதை, தகுதி வாய்ந்த மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும்; முதல் ஆறு நிமிடத்தில் அவர் விஷயத்தை சபையின் தேவைகளுக்கேற்ப பலன்தரத்தக்க முறையில் பொருத்திக் காட்ட வேண்டும். அந்த வாரத்திற்கான பைபிள் வாசிப்பு பகுதியில் எங்கிருந்தும் அவர் குறிப்புகளை கூறலாம். நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் சுருக்கமாக மட்டுமே இது இருக்கக்கூடாது. அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு நமக்குப் பயனுள்ளது என்பதை சபையார் மதித்துணர உதவுவதே முக்கிய குறிக்கோளாகும். தான் தயாரித்திருக்கும் சிறப்புக் குறிப்புகளைக் கலந்தாலோசிக்கையில், பேச்சாளர் ஆறு நிமிடங்களுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் சபையார் கலந்தாலோசிப்புக்கு நான்கு நிமிடங்களை அவர் ஒதுக்கியாக வேண்டும். பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து தங்களுக்கு ஆர்வமூட்டிய விஷயத்தையும் அதன் பலன்களையும் சுருக்கமாக (30 விநாடிகள் அல்லது குறைவாக) சொல்லுமாறு அவர் சபையாரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். பின்பு மாணாக்கர்கள் வெவ்வேறு வகுப்பறைகளுக்குப் பிரிந்து செல்லும்படி பள்ளிக் கண்காணி சொல்வார்.
பேச்சு நியமிப்பு எண் 2: 4 நிமிடங்கள். இது சகோதரர்களுக்குரிய வாசிப்பு நியமனம். பொதுவாக இந்த வாசிப்பு பைபிளிலிருந்தே இருக்கும். மாதம் ஒருமுறை இந்த நியமனத்திற்கான தகவல் காவற்கோபுரத்திலிருந்து எடுக்கப்படும். முன்னுரையோ முடிவுரையோ இல்லாமல் நியமிக்கப்பட்ட பகுதியை மாணாக்கர் வாசிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் வாசிக்க வேண்டிய பகுதியின் அளவு சற்று வேறுபடும், ஆனால் நான்கு நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாகத்தான் இருக்கும். நியமிப்புகளை செய்வதற்கு முன்பு பள்ளிக் கண்காணி அந்தப் பகுதியை பார்த்து மாணாக்கர்களின் வயதிற்கும் திறமைக்கும் ஏற்றவாறு அதை நியமிக்க வேண்டும். புரிந்துகொள்ளுதல், சரளம், தகுந்த இடங்களில் அழுத்தம், குரல் வேறுபாடு, பொருத்தமான இடங்களில் நிறுத்தம், இயல்பு போன்ற குணங்களோடு வாசிக்க மாணாக்கருக்கு உதவுவதே பள்ளிக் கண்காணியின் நோக்கமாக இருக்கும்.
பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்த நியமிப்பை பெறும் சகோதரிகள், ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தின் பக்கம் 82-ல் உள்ள பட்டியலில் காணப்படும் பேச்சு அமைப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது அவற்றில் ஒன்று அவர்களுக்கு நியமிக்கப்படும். மாணாக்கர் நியமிக்கப்பட்ட பொருளை, சபையின் பிராந்தியத்திற்கு பொருத்தமாகவும் நடைமுறையாகவும் இருக்கும் வெளி ஊழியத்தின் ஓர் அம்சத்திற்கு பொருத்த வேண்டும். தகவல் எந்தப் பிரசுரத்திலிருந்து எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படாதபோது உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் கொடுத்திருக்கும் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து இந்தப் பொருளுக்குரிய தகவலை மாணாக்கர் கண்டுபிடிக்க வேண்டும். எந்தப் பிரசுரங்களிலிருந்து கையாள வேண்டுமென குறிப்பிடப்பட்டிருக்கும் பேச்சுகளை புதிய மாணாக்கர்களுக்கு நியமிக்க வேண்டும். மாணாக்கர், நியமிக்கப்பட்ட பொருளை எவ்வாறு படிப்படியாக விவரித்துப் பேசுகிறார் என்றும், வேதவசனங்களை பகுத்தாராயவும் பேச்சின் முக்கிய குறிப்புகளை புரிந்துகொள்ளவும் வீட்டுக்காரருக்கு எவ்வாறு உதவுகிறார் என்றும் பள்ளிக் கண்காணி முக்கியமாக கவனிப்பார். இந்தப் பேச்சைக் கொடுக்க நியமிக்கப்படும் சகோதரிகள் வாசிக்க அறிந்திருக்க வேண்டும். உதவியாளர் ஒருவரை பள்ளிக் கண்காணியே நியமிப்பார்.
பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். நியமிக்கப்பட்ட பொருளை மாணாக்கர் படிப்படியாக விரிவாக்க வேண்டும். எந்தப் பிரசுரத்திலிருந்து தகவலை எடுக்க வேண்டுமென்று குறிப்பிடப்படாதபோது உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் கொடுத்திருக்கும் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து இந்தப் பொருளுக்குரிய தகவலை மாணாக்கர் கண்டுபிடிக்க வேண்டும். இது சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், ராஜ்ய மன்றத்தில் உள்ளவர்களுக்கு முன்பு அளிக்கப்படும் பேச்சாக அதைக் கொடுக்கலாம். சகோதரிக்கு நியமிக்கப்படுகையில், பேச்சு எண் 3-ல் சொல்லப்பட்டதற்கு இசைய இந்தப் பேச்சைக் கொடுக்க வேண்டும். பொருத்தமான சந்தர்ப்பங்களில் பள்ளிக் கண்காணி பேச்சு எண் 4-ஐ ஒரு சகோதரருக்கு நியமிக்கலாம். நட்சத்திர குறியிடப்பட்ட (*) பொருளை பேச்சு நடையில் கொடுப்பதற்காக சகோதரர்களுக்கு மட்டுமே நியமிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து கவனியுங்கள்.
நேரம்: ஆலோசனை கூறுபவரின் கூற்றுகள் உட்பட எந்தப் பேச்சும் நியமிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகம் செல்லக்கூடாது. பேச்சு நியமிப்பு எண்கள் 2, 3, 4-க்குரிய நேரம் முடிந்ததும் சாதுரியத்துடன் அவற்றை நிறுத்த வேண்டும். பேச்சு பண்பு பற்றிய ஆரம்ப பேச்சு, நியமிப்பு எண் 1 அல்லது பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளை கொடுக்கும் சகோதரர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை வழங்க வேண்டும். அனைவருமே தங்களுக்குரிய நேரத்தைக் குறித்து கவனமாயிருக்க வேண்டும். மொத்த நிகழ்ச்சி: பாட்டு, ஜெபம் சேர்க்காமல் 45 நிமிடங்கள்.
ஆலோசனை: 1 நிமிடம். ஒவ்வொரு மாணாக்கர் பேச்சிற்கும் பிறகு, பேச்சில் கவனித்த பாராட்டத்தக்க விஷயங்களைப் பற்றி கட்டியெழுப்பும் விஷயங்களைக் கூற பள்ளிக் கண்காணி ஒரு நிமிடத்திற்கும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. ‘நன்றாயிருந்தது’ என்று வெறுமனே சொல்வது அவருடைய நோக்கமல்ல; மாறாக, பேச்சின் அந்த விஷயம் நன்றாயிருந்ததற்கான குறிப்பிட்ட காரணங்களுக்கு கவனத்தைத் திருப்ப வேண்டும். ஒவ்வொரு மாணாக்கரின் தேவைக்கும் ஏற்றவாறு உற்சாகப்படுத்தும் மேலுமான ஆலோசனைகளைக் கூட்டத்திற்கு பிறகு அல்லது மற்றொரு சமயத்தில் தனிப்பட்ட விதமாக கொடுக்கலாம்.
துணை ஆலோசகர்: மற்றொரு தகுதி வாய்ந்த மூப்பர் இருந்தால், பள்ளிக் கண்காணியோடுகூட துணை ஆலோசகராக நியமிப்புகளை கையாள மூப்பர் குழு அவரை தெரிவு செய்யலாம். சபையில் நிறைய மூப்பர்கள் இருந்தால், இந்நியமிப்புக்கென தகுதி வாய்ந்த வெவ்வேறு மூப்பரை ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்யலாம். நியமிப்பு எண் 1-ஐயும் பைபிள் வாசிப்பு பகுதியின் சிறப்புக் குறிப்புகளையும் கையாளும் சகோதரர்களுக்கு, தேவைப்பட்டால் தனிப்பட்ட ஆலோசனை கொடுப்பதே அவருடைய பொறுப்பு. உடன் மூப்பர்கள் அல்லது உதவி ஊழியர்கள் கொடுக்கும் அப்படிப்பட்ட ஒவ்வொரு பேச்சிற்கு பிறகும் அவர் ஆலோசனை கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்த ஏற்பாடு 2004-ல் அமலில் இருக்கும், பின்னர் மாற்றப்படலாம்.
ஆலோசனை படிவம்: பாடப்புத்தகத்தில்.
வாய்மொழி மறுபார்வை: 30 நிமிடங்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கண்காணி வாய்மொழி மறுபார்வை ஒன்றை நடத்துவார். அதற்கு முன்பு மேலே சொல்லப்பட்டபடி, பேச்சு பண்பு பற்றிய கலந்தாலோசிப்பும் பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளும் இருக்கும். நடப்பு வாரம் உட்பட முந்தைய இரண்டு மாதங்கள் பள்ளியில் சிந்தித்தவை வாய்மொழி மறுபார்வைக்கு அடிப்படையாக அமையும்.
அட்டவணை
ஜன. 5 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 1-5 பாட்டு எண் 154
பேச்சு பண்பு: நடைமுறைப் பயனை தெளிவுபடுத்துதல் (be-TL பக். 157 பாரா 1–பக். 158 பாரா 1)
எண் 1: குறிப்புத்தாளை தயாரித்தல் (be-TL பக். 39-42)
எண் 3: “புதிய ஏற்பாடு” எதிர்கால பூமிக்குரிய பரதீஸைக் குறிப்பிடுகிறதா அல்லது அது “பழைய ஏற்பாட்டில்” மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறதா? (rs-TL பக். 285 பாரா 1–பக். 286 பாரா 1)
எண் 4: aசெய்ய வேண்டியதை செய்ய தவறுவதால் விளையும் பாவங்கள் சம்பந்தமாக பைபிள் உதாரணங்களிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்
ஜன. 12 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 6-10 பாட்டு எண் 215
பேச்சு பண்பு: நடைமுறைப் பயனை தெளிவுபடுத்துதல் (be-TL பக். 158 பாரா. 2-4)
எண் 1: சுத்தம்—உண்மை அர்த்தம் என்ன? (w-TL02 2/1 பக். 4-7)
எண் 3: பொய் சொல்வது ஏன் தவறு?
எண் 4: லூக்கா 23:43-ல் குறிப்பிடப்பட்ட “பரதீஸ்” ஹேடீஸின் ஒரு பாகமாகவோ பரலோகத்தின் ஒரு பாகமாகவோ ஏன் இருக்க முடியாது? (rs-TL பக். 286 பாரா 2–பக். 287 பாரா 1)
ஜன. 19 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 11-16 பாட்டு எண் 218
பேச்சு பண்பு: நடைமுறைப் பயனை காண பிறருக்கு உதவுதல் (be-TL பக். 159 பாரா. 1-4)
எண் 1: கடவுள் தரும் நெறிகள் உங்கள் நன்மைக்கு (w-TL02 2/15 பக். 4-7)
எண் 3: லூக்கா 23:43-ல் குறிப்பிடப்பட்ட பரதீஸ் பூமிக்குரியதென எது குறிப்பிட்டுக் காட்டுகிறது? (rs-TL பக். 287 பாரா 2–பக். 288 பாரா 2)
எண் 4: ஏன் யெகோவாவின் சாட்சிகள் தங்களது நம்பிக்கையை மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள்
ஜன. 26 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 17-20 பாட்டு எண் 106
பேச்சு பண்பு: வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல் (be-TL பக். 160 பாரா. 1-3)
எண் 1: ஒற்றுணர்வு—கரிசனைக்கும் கருணைக்கும் திறவுகோல் (w-TL02 4/15 பக். 24-7)
எண் 2: w-TL02 1/1 பக். 10-11 பாரா. 9-11
எண் 3: லூக்கா 13:24-லுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்
எண் 4: உண்மையான அறிவையும் ஞானத்தையும் நம்மில் எவராவது எவ்வாறு அடையலாம்? (rs-TL பக். 288 பாரா 3–பக். 289 பாரா 2)
பிப். 2 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 21-24 பாட்டு எண் 64
பேச்சு பண்பு: எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழி (be-TL பக். 161 பாரா. 1-4)
எண் 1: மாணாக்கர் பேச்சுக்களைத் தயாரித்தல் (be-TL பக். 43 பாரா 1–பக். 44 பாரா 3)
எண் 3: மனிதத் தத்துவஞானங்களின் தொடக்கம் என்ன? (rs-TL பக். 289 பாரா 3–பக். 290 பாரா 2)
எண் 4: bதிருமண நிச்சயதார்த்தத்தை ஏன் முக்கியமானதாக கருத வேண்டும்
பிப். 9 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 25-28 பாட்டு எண் 9
பேச்சு பண்பு: பல்சுவையும் சரியான வார்த்தையும் (be-TL பக். 161 பாரா 5–பக். 162 பாரா 4)
எண் 1: பேச்சுப் பொருளும் பேச்சு அமைப்பும் (be-TL பக். 44 பாரா 4–பக். 46 பாரா 2)
எண் 3: பிரச்சினைகள் நிறைந்த இந்த உலகத்தில் மன நிம்மதியைக் காண்பது எப்படி
எண் 4: மனித தத்துவஞானத்துக்குப் பதில் இயேசு கிறிஸ்துவின் போதகங்களைக் கற்பது ஏன் தெளிவான சிந்தனையின் அத்தாட்சியாக உள்ளது? (rs-TL பக். 290 பாரா 3–பக். 291 பாரா 3)
பிப். 16 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 29-31 பாட்டு எண் 160
பேச்சு பண்பு: வலிமை, உணர்ச்சி, தத்ரூபம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வார்த்தைகள் (be-TL பக். 163 பாரா 1–பக். 164 பாரா 2)
எண் 1: உத்தமம் செம்மையானவர்களை நடத்தும் (w-TL02 5/15 பக். 24-7)
எண் 2: w-TL02 2/1 பக். 15-16 பாரா. 6-10
எண் 3: யாருடைய ஜெபங்களைக் கேட்க கடவுள் மனமுள்ளவர்? (rs-TL பக். 292 பாரா 1–பக். 293 பாரா 3)
எண் 4: நற்குணம் ஏன் கிறிஸ்தவர்களுக்கு அத்தியாவசியம்
பிப். 23 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 32-35 பாட்டு எண் 1
பேச்சு பண்பு: இலக்கண விதிப்படி பேசுதல் (be-TL பக். 164 பாரா 3–பக். 165 பாரா 1)
வாய்மொழி மறுபார்வை
மார்ச் 1 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 36-39 பாட்டு எண் 49
பேச்சு பண்பு: குறிப்புத்தாளைப் பயன்படுத்துதல் (be-TL பக். 166 பாரா 1–பக். 167 பாரா 2)
எண் 1: சபை பேச்சுக்களைத் தயாரித்தல் (be-TL பக். 47 பாரா 1–பக். 49 பாரா 2)
எண் 3: நம் விசுவாசத்தோடு சகிப்புத்தன்மையை சேர்க்க வேண்டியது ஏன் அவசியம்?
எண் 4: cஎது ஒருவரின் ஜெபங்களைக் கடவுள் அங்கீகரிக்கத் தகாததாக்கலாம்? (rs-TL பக். 293 பாரா 4–பக். 294 பாரா 2)
மார்ச் 8 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 40-42 பாட்டு எண் 205
பேச்சு பண்பு: உங்களுடைய கருத்துக்களை ஒழுங்கமைத்தல் (be-TL பக். 167 பாரா 3–பக். 168 பாரா 2)
எண் 1: ஊழியக் கூட்ட கட்டுரைகளையும் பிற பேச்சுக்களையும் தயாரித்தல் (be-TL பக். 49 பாரா 3–பக். 51 பாரா 3)
எண் 3: யெகோவாவுடன் ஒரு நெருக்கமான உறவை வளர்ப்பது எப்படி
எண் 4: dஜெபிப்பதற்குத் தகுந்த காரியங்கள் யாவை? (rs-TL பக். 294 பாரா 3–பக். 295 பாரா 2)
மார்ச் 15 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 43-46 பாட்டு எண் 67
பேச்சு பண்பு: உங்களுடைய குறிப்புத்தாளை எளிமையாக வைத்துக்கொள்ளுதல் (be-TL பக். 168 பாரா 3–பக். 169 பாரா 5)
எண் 1: ஊக்கந்தளராத முயற்சி—எப்போது யெகோவா பலனளிக்கிறார்? (w-TL02 8/1 பக். 29-31)
எண் 3: eஒருவர் இவ்வாறு சொன்னால்—‘முதலில் என்னுடன் ஜெபம் செய்யுங்கள், பின்பு உங்கள் செய்தியை எனக்குக் கொடுங்கள்’ (rs-TL பக். 295 பாரா. 3-4)
எண் 4: அநீதியான உலகப்பொருளால் சிநேகிதரை நாம் எப்படி சம்பாதிக்கலாம்?
மார்ச் 22 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 47-50 பாட்டு எண் 187
பேச்சு பண்பு: தர்க்க ரீதியில் பேசுதல் (be-TL பக். 170 பாரா 1–பக். 171 பாரா 2)
எண் 1: ஆபேலின் காணிக்கையை யெகோவா ஏற்றுக்கொண்டார், காயீனுடையதையோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? (w-TL02 8/1 பக். 28)
எண் 3: இனிமேலும் நிறைவேறவிருக்கிற முதன்மை வாய்ந்த பைபிள் தீர்க்கதரிசனங்கள் சில யாவை? (rs-TL பக். 296 பாரா 2–பக். 297 பாரா 3)
எண் 4: ஏன் யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்
மார்ச் 29 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 1-6 பாட்டு எண் 52
பேச்சு பண்பு: தர்க்க ரீதியில் பேசுதல் (be-TL பக். 171 பாரா 3–பக். 172 பாரா 5)
எண் 1: யோசிக்கும் திறன் எப்படி உங்களை பாதுகாக்கலாம்? (w-TL02 8/15 பக். 21-4)
எண் 2: w-TL02 2/15 பக். 19-20 பாரா. 7–11
எண் 3: அகந்தையை யெகோவா எவ்வாறு கருதுகிறார்
எண் 4: பைபிளிலுள்ள முன்னறிவிப்புகளில் கிறிஸ்தவர்கள் ஏன் கூர்ந்த அக்கறை கொண்டிருக்க வேண்டும்? (rs-TL பக். 297 பாரா. 4-8)
ஏப்ரல் 5 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 7-10 பாட்டு எண் 61
பேச்சு பண்பு: பொருத்தமான தகவல்களை மட்டுமே பயன்படுத்துதல் (be-TL பக். 173 பாரா. 1-4)
எண் 1: பொதுப் பேச்சுக்களைத் தயாரித்தல் (be-TL பக். 52 பாரா 1–பக். 54 பாரா 1)
எண் 3: fஒருவர் இவ்வாறு சொன்னால்—‘தீர்க்கதரிசனத்தின்பேரில் நீங்கள் மட்டுக்குமீறிய அழுத்தம் வைக்கிறீர்கள்’ (rs-TL பக். 298 பாரா. 1-2)
எண் 4: நம்பிக்கை ஆத்தும நங்கூரமாயிருப்பது ஏன்
ஏப்ரல் 12 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 11-14 பாட்டு எண் 87
பேச்சு பண்பு: மனதிலிருந்து பேசுதல் (be-TL பக். 174 பாரா 1–பக். 175 பாரா 5)
எண் 1: பேச்சாளரின் தீர்மானங்கள் (be-TL பக். 54 பாரா. 2-4; பக். 55, பெட்டி)
எண் 3: யெகோவா தரும் சிட்சையை நாம் ஏன் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்?
எண் 4: உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றிய இந்தப் போதகம் எதில் ஆதாரங்கொண்டுள்ளது? (rs-TL பக். 299 பாரா. 1–6)
ஏப்ரல் 19 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 15-18 பாட்டு எண் 171
பேச்சு பண்பு: மனதிலிருந்து பேசுகையில் படுகுழிகளைத் தவிர்த்தல் (be-TL பக். 175 பாரா 6–பக். 177 பாரா 1)
எண் 1: சோதனைகளை நாம் எப்படி கருத வேண்டும்? (w-TL02 9/1 பக். 29-31)
எண் 2: w-TL02 3/1 பக். 15-16 பாரா. 8–11
எண் 3: பாவத்துக்குத் தண்டனை ஒருவரின் மரணத்துக்குப் பின்னும் கூடுதலாகக் கொடுக்கப்படுகிறதா? (rs-TL பக். 300 பாரா. 2–6)
எண் 4: gதிருமணம் ஏன் வாழ்நாள் பந்தமாக இருக்க வேண்டும்
ஏப்ரல் 26 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 19-22 பாட்டு எண் 59
பேச்சு பண்பு: பிறர் விளக்கம் கேட்கும்போது (be-TL பக். 177 பாரா 2–பக். 178 பாரா 2)
வாய்மொழி மறுபார்வை
மே 3 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 23-26 பாட்டு எண் 13
பேச்சு பண்பு: உரையாடல் முறையில் பேசுதல் (be-TL பக். 179-80)
எண் 1: போதிக்கும் திறமையை வளருங்கள் (be-TL பக். 56 பாரா 1–பக். 57 பாரா 2)
எண் 3: தீய பழக்கங்களை விட்டு விலக ஒருவருக்கு யெகோவா எப்படி உதவுவார்?
எண் 4: இந்தப் பல்வேறு மரபினர்கள் எங்கிருந்து வந்தனர்? (rs-TL பக். 301 பாரா. 1-4)
மே 10 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 27-29 பாட்டு எண் 28
பேச்சு பண்பு: குரல் நயம் (be-TL பக். 181 பாரா. 1-4)
எண் 1: “வேறுபடுத்திக் காட்டுங்கள்” (be-TL பக். 57 பாரா 3–பக். 58 பாரா 2)
எண் 3: ஒரே குடும்பமே இருந்ததெனில் காயீன் தன் மனைவியை எங்கிருந்து அடைந்தான்? (rs-TL பக். 301 பாரா 5–பக். 302 பாரா 1)
எண் 4: இன தப்பெண்ணம் ஏன் தவறானது
மே 17 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 30-33 பாட்டு எண் 93
பேச்சு பண்பு: தகுந்த முறையில் சுவாசித்தல் (be-TL பக். 181 பாரா 5–பக். 184 பாரா 1; பக். 182, பெட்டி)
எண் 1: கேட்போரை சிந்திக்கும்படி உற்சாகப்படுத்துதல் (be-TL பக். 58 பாரா 3–பக். 59 பாரா 3)
எண் 3: சாந்தகுணம் ஏன் அவசியம்?
எண் 4: பல்வேறு மரபுப் பண்புகளின் தோற்றத்தை எது விளக்குகிறது? (rs-TL பக். 302 பாரா 2–பக். 303 பாரா 2)
மே 24 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 34-37 பாட்டு எண் 86
பேச்சு பண்பு: விறைப்பான தசைகளை தளர்த்துதல் (be-TL பக். 184 பாரா 2–பக். 185 பாரா 2; பக். 184, பெட்டி)
எண் 1: பொருத்திக் காட்டுங்கள்; நல்ல முன்மாதிரியாக இருங்கள் (be-TL பக். 60 பாரா 1–பக். 61 பாரா 3)
எண் 3: எல்லா மனிதரும் கடவுளுடைய பிள்ளைகளா? (rs-TL பக். 303 பாரா 3–பக். 304 பாரா 3)
எண் 4: சின்ன விஷயத்திலும் ஏன் உண்மையுடன் இருக்க வேண்டும்?
மே 31 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 38-40 பாட்டு எண் 202
பேச்சு பண்பு: பிறர்மீது அக்கறை காட்டுதல் (be-TL பக். 186 பாரா. 1-4)
எண் 1: உரையாடும் திறமைகளை வளர்ப்பது எப்படி (be-TL பக். 62 பாரா 1–பக். 64 பாரா 1)
எண் 2: w-TL02 5/1 பக். 19-20 பாரா. 3-6
எண் 3: ஒன்று யோவான் 3:19, 20-ஐப் புரிந்துகொள்வது ஒருவருக்கு எப்படி ஆறுதல் தரும்?
எண் 4: எல்லா மரபினர்களின் ஜனங்களும் சகோதரர் சகோதரிகளாக என்றாவது உண்மையில் ஒற்றுமைப்படுத்தப்படுவார்களா? (rs-TL பக். 304 பாரா 4–பக். 305 பாரா 2)
ஜூன் 7 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 1-5 பாட்டு எண் 123
பேச்சு பண்பு: கூர்ந்து செவிகொடுத்தல் (be-TL பக். 187 பாரா. 1-5)
எண் 1: உரையாடலை தொடர்வது எப்படி (be-TL பக். 64 பாரா 2–பக். 65 பாரா 4)
எண் 3: இயேசு கிறிஸ்துவின் மரணம் எவ்வாறு, இரத்தச் சாட்சிகளான மற்றவர்களின் மரணத்திலிருந்து வேறுபட்டது? (rs-TL பக். 306 பாரா. 1-4)
எண் 4: மாயமந்திரத்தில் மேலோட்டமாக ஈடுபடுவதில் என்ன தவறு?
ஜூன் 14 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 6-9 பாட்டு எண் 121
பேச்சு பண்பு: மற்றவர்கள் முன்னேற உதவுதல் (be-TL பக். 187 பாரா 6–பக். 188 பாரா 3)
எண் 1: கேள்வி கேட்போரின் கண்ணோட்டத்தை கண்டுணர்தல் (be-TL பக். 66 பாரா 1–பக். 68 பாரா 1)
எண் 3: நாம் எப்படி தீமையை வெறுக்க கற்றுக்கொள்ளலாம்?
எண் 4: ஏன் மீட்கும் பொருள் அந்த முறையில் கொடுப்பது தேவைப்பட்டது? (rs-TL பக். 306 பாரா 6–பக். 307 பாரா 2)
ஜூன் 21 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 10-13 பாட்டு எண் 183
பேச்சு பண்பு: நடைமுறையான உதவி அளித்தல் (be-TL பக். 188 பாரா 4–பக். 189 பாரா 4)
எண் 1: எப்படி பதிலளிக்க வேண்டுமென அறிந்திருங்கள் (be-TL பக். 68 பாரா 2–பக். 70 பாரா 3)
எண் 3: கடவுளுக்குக் கீழ்ப்படியும் யாவரும் என்றென்றும் வாழலாமென கடவுள் ஏன் வெறுமனே கட்டளையிடவில்லை? (rs-TL பக். 307 பாரா 3–பக். 308 பாரா 1)
எண் 4: ஏமாற்றுவதை யெகோவா எப்படி கருதுகிறார்
ஜூன் 28 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 14-16 பாட்டு எண் 216
பேச்சு பண்பு: மற்றவர்களுக்கு மரியாதை காட்டுதல் (be-TL பக். 190 பாரா. 1-4)
வாய்மொழி மறுபார்வை
ஜூலை 5 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 17-20 பாட்டு எண் 54
பேச்சு பண்பு: மரியாதைக்குரிய விதத்தில் கண்டுகொள்ளுதல் (be-TL பக். 191 பாரா 1–பக். 192 பாரா 1)
எண் 1: கடிதத் தொடர்பு (be-TL பக். 71-3)
எண் 3: யெகோவாவின் அமைப்பை நம்புங்கள்
எண் 4: இயேசுவின் பலியின் விலைமதிப்பு யாருக்கு முதலாவது பயன்படுத்தப்பட்டது, என்ன நோக்கத்துடன்? (rs-TL பக். 308 பாரா. 2-3)
ஜூலை 12 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 21-24 பாட்டு எண் 138
பேச்சு பண்பு: மரியாதைக்குரிய விதத்தில் பேச்சு கொடுப்பது (be-TL பக். 192 பாரா 2–பக். 193 பாரா 2)
எண் 1: முன்னேற விரும்புங்கள்—வளர்ச்சி அடையுங்கள் (be-TL பக். 74 பாரா 1–பக். 75 பாரா 3)
எண் 3: நம்முடைய நாளில் வேறு எவரும் இயேசுவின் பலியிலிருந்து நன்மைகளை அனுபவிக்கிறார்கள்? (rs-TL பக். 309 பாரா. 1-3)
எண் 4: யெகோவா யூதர்களின் குல தெய்வமாக இருந்தாரா?
ஜூலை 19 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 25-27 பாட்டு எண் 7
பேச்சு பண்பு: உறுதியான நம்பிக்கையோடு பேசுதல் (be-TL பக். 194 பாரா 1–பக். 195 பாரா 2)
எண் 1: உங்கள் வரத்தை பயன்படுத்துங்கள் (be-TL பக். 75 பாரா 4–பக். 77 பாரா 2)
எண் 3: பயங்கரவாதம் எப்படி ஒழியும்
எண் 4: இந்த மீட்கும் பலியின் பலனாக என்ன எதிர்கால ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம்? (rs-TL பக். 310 பாரா. 1-4)
ஜூலை 26 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 1-3 பாட்டு எண் 30
பேச்சு பண்பு: நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்துவது (be-TL பக். 195 பாரா 3–பக். 196 பாரா 4)
எண் 1: வைராக்கியமும் பொறாமையும்—கிறிஸ்தவ நிலைநிற்கை என்ன? (w-TL02 10/15 பக். 28-31)
எண் 2: w-TL02 6/15 பக். 18-19 பாரா. 6-9
எண் 3: இயேசுவின் பலியிலிருந்து பயனடைவதற்கு நாம் செய்ய வேண்டியதென்ன? (rs-TL பக். 311 பாரா. 1-4)
எண் 4: பிரியமானவரின் மரணத்தை நினைத்து துக்கிப்பது தவறா?
ஆக. 2 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 4-6 பாட்டு எண் 128
பேச்சு பண்பு: சாதுரியம் ஆனாலும் உறுதி (be-TL பக். 197 பாரா. 1-3)
எண் 1: யெகோவாவுக்கு முன்பாக நம் நாட்களை எப்படி எண்ணலாம்? (w-TL02 11/15 பக். 20-3)
எண் 3: ஒருவரையொருவர் பகைக்காதிருக்க பைபிள் நமக்கு எப்படி உதவுகிறது?
எண் 4: நம்முடைய வாழ்க்கையை நாம் பயன்படுத்தும் முறையின்பேரில் மீட்கும் பலியின் ஏற்பாடு என்ன பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்? (rs-TL பக். 311 பாரா. 5-7)
ஆக. 9 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 7-9 பாட்டு எண் 35
பேச்சு பண்பு: சாட்சி கொடுத்தலில் சாதுரியம் (be-TL பக். 197 பாரா 4–பக். 199 பாரா 1)
எண் 1: வகுப்புவாதமற்ற சமுதாயம் உண்மையில் சாத்தியமா? (w-TL02 1/1 பக். 4-7)
எண் 3: கிறிஸ்தவர்கள் கர்த்தருடன் இருக்கும்படி “எடுத்துக்கொள்ளப்படுவர்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னபோது என்ன காரியத்தைத் தர்க்கித்துப் பேசிக்கொண்டிருந்தார்? (rs-TL பக். 312 பாரா. 1-2)
எண் 4: அந்திக்கிறிஸ்து யார்?
ஆக. 16 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 10-13 பாட்டு எண் 203
பேச்சு பண்பு: ஏற்ற சமயத்தில் ஏற்ற வார்த்தைகள் (be-TL பக். 199 பாரா. 2-5)
எண் 1: நிஜமான கடவுளாகிய யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள் (w-TL02 1/15 பக். 5-7)
எண் 3: கடவுளின் பழிவாங்குதல் அவரது அன்புக்கு இசைவாக இருக்கிறதா?
எண் 4: கிறிஸ்து காணக்கூடியவராய் மேகத்தில் தோன்றி, பின்பு உலகம் பார்த்துக்கொண்டிருக்கையில் உண்மையுள்ள கிறிஸ்தவர்களைப் பரலோகத்துக்குள் எடுத்துக்கொள்வாரா? (rs-TL பக். 313 பாரா. 1-3)
ஆக. 23 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 14-16 பாட்டு எண் 207
பேச்சு பண்பு: குடும்பத்தாரோடும் மற்றவர்களோடும் சாதுரியத்தைப் பயன்படுத்துதல் (be-TL பக். 200 பாரா 1–பக். 201 பாரா 1)
எண் 1: எதிரும்புதிருமான மனப்பான்மைகளை வளர்த்துக்கொண்ட சகோதரர்கள் (w-TL02 1/15 பக். 21-3)
எண் 2: w-TL02 7/15 பக். 23-4 பாரா. 15-19
எண் 3: கிறிஸ்தவர்கள் தங்கள் மாம்ச உடல்களுடன் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவது சாத்தியமா? (rs-TL பக். 314 பாரா. 1-2)
எண் 4: hவன்முறையான வீடியோ விளையாட்டுகள் ஏன் கிறிஸ்தவர்களுக்குரியதல்ல
ஆக. 30 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 17-21 பாட்டு எண் 150
பேச்சு பண்பு: நம்பிக்கையூட்டும் விதமாக பேசுதல் (be-TL பக். 202 பாரா 1–பக். 203 பாரா 2)
வாய்மொழி மறுபார்வை
செப். 6 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 22-25 பாட்டு எண் 22
பேச்சு பண்பு: நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசுதல் (be-TL பக். 203 பாரா 3–பக். 204 பாரா 1)
எண் 1: ஏன் அந்தப் பண்டைய உலகம் அழிந்தது? (w-TL02 3/1 பக். 5-7)
எண் 3: உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் ஒருவேளை இரகசியமாய் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்களா, சாகாமல் பூமியிலிருந்து வெறுமனே மறைந்துபோவார்களா? (rs-TL பக். 314 பாரா 3–பக். 315 பாரா 2)
எண் 4: iகிறிஸ்தவ பெற்றோர் ஏன் பிள்ளைகளுடன் சேர்ந்து வாசிக்க வேண்டும்
செப். 13 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 26-29 பாட்டு எண் 71
பேச்சு பண்பு: உடன் விசுவாசிகளிடம் உரையாடுகையில் (be-TL பக். 204 பாரா 2–பக். 205 பாரா 4)
எண் 1: ஊனத்திற்கு முடிவு (w-TL02 5/1 பக். 4-7)
எண் 3: இந்த மிகுந்த உபத்திரவத்தின்போது உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? (rs-TL பக். 315 பாரா 3–பக். 316 பாரா 1)
எண் 4: கடவுளுடைய வாக்குத்தத்தங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்று இருப்பது எவ்வாறு?
செப். 20 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 30-32 பாட்டு எண் 51
பேச்சு பண்பு: வலியுறுத்துவதற்குத் திரும்பத் திரும்ப சொல்லுதல் (be-TL பக். 206 பாரா. 1-4)
எண் 1: நீதியை விதைத்து, கடவுளின் அன்புள்ள தயவை அறுவடை செய்யுங்கள் (w-TL02 7/15 பக். 28-31)
எண் 3: சில கிறிஸ்தவர்கள் ஏன் கிறிஸ்துவுடன் இருக்கும்படி பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்? (rs-TL பக். 316 பாரா. 3-6)
எண் 4: j ஏன் ஆபாசத்தை விட்டு விலகியோட வேண்டும்
செப். 27 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 33-36 பாட்டு எண் 100
பேச்சு பண்பு: திரும்பத் திரும்ப சொல்லுதல்—வெளி ஊழியத்தில், பேச்சுக்கள் கொடுக்கையில் (be-TL பக். 207 பாரா 1–பக். 208 பாரா 3)
எண் 1: உண்மையான புனிதர்கள் எவ்வாறு உங்களுக்கு உதவுவார்கள்? (w-TL02 9/15 பக். 4-7)
எண் 2: w-TL02 8/1 பக். 18-19 பாரா. 15-19
எண் 3:k‘பரவசமாதலில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா?’ (rs-TL பக். 316 பாரா 7–பக். 317 பாரா 1)
எண் 4: திகில் பிரியம்—ஏன் கூடாது?
அக். 4 பைபிள் வாசிப்பு: உபாகமம் 1-3 பாட்டு எண் 191
பேச்சு பண்பு: மையப்பொருளை விரிவாக்குதல் (be-TL பக். 209 பாரா. 1-3)
எண் 1: கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவில் ஆறுதல் (w-TL02 10/1 பக். 5-7)
எண் 3: சத்தியத்தை உங்கள் சொந்தமாக்குவது எதை அர்த்தப்படுத்துகிறது
எண் 4: முற்றிலும் புதிதாய் அறிமுகமாகும் ஆட்களையும் இடங்களையும் ஏற்கெனவே அறிந்து பழக்கப்பட்டிருப்பதுபோல் உணரும் ஒருவாறான உணர்ச்சி மறுபிறப்பு கோட்பாட்டை உண்மையென நிரூபிக்கிறதா? (rs-TL பக். 317 பாரா 2–பக். 318 பாரா 3)
அக். 11 பைபிள் வாசிப்பு: உபாகமம் 4-6 பாட்டு எண் 181
பேச்சு பண்பு: பொருத்தமான மையப்பொருளை பயன்படுத்துதல் (be-TL பக். 210 பாரா 1–பக். 211 பாரா 1; பக். 211, பெட்டி)
எண் 1: பொ.ச.மு. 537 முதல் பொ.ச.மு. 997 வரை பின்னோக்கி கணக்கிடுதல் (si-TL பக். 285 பாரா. 5-7)
எண் 3: யோவான் 9:1, 2-லுள்ள விவரப்பதிவு ஏன் மறுபிறப்பைக் குறித்துக் காட்டுகிறதில்லை? (rs-TL பக். 319 பாரா 1–பக். 320 பாரா 2)
எண் 4: “ஆவியின் சிந்தை”யில் என்ன உட்பட்டிருக்கிறது?
அக். 18 பைபிள் வாசிப்பு: உபாகமம் 7-10 பாட்டு எண் 78
பேச்சு பண்பு: முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுதல் (be-TL பக். 212 பாரா 1–பக். 213 பாரா 1)
எண் 1: பொ.ச.மு. 997 முதல் பொ.ச.மு. 2370 வரை பின்னோக்கி கணக்கிடுதல் (si-TL பக். 285-6 பாரா. 8-11)
எண் 2: w-TL02 8/15 பக். 15-16 பாரா. 3-6
எண் 3: மறுபிறப்புக்கும் பைபிள் முன்வைக்கும் நம்பிக்கைக்கும் எவ்வளவு வேறுபாடு உண்டு? (rs-TL பக். 320 பாரா. 3-4)
எண் 4: lவிசுவாசதுரோகிகளை யெகோவா எப்படி கருதுகிறார்
அக். 25 பைபிள் வாசிப்பு: உபாகமம் 11-13 பாட்டு எண் 57
பேச்சு பண்பு: அநேக முக்கிய குறிப்புகளை பயன்படுத்தாதீர்கள் (be-TL பக். 213 பாரா 2–பக். 214 பாரா 5)
வாய்மொழி மறுபார்வை
நவ. 1 பைபிள் வாசிப்பு: உபாகமம் 14-18 பாட்டு எண் 26
பேச்சு பண்பு: ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை (be-TL பக். 215 பாரா 1–பக். 216 பாரா 5)
எண் 1: பொ.ச.மு. 2370 முதல் பொ.ச.மு. 4026 வரை பின்னோக்கி கணக்கிடுதல் (si-TL பக். 286-7 பாரா. 12-15)
எண் 3: aஒருவர் இவ்வாறு சொன்னால்—‘மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ (rs-TL பக். 321 பாரா. 1-3)
எண் 4: கிறிஸ்தவர்கள் ஏன் தங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்க வேண்டும்
நவ. 8 பைபிள் வாசிப்பு: உபாகமம் 19-22 பாட்டு எண் 182
பேச்சு பண்பு: வெளி ஊழியத்தில் ஜனங்களின் கவனத்தை ஈர்ப்பது (be-TL பக். 217 பாரா 1-4)
எண் 1: இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கை (si-TL பக். 287 பாரா 16; பக். 291 பாரா 17)
எண் 3: இத்தனை பல மதங்கள் இருப்பதேன்? (rs-TL பக். 322 பாரா 1–பக். 323 பாரா 2)
எண் 4: மனச்சோர்வை சமாளிக்க பைபிள் உதாரணங்கள் நமக்கு எப்படி உதவும்?
நவ. 15 பைபிள் வாசிப்பு: உபாகமம் 23-27 பாட்டு எண் 162
பேச்சு பண்பு: அறிமுகத்தில் பேசும் பொருளை குறிப்பிடுதல் (be-TL பக். 217 பாரா 5–பக். 219 பாரா 3)
எண் 1: இயேசுவின் ஊழியத்தில் கால அம்சங்கள் (si-TL பக். 291 பாரா. 18-19)
எண் 3: கடவுளின் ஆதரவு உள்ளவர்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி
எண் 4: எல்லா மதங்களிலும் நல்லது இருக்கிறதென்பது உண்மையா? (rs-TL பக். 323 பாரா 3–பக். 324 பாரா 1)
நவ. 22 பைபிள் வாசிப்பு: உபாகமம் 28-31 பாட்டு எண் 32
பேச்சு பண்பு: திறம்பட்ட முடிவுரை (be-TL பக். 220 பாரா. 1-3)
எண் 1: அப்போஸ்தலர் காலங்களில் ஆண்டுகளைக் கணக்கிடுதல் (si-TL பக். 291-2 பாரா. 20-3)
எண் 3: ஒருவர் தன் பெற்றோரின் மதத்தை விட்டுவிடுவது சரியா? (rs-TL பக். 324 பாரா 2–பக். 325 பாரா 1)
எண் 4: கிறிஸ்தவர்கள் ஏன் அடக்கமாக இருக்க வேண்டும்
நவ. 29 பைபிள் வாசிப்பு: உபாகமம் 32-34 பாட்டு எண் 41
பேச்சு பண்பு: மனதில் வைக்க வேண்டிய குறிப்புகள் (be-TL பக். 221 பாரா. 1-5)
எண் 1: பவுலின் இரண்டாவது மிஷனரி பயணம் (si-TL பக். 292-3 பாரா. 24-5)
எண் 2: w-TL02 10/15 பக். 11 பாரா. 10-13
எண் 3: கடவுளின் பெயரை நாம் பரிசுத்தப்படுத்துவதற்கான வழிகள்
எண் 4: கலப்பு விசுவாசத்தைப் பற்றி பைபிளின் கருத்து என்ன? (rs-TL பக். 325 பாரா 2–பக். 326 பாரா 2)
டிச. 6 பைபிள் வாசிப்பு: யோசுவா 1–5 பாட்டு எண் 40
பேச்சு பண்பு: வெளி ஊழியத்தில் (be-TL பக். 221 பாரா 6–பக். 222 பாரா 6)
எண் 1: பவுலின் மூன்றாவது மிஷனரி பயணமும், கடைசியாக பொ.ச. 56-100 வரையுள்ள ஆண்டுகளும் (si-TL பக். 293 பாரா. 26-30)
எண் 3: ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மதத்தைச் சேர்ந்திருப்பது தேவையா? (rs-TL பக். 326 பாரா 3–பக். 327 பாரா 2)
எண் 4: கிறிஸ்மஸ், கிறிஸ்தவர்களுக்குரிய கொண்டாட்டமா?
டிச. 13 பைபிள் வாசிப்பு: யோசுவா 6-8 பாட்டு எண் 213
பேச்சு பண்பு: திருத்தமான தகவலை அளித்தல் (be-TL பக். 223 பாரா. 1-5)
எண் 1: மன்னிப்பு கேட்பது—சமரசமாவதற்கு திறவுகோல் (w-TL02 11/1 பக். 4-7)
எண் 3: ஏன் தொடர்ந்து வீட்டுக்கு வீடு பிரசங்கிக்க வேண்டும்?
எண் 4: தங்கள் அயலாரை நேசிப்பதே உண்மையில் முக்கியமானதா? (rs-TL பக். 327 பாரா 4)
டிச. 20 பைபிள் வாசிப்பு: யோசுவா 9-11 பாட்டு எண் 135
பேச்சு பண்பு: ‘உண்மை வசனத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்’ (be-TL பக். 224 பாரா. 1-4)
எண் 1: உங்கள் கைகளை திடப்படுத்திக் கொள்ளுங்கள் (w-TL02 12/1 பக். 30-1)
எண் 2: w-TL02 11/15 பக். 18-19 பாரா. 19-23
எண் 3: கடவுளுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பது உண்மையில் அவ்வளவு முக்கியமான காரியமா? (rs-TL பக். 327 பாரா 5–பக். 328 பாரா 1)
எண் 4: bசமாதானம் பண்ணுவது என்பதன் அர்த்தமென்ன
டிச. 27 பைபிள் வாசிப்பு: யோசுவா 12-15 பாட்டு எண் 210
பேச்சு பண்பு: தகவலின் திருத்தமான தன்மையை பரிசோதித்தல் (be-TL பக். 225 பாரா. 1-3)
வாய்மொழி மறுபார்வை
[அடிக்குறிப்புகள்]
a சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
b சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
c சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
d சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
e சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
f சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
g சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
h சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
i சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
j சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
k நேரம் அனுமதித்தால், உள்ளூர் பிராந்தியத்தின் தேவைகளை பூர்த்தி செய்கிற வண்ணம் விடாப்பிடியான கருத்துக்கள், ஆட்சேபணைகள் போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்பதை பேச்சில் குறிப்பிடலாம்.
l நேரம் அனுமதித்தால், உள்ளூர் பிராந்தியத்தின் தேவைகளை பூர்த்தி செய்கிற வண்ணம் விடாப்பிடியான கருத்துக்கள், ஆட்சேபணைகள் போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்பதை பேச்சில் குறிப்பிடலாம்.
a நேரம் அனுமதித்தால், உள்ளூர் பிராந்தியத்தின் தேவைகளை பூர்த்தி செய்கிற வண்ணம் விடாப்பிடியான கருத்துக்கள், ஆட்சேபணைகள் போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்பதை பேச்சில் குறிப்பிடலாம்.
b நேரம் அனுமதித்தால், உள்ளூர் பிராந்தியத்தின் தேவைகளை பூர்த்தி செய்கிற வண்ணம் விடாப்பிடியான கருத்துக்கள், ஆட்சேபணைகள் போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்பதை பேச்சில் குறிப்பிடலாம்.