ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
அக்டோபர் 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் அக்டோபர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) அக்டோபர் 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு தத்ரூபமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒரேவொரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே அளிப்பதாக அந்த நடிப்புகள் இருக்க வேண்டும். ஒரு நடிப்பு, பத்திரிகை மார்க்கத்தில் மறுசந்திப்பு செய்வதுபோல் இருக்கட்டும். “எமது அடுத்த இதழில்” என்ற பெட்டிக்கு கவனத்தைத் திருப்பி அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.—அக்டோபர் 1998 நம் ராஜ்ய ஊழியத்தில், பக். 8, பாரா. 7-8-ஐக் காண்க.
20 நிமி: ‘மகிழ்ச்சியோடே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்.’a (இந்த கலந்தாலோசிப்புக்கு அனைவரிடமும் ஜனவரி 2002 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையும், செப்டம்பர் 2003 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையும் இருக்க வேண்டும்.) பாரா 4-ஐக் கலந்தாலோசித்த பின்பு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் அறிவு புத்தகத்தையும் நவம்பர் மாதத்தில் நாம் அளிக்கப் போவதை சொல்லுங்கள். நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களில் ஒன்றை சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். (ஜனவரி 2002; செப்டம்பர் 2003) அந்தப் பிரசங்கத்தை பயிற்சி செய்து பார்ப்பதை நடித்துக் காட்டுங்கள். ஊழியத்திற்காக நன்கு தயாரித்து வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: பைபிள் படிப்புகளை நடத்துவது ஆசீர்வாதங்களை அளிக்கிறது. பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். பைபிள் படிப்பில் முன்னேற்றம் செய்தவர்களை பற்றி நம் பிரசுரங்களில் வெளிவந்த சில அனுபவங்களை சொல்லுங்கள். (w-TL00 3/1 பக். 6; yb98 பக். 55-60) அந்த அனுபவங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம், பைபிள் படிப்புகள் நடத்துவதிலிருந்து நாம் எப்படி பலனடைந்திருக்கிறோம் என்பதன் பேரில் சபையாரைக் குறிப்பு சொல்ல சொல்லுங்கள்.
பாட்டு 172, முடிவு ஜெபம்.
அக்டோபர் 20-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “பெருமளவு விதையுங்கள், ஆனால் விவேகத்தோடு.”b முக்கியமாக எப்படி சொல்வது உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருக்குமோ அதை வலியுறுத்துங்கள். இந்த வாரம் வெளி ஊழியத்திற்கான கூட்டத்தில் இந்த ஆலோசனைகளை மறுபார்வை செய்ய வேண்டும்.
25 நிமி: தோழர்களின் தொல்லையை தைரியமாய் சகித்தல். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு மூப்பரை அல்லது ஓர் உதவி ஊழியரை பேட்டி காணுங்கள். 2003, பிப்ரவரி 15, காவற்கோபுரம் பத்திரிகையிலிருந்து சில முக்கிய குறிப்புகளை சொல்லுங்கள். பள்ளியில் அந்த சகோதரர் என்ன பிரச்சினையை எதிர்ப்பட்டார்? (பக். 24 பாரா 3; பக். 25 பாரா. 4-5) மற்றவர்கள் அவரை தவறான விதத்தில் வழிநடத்தினார்களா? (பக். 26 பாரா. 4-6) பெரியவராக வளர்ந்த பின்பும் தொல்லையை எதிர்ப்படுகிறாரா? உள்ளூர் பழக்க வழக்கங்களுடன் இணங்கிப் போகாமலிருக்க அவருக்கு எது உதவியிருக்கிறது? முடிவாக, 1999, ஆகஸ்ட் 1, காவற்கோபுரம், பக்கங்கள் 24-5-ன் அடிப்படையிலான சுருக்கமான பேச்சில் ஆரோக்கியமான கூட்டுறவை வளர்த்துக்கொள்வதால் வரும் பலன்களை வலியுறுத்திக் காட்டுங்கள்.
பாட்டு 26, முடிவு ஜெபம்.
அக்டோபர் 27-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. அக்டோபர் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். அடுத்த வார ஊழியக் கூட்டத்துக்கு தயாரிக்கும் வகையில் கடந்த ஊழிய ஆண்டில் நடைபெற்ற விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சியில் எடுத்த குறிப்புகளை மறுபார்வை செய்து வரும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் அக்டோபர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) நவம்பர் 1 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒரேவொரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே அளிப்பதாக அந்த நடிப்புகள் இருக்க வேண்டும். ஒரு நடிப்பில், ‘எனக்கு அதில் அக்கறையில்லை’ என சொல்லி சம்பாஷணையை இடையில் நிறுத்துவோரை எப்படி கையாளுவது என்பதை நடித்துக் காட்டவும்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக். 16-ஐக் காண்க.
20 நிமி: ஆவியின் பட்டயத்தைப் பயன்படுத்துங்கள். (எபே. 6:17) ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 143-4-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல சொல்லுங்கள்: (1) கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் நாம் ஏன் பைபிளை பயன்படுத்துகிறோம்? (2) யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் நம்மைக் குறித்து என்ன சொல்கிறது? (3) இயேசு என்ன முன்மாதிரி வைத்தார், அவரை நாம் எப்படி பின்பற்றலாம்? (4) சபைக்குரிய பிராந்தியத்தில் பைபிள் கருத்துகளை அறிமுகப்படுத்துவதற்கான பலன்தரும் சில வழிகள் யாவை? (5) முடிந்தபோதெல்லாம் நேரடியாக பைபிளிலிருந்து வாசிப்பது ஏன் நல்லது? (6) பைபிளை நன்கு பயன்படுத்தும்படி மூப்பர்கள் மற்றவர்களை எப்படி உற்சாகப்படுத்தலாம்? பக்கம் 144-ல் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி பகுதியை பயன்படுத்தி நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்; அந்த நடிப்பில், திறம்பட்ட பிரஸ்தாபி ஒருவர் குறைந்தபட்சம் ஒரு வசனத்தையாவது பயன்படுத்தி கேள்விக்கு பதிலளிக்கிறார். சாட்சி கொடுக்கும் ஒவ்வொரு சமயமும் பைபிளை உபயோகிப்பதை தங்கள் இலக்காக வைக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
13 நிமி: சபையாரின் அனுபவங்கள். மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டபோதோ வேலை செய்யும் இடத்தில், பள்ளியில் அல்லது வேறெங்காவது சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோதோ மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெற்றிருந்தால் அவற்றை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 52, முடிவு ஜெபம்.
நவம்பர் 3-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
25 நிமி: நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக இருங்கள். (1 தீ. 6:18) கடந்த ஊழிய ஆண்டில் நடைபெற்ற விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்தி சபையாருடன் மூப்பர் நடத்தும் கலந்தாலோசிப்பு. கற்றுக்கொண்டதை தங்களால் எப்படி பின்பற்ற முடிந்திருக்கிறது என சபையாரை சொல்ல சொல்லுங்கள். (சில பகுதிகளை முன்னதாகவே நியமிக்கலாம்.) பின்வரும் நிகழ்ச்சிநிரல் பகுதிகளை சிறப்பித்துக் காட்டுங்கள்: (1) “நற்கிரியைகள் அதிக நன்மை அளிக்கின்றன.” (பிர. 2:11) இந்த உலகத்தின் பயனற்ற கிரியைகளை விட்டுவிட்டு கடவுளுடைய வார்த்தையில் விவரிக்கப்பட்டுள்ள நற்கிரியைகளைச் செய்யும்படி கடவுளுடைய ஊழியர்கள் ஏன் நாடுகிறார்கள்? (2) “கடவுளுடைய கண்ணோட்டத்தில் ஐசுவரியவான்களாக இருங்கள்.” (மத். 6:20) சிலர் எப்படி ‘பரலோகத்திலே பொக்கிஷங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள்,’ என்ன பலன்களுடன்? (3) “ஒரு பைபிள் படிப்பு நடத்தி உங்கள் ஊழியத்திற்கு வளமூட்டுங்கள்.” (om-TL பக். 91) பைபிள் படிப்பை ஆரம்பிக்கவும், நடத்தவும் எது நமக்கு உதவலாம்? (4) “இந்த அறுவடை காலத்தில் நற்கிரியைகள்.” (மத். 13:37-39) நற்கிரியைகள் செய்வதில் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் என்ன முன்மாதிரி வைத்தார்கள், நம் நாட்களில் ராஜ்ய வேலை எப்படி விரிவடைந்துள்ளது? (5) “உங்கள் நற்கிரியைகள் யெகோவாவை மகிமைப்படுத்துவதாக.” (மத். 5:14-16) சிலர் எப்படி ‘தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்க செய்திருக்கிறார்கள்’? (6) “யெகோவாவை துதிப்பதில் நற்கிரியைகள் செய்வதற்காக இளைஞரை பாராட்டுதல்.” (சங். 148:12, 13) நம் வட்டாரத்திலுள்ள கிறிஸ்தவ இளைஞர்கள் எப்படி யெகோவாவுக்குத் துதி செலுத்துகிறார்கள்? (7) “தொடர்ந்து நற்கிரியைகள் செய்து யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.” (நீதி. 10:22) நற்கிரியைகள் செய்வதில் தொடர்ந்து சுறுசுறுப்பாக ஈடுபடுகையில் தனிப்பட்டவர்களாக, குடும்பமாக, சபையாக, உலகளாவிய அமைப்பாக என்ன பலன்களை நம்மால் அறுவடை செய்ய முடியும்?
பாட்டு 180, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.