ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
குறிப்பு: மாவட்ட மாநாடு நடைபெறும் மாதங்களின்போது, ஒவ்வொரு வாரத்திற்குமுரிய ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்படும். “தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாட்டுக்குச் செல்வதற்கு வசதியாக தேவையான மாற்றங்களை சபைகள் செய்துகொள்ளலாம். பொருத்தமாயிருந்தால், இந்த மாத உட்சேர்க்கையிலுள்ள, உள்ளூருக்குப் பொருந்துகிற குறிப்பிட்ட ஆலோசனையை மாநாட்டுக்குச் செல்வதற்கு முந்தின வார ஊழியக் கூட்டத்தில் மறுபடியும் கலந்தாலோசிக்க 15 நிமிடத்தை ஒதுக்குங்கள். ஜனவரி மாதத்தில், மாநாட்டு நிகழ்ச்சியின் சிறப்புக் குறிப்புகளை மறுபார்வை செய்ய ஊழியக் கூட்ட அட்டவணையில் ஒரு வாரம் ஒதுக்கப்படும். அந்தக் கலந்தாலோசிப்புக்கு தயாரிக்கும் வகையில், நாம் எல்லாருமே மாநாட்டின் முக்கிய குறிப்புகளை எழுதிக்கொள்ளலாம்; அவற்றில், நம் சொந்த வாழ்க்கையிலும் வெளி ஊழியத்திலும் பின்பற்ற விரும்பும் திட்டவட்டமான குறிப்புகளையும் எழுதிக்கொள்ளலாம். அப்போதுதான், மாநாட்டில் கலந்துகொண்டது முதற்கொண்டு அந்த ஆலோசனைகளை எப்படியெல்லாம் பின்பற்றியிருக்கிறோம் என நம்மால் சொல்ல முடியும்; அவ்வாறு சொல்வதன் மூலம் நாம் மற்றவர்களுக்கும் உற்சாகம் அளிக்கலாம்.
ஜூலை 14-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் ஜூலை 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) ஜூலை 15 காவற்கோபுரத்தையும் உங்கள் சபையின் பிராந்தியத்திற்கு தகுந்தாற்போல் அளிப்பதைக் காட்டும் இரண்டு எதார்த்தமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு நடிப்பிலும் ஒரு பத்திரிகையை மட்டும் சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுங்கள்.
15 நிமி: “யெகோவாவை துதிப்பதற்காக ஒன்றுகூடி வருதல்.”a கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைக் கேளுங்கள். முதல் நாள் காலையிலிருந்து மூன்றாம் நாள் பிற்பகல் வரை, நிகழ்ச்சியின் எந்தப் பகுதியையும் தவறவிடாதபடி முழுவதிலும் ஆஜராகியிருக்க அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். ஒரு காதில் கேட்டு மறு காதில் விட்டுவிடாமல், கேட்டதைப் பின்பற்ற வேண்டிய தேவையை வலியுறுத்துங்கள். ஜனவரியில் ஓர் ஊழியக் கூட்ட வாரத்தில் மாவட்ட மாநாட்டின் சிறப்பு குறிப்புகளை மறுபார்வை செய்வது பற்றி மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பைக் கலந்தாலோசியுங்கள். அனைவரையும் குறிப்பெடுக்க உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “கடவுளின் இரக்கத்திற்கு நன்றி தெரிவித்தல்.”b மூன்றாவது பாராவை கலந்தாலோசிக்கையில், அக்டோபர் 1998, நம் ராஜ்ய ஊழியம் இதழில் பக்கம் 8-ன் அடிப்படையில், பத்திரிகை மார்க்கத்தை ஆரம்பிப்பதற்கு ஆலோசனைகள் அளியுங்கள். எந்த முறையைப் பயன்படுத்தி பைபிள் படிப்புகளை ஆரம்பித்து பலன் கண்டிருக்கின்றனர் என்பதை ஓரிரு திறம்பட்ட பிரஸ்தாபிகளை கேளுங்கள். பைபிள் படிப்பை தொடங்கி, அதை தொடர்ந்து நடத்தும் குறிக்கோளை வைக்குமாறு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.—om-TL பக். 90-1.
பாட்டு 176, முடிவு ஜெபம்.
ஜூலை 21-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: “நற்செயல்களை செய்வதில் முன்மாதிரி வையுங்கள்.”c கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை பயன்படுத்துங்கள். அறை வசதி சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் நம் நன்மைக்கானவையே. அவற்றை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள். மாநாடு முழுவதிலும் சுத்தத்தைக் காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை அனைவரும் மதித்துணர உதவுங்கள். ஒவ்வொருவரும் நன்னடத்தையை காத்துக்கொள்வதன் அவசியத்தையும் விளக்குங்கள்.
20 நிமி: பிரசங்கிப்பதில் அவர்களுடைய தைரியத்தை பின்பற்றுங்கள். கடவுளை வணங்குங்கள் புத்தகத்தில் பக்கங்கள் 170-1-ல் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைப் பயன்படுத்தி பாரா 7-க்கான கேள்விகளுக்கு சபையாரை பதிலளிக்க சொல்லுங்கள். சில வசனங்களை தெரிந்தெடுத்து வாசியுங்கள். இந்த பதிவுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களையும், நமது பிரசங்க நியமிப்பைப் பற்றி சரியான நோக்குநிலையுடன் இருக்க இந்த விவரம் நமக்கு எவ்வாறு உதவும் என்பதையும் வலியுறுத்துங்கள்.
பாட்டு 201, முடிவு ஜெபம்.
ஜூலை 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜூலை மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவூட்டுங்கள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் ஜூலை 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) ஆகஸ்ட் 1 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு தனித்தனி நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டிலும் ஒரு பத்திரிகையை மட்டும் சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுங்கள். இவற்றில் ஒரு நடிப்பு, பிரஸ்தாபி சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது போல இருக்கட்டும்.
15 நிமி: “தகுந்த உடை தேவபக்தியை காட்டுகிறது.”d மூப்பர் கையாளும் பகுதி. கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை கேளுங்கள். பாராக்களை சத்தமாக வாசிப்பதற்கென சரளமாக வாசிக்கும் ஒரு சகோதரரை ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “தொகுதியோடு சேர்ந்து சாட்சி கொடுப்பது மகிழ்ச்சி தருகிறது.”e 3-வது பாராவை கலந்தாலோசிக்கையில், செப்டம்பர் 2001, நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ள கேள்விப் பெட்டியில் இருக்கும் விஷயங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். சபை புத்தகப் படிப்பு கண்காணி ஒருவரை சுருக்கமாக பேட்டி காணுங்கள். தனது புத்தகப் படிப்பு தொகுதிக்காக அவர் செய்திருக்கும் வெளி ஊழிய ஏற்பாடுகளையும், தொகுதியோடு சேர்ந்து சாட்சி கொடுப்பதிலிருந்து தனது தொகுதி அடைந்திருக்கும் பயன்களையும் பற்றி சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 36, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 4-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த மாத பிரசுர அளிப்பைப் பற்றி குறிப்பிடுங்கள். ஓரிரு பிரசுரங்களை அளிப்பதை சுருக்கமாக நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “பல மொழி பிராந்தியத்தில் பிரசுரங்களை அளித்தல்.”f கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை கேளுங்கள். 3-வது பாராவை கலந்தாலோசிக்கையில், சபையின் பிராந்தியத்தில் பேசப்படும் வேறொரு மொழியில், அதாவது சபை இல்லாத மொழியில் எளியதோர் பிரசங்கத்தை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “ஊனம்—ஆயினும் பலன் தரலாம்.”g ஆகஸ்ட் 22, 1990, ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 22-3-ல் உள்ள, “என்ன செய்யப்படலாம்?” என்ற உபதலைப்பின்கீழ் மற்றவர்கள் எப்படி உதவலாம் என்ற குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 49, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
f ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
g ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.