ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மே 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 4-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் மே 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) மே 15 காவற்கோபுரத்தையும் அளிப்பது போல் இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். இரண்டிலும் ஒரு பத்திரிகையை மட்டும் சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுங்கள். நன்கொடை ஏற்பாட்டைப் பற்றியும் வீட்டுக்காரரிடம் சொல்லுங்கள்.
20 நிமி: பெற்றோர்களே—உங்கள் பிள்ளைகள் முன்னேற உதவுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில், பக்கங்கள் 9-12, 21-38-லிருந்து பேச்சு. ஊழியத்தில் முன்னேற பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என்ற இலக்கோடு, இந்தப் புத்தகத்திலிருந்து சில குறிப்புகளை குடும்பப் படிப்பில் பயன்படுத்தும்படி பெற்றோர்களை உற்சாகப்படுத்துங்கள். பிள்ளைகளின் திறமைகளை வளர்க்க எந்தெந்த குறிப்புகளை பயன்படுத்தலாம் என சுட்டிக்காட்டுங்கள்.
15 நிமி: “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ள நற்செய்தி.”a தங்களுடைய சூழ்நிலைகளை சரி செய்ததால் எவ்வாறு ஊழியத்தில் அதிகமாக பங்கெடுக்க முடிந்தது என்பதை சுருக்கமாக கூறும்படி ஓரிரண்டு பிரஸ்தாபிகளிடம் முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.
பாட்டு 46, முடிவு ஜெபம்.
மே 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “சந்தர்ப்ப சாட்சி கொடுத்து யெகோவாவை துதியுங்கள்.” பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். பாரா 3-ஐக் கலந்தாலோசிக்கும்போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சந்தர்ப்பங்களில் பைபிளைப் பற்றி எவ்வாறு பேச ஆரம்பிக்கலாம் என சபையாரைக் கேளுங்கள்: (1) கடைகளில் வரிசையில் நிற்கும்போது. (2) பொது வாகனங்களில் பயணம் செய்யும்போது. (3) தன்னுடைய காம்பவுண்டில் வேலை செய்துகொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசும்போது. (4) உங்களுடன் வேலை செய்பவரிடம். (5) பள்ளியில் சக மாணவரிடம். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் வெற்றி கண்ட பிரஸ்தாபி ஒருவருடைய அனுபவத்தை சொல்லும்படி முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 135, முடிவு ஜெபம்.
மே 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். மே மாதத்திற்கான ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 4-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் மே 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) ஜூன் 1 காவற்கோபுரத்தையும் அளிப்பது போல் இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். இரண்டிலும் ஒரு பத்திரிகையை மட்டும் சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுங்கள். பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை பத்திரிகைகளை ஏற்றுக்கொள்ளாத வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டு வருவதைப் போன்ற ஒரு நடிப்பை ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. பேச்சு. பிப்ரவரி 2001 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 6, பாராக்கள் 12-15-ல், தொலைபேசியில் சாட்சி கொடுப்பதற்கான ஆலோசனைகளை அல்லது உள்ளூர் பிராந்தியத்துக்கு பொருந்தும் வேறு சில ஆலோசனைகளை சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள்.
25 நிமி: “கடவுளுடைய வார்த்தையே சத்தியம்.”b கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை பயன்படுத்துங்கள். தங்களுடைய கேள்விகளுக்கு பிரஸ்தாபிகள் பைபிளிலிருந்து பதிலளித்தது, சத்தியத்தைக் கற்றுக்கொள்ள எப்படி தங்களுக்கு உதவியது என சொல்லும்படி சபையாரை கேளுங்கள். பாரா 4-ஐ சிந்திக்கும்போது, “கடவுளுடைய வார்த்தையை நிதானமாய்ப் பகுத்துப் போதியுங்கள்” என்ற கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் சிலவற்றைப் பயன்படுத்தி ஒரு திறமையான பிரஸ்தாபி முதல் சந்திப்பில் பைபிளை உபயோகிக்கும் விதத்தை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.—km-TL 12/01 பக். 1, பாரா. 3-4.
பாட்டு 188, முடிவு ஜெபம்.
ஜூன் 2-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் அறிவு புத்தகத்தையும் எவ்வாறு அளிப்பது என ஜனவரி 2002, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள ஓரிரண்டு ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள்.
20 நிமி: மதிப்புமிக்க விவாகம்—கடவுளின் எதிர்பார்ப்பு. பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது பல நாடுகளில் சர்வசாதாரணம். இது நடைமுறையில் பயனுள்ளது என சிலர் கூறுகின்றனர். ஆனால் திருமணத்தை கடவுள் தொடங்கி வைத்தார் என்பதை வலியுறுத்தி பைபிளின் கருத்தை சிறப்பித்துக் காட்டுங்கள். (rs-TL பக். 248-9) திருமணம் செய்யாமலே ஒன்றாக சேர்ந்து வாழ்வது வேசித்தனத்திற்கு சமம். (fy-TL பக். 17) அதேசமயம், அநேகர் நினைப்பதற்கு நேரெதிராக, திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது திருமணம் நிலைத்திருப்பதற்கான வாய்ப்பைக் குறைப்பதாகவே ஆய்வுகள் காட்டுகின்றன. (g-TL02 4/8 பக். 28; g92 9/8 பக். 28; g91 5/8 பக். 28) யெகோவாவின் தராதரங்களுக்கு கீழ்ப்படிவதன் மூலம் கிறிஸ்தவர்கள் அவரை கனப்படுத்துகிறார்கள். அதன் மூலம் அவர்களும் நன்மையடைகிறார்கள்.—ஏசா. 48:17, 18.
15 நிமி: நீங்கள் எவ்வாறு பயனடைகிறீர்கள்? பள்ளி கண்காணி சபையாருடன் கலந்தாலோசிக்கிறார். ஜனவரி மாதம் முதற்கொண்டு தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியின் புதிய அம்சங்கள் சிலவற்றை சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். இதுவரை அடைந்த பயன்களைக் கூறுங்கள். பள்ளியில் புதிய மாணாக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா? பள்ளியில் அனைவரும் அதிக ஆர்வத்துடன் பங்கு கொள்கிறார்களா? இந்தப் புதிய முறையில் கொடுக்கப்படும் ஆலோசனைகளிலிருந்து மாணாக்கர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள்? இதுவரை தனிப்பட்ட விதமாக இந்த ஏற்பாட்டிலிருந்து எவ்வாறு பயனடைந்திருக்கிறார்கள் என்றும் எதிர்காலத்திலும் இது அவர்களுக்கு எப்படி உதவும் என நினைக்கிறார்கள் என்றும் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 225, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.