ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மார்ச் 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் மார்ச் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) மார்ச் 15 காவற்கோபுரத்தையும் பயன்படுத்தி இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். இரண்டிலும் ஒரு பத்திரிகையை மட்டும் சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுங்கள்.
15 நிமி: 2003 இயர்புக்கிலிருந்து நன்மையடைதல். பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். இந்த இதழின் விசேஷ உட்சேர்க்கையில் “ஆளும் குழுவிடமிருந்து கடிதம்” என்ற பகுதியிலுள்ள முக்கிய குறிப்புகளை கலந்தாலோசியுங்கள். பின்பு, இயர்புக்கில் விசேஷமாக உற்சாகமூட்டிய, விசுவாசத்தைப் பலப்படுத்திய அறிக்கைகளையும் அனுபவங்களையும் பற்றி குறிப்புகள் சொல்லும்படி சில பிரஸ்தாபிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். உலகளாவிய அறிக்கையின் முக்கிய குறிப்புகளை சொல்லுங்கள். இந்த வருடம் இயர்புக்கை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடிக்கும்படி குடும்பங்களை உற்சாகப்படுத்துங்கள். புதியவர்களை யெகோவாவின் அமைப்பிடம் வழிநடத்தவும் கூட்டங்களுக்கு வரும்படி அவர்களை உற்சாகப்படுத்தவும் இந்தப் புத்தகத்தை பயன்படுத்த ஆலோசனை வழங்குங்கள்.
20 நிமி: “நன்மை செய்வதில் வைராக்கியம் காட்டுங்கள்!”a (பாராக்கள் 1-12) பாரா 6-ஐ கலந்தாலோசித்த பிறகு நினைவு ஆசரிப்பிற்கான அழைப்பிதழை உறவினர், அக்கம்பக்கத்தார், பள்ளி சகாக்கள் அல்லது உடன் வேலை செய்பவர் ஒருவரிடம் கொடுத்து நினைவு ஆசரிப்பிற்கு அழைப்பதுபோல ஒரு பிரஸ்தாபி சுருக்கமாக நடித்துக் காட்டுகிறார். நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்களை சபையிலுள்ள அனைவருக்கும் இதுவரை கொடுக்கவில்லை என்றால், இந்த கூட்டம் முடிந்ததும் விநியோகிக்க வேண்டும்.
பாட்டு 19, முடிவு ஜெபம்.
மார்ச் 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: உங்கள் தோழர்களை ஞானமாக தேர்ந்தெடுங்கள். பிப்ரவரி 22, 1997, விழித்தெழு! பக்கம் 13-ன் அடிப்படையிலும் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 189-ல் “துர்ச்சகவாசங்கள்” என்ற தலைப்பின் கீழுள்ள தகவலை பயன்படுத்தியும் மூப்பர் கொடுக்கும் பேச்சு. இளைஞர்கள், முதியவர்கள் இருவருக்குமே இந்த நியமங்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை விளக்குங்கள். யெகோவாவை நேசிப்பவர்களையும் அவருடைய கட்டளைகளை கடைப்பிடிக்க முயற்சி செய்பவர்களையும் நண்பர்களாக தேர்ந்தெடுப்பதால் வரும் நன்மைகளை சிறப்பித்து காட்டுங்கள்.
20 நிமி: “நன்மை செய்வதில் வைராக்கியம் காட்டுங்கள்!” b (பாரா. 13-26) நடத்தும் கண்காணியால் கையாளப்படும். பாரா 14-ஐ கலந்தாலோசிக்கும் போது ஒரு மூப்பர் உடல்நிலை சரியில்லாத சகோதரர் ஒருவரை சந்தித்து, நினைவு ஆசரிப்பின் சமயத்தில் சபை ஏற்பாடு செய்யும் விசேஷ ஊழியத்தில் அந்த சகோதரர் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்பதை அன்புடன் விளக்குவதை சுருக்கமாக நடித்துக் காட்டுகிறார்.
பாட்டு 53, முடிவு ஜெபம்.
மார்ச் 24-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனையை பயன்படுத்தி மார்ச் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) ஏப்ரல் 1 காவற்கோபுரத்தையும் எவ்வாறு அளிக்கலாம் என நடித்துக் காட்டுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: யெகோவாவின் சாட்சிகள்—பயனளிக்கும் விதத்தில் சமுதாயத்தின்மீது செல்வாக்கு செலுத்துவோர். பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். நம்முடைய ஊழியமும் முன்மாதிரியும் சமுதாயத்திற்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பதை சுட்டிக்காட்ட அவ்வப்போது நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பின்வரும் குறிப்புகளுக்கு பதிலளிக்கும்படி சபையாரிடம் கேளுங்கள்: (1) பைபிளின் ஒழுக்க தராதரங்களின்படி வாழ மக்களுக்கு போதிக்கிறோம். (2) நேர்மையாக வாழவும் அதிகாரங்களுக்கு கீழ்ப்படியவும் போதிக்கிறோம். (3) இனம், தேசம் மற்றும் சமுதாய தொகுதிகள் மத்தியில் ஒற்றுமையை போதிக்கிறோம். (4) பைபிள் நியமங்களை பின்பற்றும்படி உற்சாகப்படுத்துவதன் மூலம் குடும்ப வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறோம். (5) ஆயிரக்கணக்கானவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்திருக்கிறோம். (6) பெரும் சேதங்கள் ஏற்படுகையில் மற்றவர்களுக்கு உதவ முயற்சி செய்திருக்கிறோம். (7) எல்லாரும் அனுபவிக்கும் மத சுதந்திரத்தை பெற்று தருவதில் நாம் ஒரு முக்கிய பாகத்தை வகிக்கிறோம்.—அறிவிப்பாளர் (ஆங்கிலம்) புத்தகம், பக்கம் 699-ஐப் பாருங்கள்.
பாட்டு 121, முடிவு ஜெபம்.
மார்ச் 31-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாதத்திற்கான ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். ஏப்ரல் மாதத்திற்கான பிரசுர அளிப்பை குறிப்பிடுங்கள். “பைபிள் படிப்புகளை நடத்த கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை பயன்படுத்துங்கள்” என்ற பகுதியை மறுபார்வை செய்யுங்கள். “நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” என்ற பகுதியிலுள்ள முக்கிய குறிப்புகளை கலந்தாலோசியுங்கள்.
13 நிமி: உள்ளூர் அனுபவங்கள். மார்ச் மாதம் சபையில் ஏற்பாடு செய்த விசேஷ ஊழியத்தில் பங்கு கொண்டதால் பெற்ற அனுபவங்களை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். அவர்கள் எடுத்த முயற்சிகளை பாராட்டுங்கள், ஏப்ரல் மாதம் தங்களுடைய சூழ்நிலைகள் அனுமதிப்பதற்கு ஏற்ப ஊழியத்தில் பங்கு கொள்ளும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “யெகோவா மிகவும் புகழப்படத்தக்கவர்.”c நினைவு ஆசரிப்பின் முக்கியத்துவத்தை சிறப்பித்துக் காட்டுங்கள். மற்றவர்களும் ஆஜராவதற்கு நாம் அனைவருமே எவ்வாறு உதவி செய்யலாம் என்பதை விளக்குங்கள். செயலற்ற பிரஸ்தாபிகளை சந்தித்து அவர்களுடைய ஆர்வத்தை மறுபடியும் தூண்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். கடந்த வருடம் நினைவு ஆசரிப்பின்போது கிடைத்த உற்சாகமூட்டும் அனுபவங்கள் இருந்தால் அவற்றை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 173, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: வேதவசனங்களிலிருந்து எவ்வாறு நியாயங்காட்டுவது. சபையார் கலந்தாலோசிப்பு. ஊழியத்தில் சந்திப்போரிடம் சரியாக நியாயங்காட்டிப் பேசும் திறமையை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? (1) தனிப்பட்ட படிப்பையும் கூட்டங்களுக்கு ஆஜராவதையும் தவறாமல் செய்வதன் மூலம் வேதாகமத்திலிருந்து திருத்தமான அறிவை பெறுங்கள். (2) கற்றுக் கொண்ட விஷயங்களை தியானியுங்கள், சத்தியத்தை வித்தியாசப்பட்ட கோணத்திலிருந்து ஆராயுங்கள். (3) வசனத்தின் விளக்கத்தை மட்டும் தேடாமல் அதன் வேதப்பூர்வ காரணங்களையும் ஆராயுங்கள். (4) வசனங்களை வித்தியாசப்பட்ட மக்களுக்கு எவ்வாறு புரிய வைப்பீர்கள் என்பதையும் சிந்தியுங்கள். (5) சில குறிப்புகளை எவ்வாறு உதாரணத்தோடு விளக்குவீர்கள் என்பதை பற்றி யோசித்துப் பாருங்கள்.
20 நிமி: “சத்தியம் நம்மை எப்படி விடுதலையாக்கும்.”d அக்டோபர் 1, 1998, காவற்கோபுரம் பக்கம் 6-லுள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்கள் எவ்வாறு அவர்களுக்கு விடுதலை அளித்தன என்று சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 217, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.